Published:Updated:

"நஸ்ரியாவின் நியூ லுக், கஜோலின் மெழுகுச்சிலை, விஜய்சேதுபதியின் 'வாவ்' டயலாக்..." #QuickSeven

சுஜிதா சென்
"நஸ்ரியாவின் நியூ லுக், கஜோலின் மெழுகுச்சிலை, விஜய்சேதுபதியின் 'வாவ்' டயலாக்..." #QuickSeven
"நஸ்ரியாவின் நியூ லுக், கஜோலின் மெழுகுச்சிலை, விஜய்சேதுபதியின் 'வாவ்' டயலாக்..." #QuickSeven

விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக், நிகாரிகா உள்ளிட்ட பலர் நடித்து, பிப்ரவரி 2-ந் தேதி வெளியாகவிருக்கும் திரைப்படம் 'ஒரு நல்லநாள் பார்த்து சொல்றேன்'. இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலில் விஜய் சேதுபதி 8 கெட்டப்புகளில் வருகிறார். மேலும், படத்தில் ஒரு காட்சியில் விஜய்சேதுபதி தொடர்ந்து நான்கு நிமிட நீளமான வசனம் ஒன்றைப் பேசியிருக்கிறார். இக்காட்சியை ஒரே டேக்கில் ஓகே செய்து அசத்தினாராம், விஜய்சேதுபதி. 

விஜய்க்கு ஒரு மகனும், மகளும் இருக்கும் செய்தி அனைவரும் அறிந்ததுதான். 'வேட்டைக்காரன்' படத்தில் ஒரு பாடலில் விஜய் தன் மகனையும், 'தெறி' படத்தின் கடைசி காட்சியில் தன் மகளையும் திரைக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் விஜய். தற்போது படிப்பில் பிஸியாக இருக்கும் விஜய் மகள் திவ்யா சாஷா குறித்து ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதாவது, இவர் நன்றாகப் பாடக்கூடியவர் என்றும், சீக்கிரமே தனது பாட்டு பாடும் திறமையை சினிமாவில் வெளிக்காட்டுவார் என்றும் கூறப்படுகிறது. 

நஸ்ரியா தனது திருமணத்துக்குப் பிறகு நீண்ட நாள்கள் திரையில் முகம்கட்டாமலே இருந்தார். அவர் தற்போது ஒரு மலையாளப் படத்தில் கமிட் ஆகியிருக்கிறார். அப்படத்துக்கான டைட்டில் இன்னும் வெளியாகவில்லை. மேலும், இவர் புதிய ஹேர்ஸ்டைல் புகைப்படத்தை தனது ஃபேஸ்புக்கில் வெளியிட்டிருந்தார். இதற்கு ரசிகர்கள், 'நஸ்ரியா பழையமாதிரி நீளமான முடி வைத்திருந்ததுதான் எங்களுக்குப் பிடித்திருக்கிறது' என்று கமெண்ட் செய்துள்ளனர். 

'அமரகாவியம்' படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான மியா ஜார்ஜ் தற்போது 'எண்டே மெழுதிரி அதழங்கள்' என்ற ஒரு மலையாளப் படத்தில் கமிட் ஆகியுள்ளார். இதில் இவர் மெழுகுவர்த்தி கம்பெனியில் வேலைபார்க்கும் பெண்ணாக நடிக்கவிருக்கிறார். அதற்காக இவர் மெழுகுவர்த்தி கம்பெனி ஒன்றில் பயிற்சி எடுக்கவிருக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இப்படத்தின் கதையை எழுதிய அனூப் மேனன், இதில் கதாநாயகனாகவும் நடிக்க இருக்கிறார். இதன் ஷூட்டிங் ஊட்டியில் சுமார் 60 நாள்கள் நடைபெற இருக்கிறது. 

டப்ஸ்மாஷ் புகழ் மிருணாளினி 'நகல்' என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும், இவர் விஜய் சேதுபதி நடித்துவரும் 'சூப்பர் டீலக்ஸ்' படத்திலும் ஒரு ரோலில் நடித்திருப்பதாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். விஜய் சேதுபதி, சமந்தா, மிஸ்கின், ரம்யா கிருஷ்ணன் உள்பட பலர் நடித்துள்ளனர். எனவே, 'நகலு'க்கு முன்பே மிருனாளினியைத் திரையில் காணலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

லண்டனில் உள்ள 'மேடம் டூசாட்' மியூசியத்தில் உலகின் புகழ்பெற்ற பலரது மெழுகு சிலைகள் உருவாக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதன் கிளைகள் பல்வேறு நாடுகளில் உள்ளது. அதில் சிங்கப்பூரில் உள்ள ஓர் கிளையில் நடிகை கஜோலின் மெழுகு சிலை வைக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதற்காக அந்தk குழுவை சேர்த்தவர்கள் மும்பை வந்து காஜலின் முகத்தோற்றம், கண்கள், முடி உள்ளிட்டவைகளை அளவு எடுத்துச்சென்றுள்ளனர். இதுகுறித்து கஜோல் கூறியதாவது, "எனது மெழுகுசிலையைக் காண நான் ஆவலாக உள்ளேன். இதற்கான அளவுகளை குழுவினர் சுமார் நான்கு மணிநேரமாக எடுத்தனர். விரைவில் சிங்கப்பூரில் எனது சிலை வைக்கப்படும் என்று நினைக்கிறன்" என்று கூறியுள்ளார். 

மும்பையில் நடிகர் ஷாருக்கான் விவசாயம் செய்யும் நிலத்தில் பண்ணை இல்லம் ஒன்று காட்டியுள்ளார் என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் பினாமி சொத்து பரிமாற்றம் தடை சட்டத்தின்கீழ் வருமான வரித்துறையினர் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். இந்தப் பண்ணை இல்லத்தின் மதிப்பு சுமார் 14 கோடி என்று கூறப்படுகிறது. இது மிகவும் ஆடம்பர வடிவில் 19 ஆயிரத்து 960 சதுராமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. அதில் நீச்சல் குளம் மற்றும் ஹெலிகாப்டர் வந்திறங்கும் தளம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இது பினாமி சொத்து என்று தெரியவந்துள்ள நிலையில், வருமான வரித்துறையினர் அதனை முடக்கி சீல் வைத்துள்ளனர்.