வெளியிடப்பட்ட நேரம்: 20:31 (29/01/2018)

கடைசி தொடர்பு:20:31 (29/01/2018)

அரசியலில் உதயநிதி, அஜித் தீபாவளி, சமந்தாவின் டீசர்- கோலிவுட் கலாட்டா #QuickSeven

த்ரிஷாவின் அடுத்த படமான 'மோகினி' ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது என்று படக்குழுவினர் கூறியிருக்கின்றனர். இந்தப்படத்தின் 80 சதவிகித காட்சிகள், வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளன. சம்பவங்கள் முழுவதும் த்ரிஷாவின் கதாபாத்திரத்தைச் சுற்றியே நிகழும்படி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது, படத்தின் கூடுதல் சிறப்பு. எனவே, படத்திற்குக் கொடுக்கப்பட்டிருக்கும் 'உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் த்ரில்லர்' என்ற கேப்ஷன் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பைக் கூட்டியிருக்கிறது.

Trisha


மல், ரஜினி ஆகியோர் அரசியலுக்கு வந்துள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலினும் முழுநேர அரசியலில் ஈடுபட முடிவுசெய்துள்ளார். இதுகுறித்து அவர், "என்னை நடிகனாக மட்டுமே பார்க்காதீர்கள். நான் தி.மு.க குடும்பத்தில் பிறந்தவன். தற்போது முழுநேர அரசியலில் ஈடுபட முடிவுசெய்துள்ளேன். எனக்கு எந்த அரசியல் கொள்கைகளும் தற்போது இல்லை. பா.ஜ.க எங்களுக்குப் போட்டியும் இல்லை. அதன் 'பிரித்து ஆளும் கொள்கை' தமிழ்நாட்டில் செயல்படாது. மேலும், என்னை ரஜினி, கமலுடன் ஒப்பிடாதீர்கள். புதிதாகச் சிலர் அரசியலுக்கு வருவது நல்லது" என்று கூறியுள்ளார். 

Udhayanidhi

'தானா சேர்ந்த கூட்டம்' படத்திற்குப்பிறகு விக்னேஷ் சிவன், சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்கவிருக்கிறார் என்று தெரியவந்துள்ளது. இதுகுறித்து விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில், "அமெரிக்காவின் மியாமி கடற்கரைப் பகுதியில் ஒருவாரமாக இருக்கிறோம். எனது வெற்றிக்குப் பக்கபலமாய் இருக்கும் அனிருத்துடன் மேலும் ஒரு பயணத்திற்காகக் காத்திருக்கிறேன். அடுத்த படத்துக்கான புதிய விஷயங்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன். சுவாரஸ்யமான விஷயங்களை விரைவில் தெரிவிக்கிறேன்." என்று கூறியிருக்கிறார். 

QuickSeven

ஜித் மீண்டும் சிவா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்பதைத்தவிர வேறு எந்த அப்டேட்களும் 'விஸ்வாசம்' படத்துக்கு இல்லாமல் இருந்தது. நீண்ட நாள்களுக்குப்பிறகு, வரும் பிப்ரவரி 22-ஆம் தேதி தொடங்கி, ஜூலை மாதத்திற்குள் படப்பிடிப்பை நிறைவு செய்யலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறது, படக்குழு. இந்த ஆண்டு தீபாவளி தினத்தில் படத்தை ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டுள்ளனர். மேலும், விஜய் 62, சூர்யா 36 ஆகிய படங்களும் அன்று ரிலீஸ் செய்யப்படுவதாகத் திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Ajith

தெலுங்கில் ராம்சரண் மற்றும் சமந்தா நடித்துவரும் படத்தின் பெயர் 'ரங்கஸ்தலம்'. 1985-ல் நடக்கும் கிராமத்துக் கதையாக இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் சமந்தா மிகவித்தியாசமான ரோலில், கிராமத்துப் பெண்ணாக தாவணியில் படம் முழுக்க வந்திருக்கிறார் என்று குறிப்பிட்டிருந்தனர். கோதாவரி ஆற்றங்கரையில் கிராமத்து செட் அமைத்துப் பல மாதங்களாக ஷூட்டிங் நடைபெற்றுவந்தது. மேலும், இதன் டீஸர் சமீபத்தில் வெளியாகி, சுமார் ஒன்பது மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இதில் ரசிகர்களுக்கு மிகவும் வருத்தம் தரும் செய்தி என்னவென்றால், டீஸரின் ஒரு ஷாட்டில்கூட சமந்தா இடம்பெறவில்லை என்பதுதான். கூடிய விரைவில் சமந்தா குறித்த அப்டேட்டுகளைப் படக்குழு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Kollywood

ங்கர் இயக்கத்தில் கமல் இரட்டை வேடத்தில் நடித்து சூப்பர் ஹிட்டான திரைப்படம், 'இந்தியன்'. தற்போது இப்படத்தின் இரண்டாவது பாகம் உருவாகவிருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பு பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிக்கட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் தொடக்கவிழா தைவான் நாட்டில் நடந்திருக்கிறது. ஹீலியம் பலூனில் 'இந்தியன்-2' என்று எழுதிப் பறக்கவிட்டனர். அந்த வீடியோவை இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். '2.0' படத்தின் ரிலீஸுக்குப் பிறகு 'இந்தியன்-2' படப்பிடிப்பினைத் தொடங்க உள்ளார். கமல் பிப்ரவரி 22 அன்று தனது கட்சியின் பெயரை அறிவித்தபிறகு, ஏப்ரல் மாதம்முதல் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி, 'தடக்' என்ற பாலிவுட் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகிறார். இப்படம் தேசியவிருது வாங்கிய 'சாய்ராட்' என்ற மராட்டியப் படத்தின் ரீமேக். இதில், ஷாஹித் கபூரின் தம்பி இஷான் கட்டார் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இதற்கான ஷூட்டிங் பரபரப்பாக நடந்துவரும் நிலையில், ஜான்விக்கு இரண்டாம் படத்துக்கான ஒப்பந்தமும் முடிவாகியுள்ளது. தெலுங்கில் ஜுனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான 'டெம்பர்' படத்தை, பாலிவுட்டில் 'சிம்பா' என்ற பெயரில் ரீமேக் செய்யவுள்ளனர். இதில் இவருக்கு ஜோடியாக ரன்வீர் சிங் நடிக்கவிருக்கிறார் என்பது இப்படத்தின் ஸ்பெஷல். 

QuickSeven


டிரெண்டிங் @ விகடன்