Published:Updated:

``அடல்ட் காமெடி வேற... இது வேற... புரிஞ்சுக்கோங்க ப்ளீஸ்!' - `இருட்டு அறையில் முரட்டு குத்து' இயக்குநர்

``அடல்ட் காமெடி வேற... இது வேற... புரிஞ்சுக்கோங்க ப்ளீஸ்!' - `இருட்டு அறையில் முரட்டு குத்து' இயக்குநர்
``அடல்ட் காமெடி வேற... இது வேற... புரிஞ்சுக்கோங்க ப்ளீஸ்!' - `இருட்டு அறையில் முரட்டு குத்து' இயக்குநர்


கௌதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடிப்பில் வெளிவந்த 'ஹர ஹர மகா தேவகி' படம் மூலம்  இயக்குநராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் சந்தோஷ் பி.ஜெயக்குமார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து  கௌதம் கார்த்திக், சந்தோஷ்  இணையும் திரைப்படம். 'இருட்டு அறையில் முரட்டு குத்து' அப்படத்தை முடிக்கும் முன்னரே ஆர்யா, சாயிஷா நடிக்கும் 'கஜினிகாந்த்' படத்தையும் இயக்கி வருகிறார். ஒரே சமயத்தில் இரண்டு படங்கள் இயக்குவது பற்றியும், ஆர்யா, கௌதம் கார்த்திக் என இரு நாயகர்களுடனான நட்பைப் பற்றியும் இயக்குநர் சந்தோஷிடம் கேட்டறிந்தோம்.

'இருட்டு அறையில் முரட்டு குத்து' படமும் அடல்ட் காமெடி படமா? டைட்டிலே ஒரு பயங்கரமா இருக்கே பாஸ்? 

" 'இருட்டு அறையில் முரட்டு குத்து' அடல்ட் ஹாரர் காமெடி படம். நீங்க நினைக்குறமாதிரி பயங்கரமான படம் இல்லை. பயங்கர காமெடியான படம். படத்துல கௌதம் கார்த்திக், கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், வைபவி சாண்டில்யா, சந்திரிகா ரவி, யாஷிக்கா ஆனந்த் ஆகிய மூன்று பேர் கதநாயகிகளாக நடித்துள்ளனர். போன படத்துல கதைக்காக விஷயங்களும், காமெடியும் கம்மியாக இருக்குன்னு சொன்னாங்க. இந்தப் படத்துல மெசேஜ் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கும். எல்லோரையும் திருப்தி படுத்துவேன்னு நினைக்குறேன்."

தொடர்ந்து அடல்ட் காமெடி படங்கள் எடுப்பதன் காரணம் என்ன?

"அப்படியெல்லாம் திட்டமிட்டு பண்ணலை. முதல் கதை அப்படி அமைஞ்சது. அந்தப்படம் மூலமா நல்ல ரீச் கிடைச்சது. அதைத் தொடர்ந்து அதே டீம் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம்னு முடிவு செஞ்சோம். அதுதான், 'இருட்டு அறையில் முரட்டு குத்து'. அதனால, இது தொடர்ச்சியாக நடக்கிறது இல்ல. எனது அடுத்த படம் ஆர்யாவுடன் 'கஜினிகாந்த்'. அந்தப் படத்திற்கும் எனது இந்த இரண்டு  படங்களுக்கும் சம்பந்தமே இருக்காது. அதேமாதிரி அடல்ட் காமெடி என்பது வேறு, செக்ஸ் காமெடி என்பது வேறு. இங்கே இரண்டையும் குழப்பிக்கிறாங்க. காலேஜ்ல, வேலை செய்யிற இடத்துல எப்படியெல்லாம் பேசிக்கிறோமோ, அதுதான் அடல்ட் காமெடி. இதில் முகம் சுழிக்கிறமாதிரி இருக்காது."

ஆர்யாவுடன் இணைந்திருக்கும் 'கஜினிகாந்த்' திரைப்படத்தைப் பற்றிச் சொல்லுங்கள்...

'கஜினிகாந்த்' காமெடி என்டர்டெயினர் படம். காதல், ரொமான்ஸ், ஆக்‌ஷன், சென்டிமென்ட், காமெடினு எல்லாமும் இருக்கும். நடிகர் நானி நடிச்சு தெலுங்கில் வெளியாகி ஹிட்டான 'பலே பலே மஹாடிவோய்' படத்தின் ரீமேக்தான் இந்தப் படம். படத்துல ஆர்யா, அவருக்கு ஜோடியாக சாயிஷா, கருணாகரன், சதிஷ், மொட்டை ராஜேந்திரன் முக்கிய கேரக்டர்ல நடிச்சிருக்காங்க. ரீமேக் அப்படீங்கிறதால தமிழ் ஆடியன்ஸுக்கு ஏத்தமாதிரி நிறையா மாத்தியிருக்கோம். 

