Published:Updated:

உதயநிதி நடிக்கும் 'கண்ணே கலைமானே' படப்பிடிப்பு தொடங்கியது!

உதயநிதி நடிக்கும் 'கண்ணே கலைமானே' படப்பிடிப்பு தொடங்கியது!
உதயநிதி நடிக்கும் 'கண்ணே கலைமானே' படப்பிடிப்பு தொடங்கியது!

உதயநிதி நடிக்கும் 'கண்ணே கலைமானே' படப்பிடிப்பு தொடங்கியது!

சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா ஜோடியாக நடிக்கும் 'கண்ணே கலைமானே' படத்தின் படப்பிடிப்பு மதுரையில் பூஜையுடன் இன்று தொடங்கியது. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைக்கிறார். 2016-ம் ஆண்டு சீனுராமசாமி - தமன்னா - யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியில் விஜய்சேதுபதி நடித்த 'தர்மதுரை' வெளியாகி வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து சீனுராமசாமி இயக்கும் இந்தப் படத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. 

'கண்ணே கலைமானே' படத்துக்குப் பிறகு, மீண்டும் சீனுராமசாமி - விஜய் சேதுபதி கூட்டணியில் 'மாமனிதன்' படம் உருவாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்துக்கு, இளையராஜா - கார்த்திக் ராஜா- யுவன் ஷங்கர் ராஜா ஆகிய மூவரும் இணைந்து இசையமைக்கவிருப்பது ஸ்பெஷல்!  

அடுத்த கட்டுரைக்கு