ரொமான்ஸ், காமெடின்னு மீண்டும் ஆர்யாவை ஹிட் அடித்த ஜானரா இருக்கே. அவருடன் வேலை செய்கிற அனுபவம் எப்படி இருக்கு?

ஆர்யாவிற்கு 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படம் எப்படி இருந்ததோ அதுபோல இந்தப்படமும் மக்கள்கிட்ட ரீச் ஆகும். ஆர்யா செம ஃப்ரெண்ட்லிடான ஆள். நாம எப்போதுமே பார்க்குற மாதிரி ஜாலியான, லைவ்லியான ஆள். ஒரு டைரக்டருக்கு என்ன வேணுமோ அதை பண்ணக்கூடிய ஆர்டிஸ்ட். 'கஜினிகாந்த்' படத்துல வர்ற ஹீரோ ரோலுக்கு செமயா செட் ஆகிட்டார். ஏன்... முகத்தைப் பார்த்தே ஷாட் நல்லா இல்லைனு புரிஞ்சுக்கிட்டு 'ஒன்ஸ்மோர் போலாம் மச்சான்'னு ரெடியாகிடுவார். கௌதம் கார்த்திக்கூட ஒரு படம் வொர்க் பண்ணிட்டோம்... அந்த மியூச்சுவல் அன்டர்ஸ்டாண்டிங் எங்களுக்குள்ள இருக்கும். ஆனா ஆர்யாகூட அதே லெவல் நட்பு கிடைச்சது ஷூட்டிங்கில் எனக்கு செம ஈஸியா இருந்துச்சு. 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தில் ஆர்யா ஒரு பாட்டுக்கு கௌதம்கூட சேர்ந்து டான்ஸ் ஆடியிருக்கார்."

தமிழ்ல நிறைய ஹாரர் படங்கள் வந்திருக்கு 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தில் புதுசான விஷயம்னு என்ன இருக்கு ?

வழக்கமான ஹாரர் படங்களைப் பொறுத்தவரை ஒரு பேய் இருக்கும், அது வீட்டிற்குள் இருக்கும் கும்பலைப் பழி வாங்கும். அந்த பேய்க்குனு ஒரு அழுகுற மாதிரி ஃப்ளாஷ்பேக் இருக்கும். ஆனா, இந்தப் படத்தில் பேய்க்கு அப்படி ஒரு அழுகாச்சி ஃப்ளாஷ்பேக் கிடையாது. ஒரு விர்ஜின் பெண் பேய். இளவட்ட ஆண்களைக் கண்டால் விடாது. அப்படி மாட்டிக்கொள்ளும் கும்பல்தான் கௌதம் கார்த்திக் அண்ட்  கோ. இவர்களில் யார் அந்த விர்ஜின் பேயின் ஆசையை நிறைவேத்துறாங்க... இதுதான் கதை. மொத்த விஷயமுமே தாய்லாந்தில் நடைபெறுகிறது. இந்தக் கதையை நம்ம ஊர்களில் சொல்லக்கேட்ருப்போம். அதை ஒரு ஹாலிவுட் ஸ்டைல்ல எடுத்திருக்கோம். தமிழில் ஹாரர் காமெடி படங்கள், ஏன் அடல்ட் ஹாரர் படங்கள்கூட நிறைய உண்டு. இரண்டையும் கரெக்டா மிக்ஸ் பண்ணின கலவை இந்தப்படம்.   

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் வேலை செய்வது கஷ்டமாக இல்லையா?

கொஞ்சம் கஷ்டம்தான். என்னோட டீம்தான் எனக்கு முழு சப்போர்ட் கொடுத்தாங்க. எல்லாரும் ரீமேக் படம்னால, ஈஸியா  எடுக்கிறார்னுகூட நினைக்குறாங்க. உண்மையில் ரீமேக் படம் இயக்குவதுதான் கஷ்டம். எனக்கு 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படம்தான் எடுக்க சுலபமா இருந்துச்சு. அதனாலேயே 23 நாள்களில் மொத்தப் படத்தையும் முடிப்பதற்கு முடிவுசெய்து இன்னும் எட்டு நாள்களுக்கான படப்பிடிப்புதான் மீதம் உள்ளது. 'கஜினிகாந்த்' படம் ரீமேக் என்பதாலேயே ஒவ்வொரு சீனும் ஒரிஜினல் போலவே எமோஷனும், மேக்கிங்கும் இருக்கணும்னு பார்த்துப் பார்த்து எடுக்குறோம். இந்தப் படத்துக்கு 40 நாள் ஷூட்டிங்னு பிளான் பண்ணோம். ஆனா, இன்னும் 15 நாள்கள் ஷூட்டிங் இருக்கு. இரண்டு படமும் 2018 சம்மர் ஹாலிடேவுக்கு ரெடியாயிடும்! 

அடுத்த கட்டுரைக்கு