Published:Updated:

"லவ் யூ சிம்பு... ஹேட் யூ சிம்பு... ஏன் இப்டி இருக்க?!" #HBDSimbhu

"லவ் யூ சிம்பு... ஹேட் யூ சிம்பு... ஏன் இப்டி இருக்க?!" #HBDSimbhu
"லவ் யூ சிம்பு... ஹேட் யூ சிம்பு... ஏன் இப்டி இருக்க?!" #HBDSimbhu

ஐ எம் எ லிட்டில் ஸ்டார் ஆவேன்டா சூப்பர் ஸ்டார்னு தன்னோட அப்பா படங்கள்ல குழந்தை நட்சத்திரமா வியக்க வைத்த நடிகன். 'அவ பேரு ஜெஸ்ஸி ஜெஸ்ஸி'னு காதல் கசிந்துருகியது முக்கால்வாசி சாக்லேட் பாய்ஸின் காதல் டெம்ப்ளேட். ஷூட்டிங்குக்கு சொன்ன நேரத்துக்கு வரமாட்டேங்குறாரு, சொன்ன நேரத்துல படம் ரிலீஸ் ஆகலைனு சர்ச்சைகள் சூழ வலம் வந்ததும் இதே நடிகன்தான். ஆனா, ஷூட்டிங் வந்தா சிம்பு மாதிரி ஒரு நடிகனைப் பார்க்க முடியாதுனு சொல்ற அளவுக்கு ஒரு சிறந்த நடிகன் சிம்பு. 

'எங்க வீட்டு வேலன்' படம் ரிலீஸ் ஆன சமயத்தில் சிம்பு குழந்தை நட்சத்திரம்தான். ஆனால், சிம்புவை மையப்படுத்திய கதை. அதேசமயத்தில் வெளியான முன்னணி நடிகர்களின் படத்தைத் தாண்டி சிம்பு படம் மாஸ் ஹிட். அடுத்த படத்தில் சிம்பு நடிப்பாரா என்று 1992-களிலேயே முன்னணி ஸ்டுடியோ கால்ஷீட் கேட்டதாம்.

துறுதுறு முகம், துடிதுடிப்பான இளைஞன், டான்ஸ், மியூசிக், பாடலாசிரியர் என பன்முகம் காட்டிய சிலம்பரசன் ஒரு சிங்கிள் டேக் ஆர்ட்டிஸ்ட் என்பது அவரோடு பழகிய பல இயக்குநர்களின் ஓப்பன் ஸ்டேட்மென்ட். விரலைக் காட்டிப் பேசும் இவரின் பன்ச், ரொமான்ஸ், வெகுளித்தனம்... எனப் பல சூழ்நிலைகளில் தன்னை ஒரு முழுமையான நடிகராக வெளிப்படுத்திய நடிகன். 

'எனக்கு அப்பவே தெரியும் சார். இந்த இன்ஜினீயரிங் எல்லாம் வேஸ்ட்டு, சினிமா சினிமா சினிமாதான் எல்லாமே என்று' அன்னிக்கு சிம்பு பேசின டயலாக்தான், இன்னிக்கு கோடம்பாக்கத்துல பல இன்ஜினீயர்களின் டெம்ப்ளேட் வரிகளா இருக்கு.

'எனக்கு நடிக்கத் தெரியாதுங்க'னு ரியாலிட்டி ஷோக்களில் பேசுவது தொடங்கி... 'வேணும்னா, நான் இந்த இன்டஸ்ட்ரியிலேயே இல்லங்க என்ன விட்டுடுங்க'னு கடைசியா கொடுத்த பிரஸ்மீட் வரை சிம்பு ஒரு ஓப்பன் கேரக்டர். 

'ஆக்ச்சுவலா நா இப்படித்தான்... இதுதான் சிம்பு'னு வெளிப்படையா இருக்குற ஒரு நடிகன். இதுதான் சிம்புவோட பலம் , பலவீனம் ரெண்டுமே. 'கோவில்', 'விடிவி' ரெண்டு படத்துலேயும் அமைதியா நடிக்குற காதல் இளைஞன், 'தம்', 'அலை', 'குத்து'னு மாஸ் ஹீரோ... இப்படி தனக்குக் கொடுத்த வேலையை நன்றாகவே செய்வார் சிம்பு.

கவிஞர் வாலி, ‘குத்து’ படத்துல, 'நான்னா நம்பு, உன் நண்பன்தானே சிம்பு'னு பாட்டு எழுதியிருப்பாரு. அப்ப சிம்பு, 'சார், இப்படி எழுதிருக்கீங்களே’னு கேட்க, ‘அதெல்லாம் நல்லாருக்கும் போ’னு சொல்லி அனுப்பியிருக்காரு. அதற்கு மரியாதை செய்யும் விதமாதான், 'வாலிபோல பாட்டெழுத எனக்குத் தெரியலயே’னு ‘வல்லவன்’ படத்துக்கு வரிகள் எழுதினதா சிம்பு சொன்னது, டச்சிங் மொமென்ட்.

பாலிவுட் ஹீரோ ரன்வீர் சிங் தன்னை எப்போதுமே லைம் லைட்டில் வைத்திருப்பாராம். அதற்காக நிறைய மெனக்கெடுவார். ஆனால், சிம்பு அவருக்கெல்லாம் மேல படமே இல்லனாலும் சிம்புவைச் சுத்தி நாலு சர்ச்சை இருக்கும்; இதுதான் சிம்பு. 4 வருடமா படமே வரல... சிம்பு அவ்ளோதான்.. டீஸர் மட்டுமே ரிலீஸ் பண்ணாப் பத்தாது, படம் ரிலீஸ் பண்ணனும்... இப்படிப் பல நெருக்கடிகள் வந்தாலும், 'வாலு' படம் ரிலீஸ் ஆனப்போ சிம்பு 4 வருடம் ஃபீல்டில் இல்லாட்டியும், அவருக்காகப் படம் பார்ப்போம்னு கூட நின்ன ரசிகர்களை சிம்பு ஒரு பேட்டியில்கூட குறிப்பிடாம இருந்ததில்லை. 

ஃப்ரொபெஷனல் லைஃப் மட்டுமில்ல, ஃபெர்ஷனலும் சிம்புவுக்குக் கொஞ்சம் சிக்கலைத்தான் தந்திருக்கு. நயன்தாரா, ஹன்சிகா என ஓப்பனாக ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் தட்டி, ‘கூட இருந்த பொண்னும் விட்டுட்டுப் போய்டுச்சு’னு ஆடியோ வெளியீட்டு விழாவுல அழுததும் சிம்புவின், பெர்ஷனல் டைரீஸ்! 

பீப் சாங் சர்ச்சை, தயாரிப்பாளர்களோட சர்ச்சை, 'AAA' படப் பிரச்னைனு ஆரம்பிச்சு, ரெட் கார்டு வரைக்கும் போனாலும்... சிம்பு இன்றைக்கும் வைரல்தான். சிம்புவைத் திரையில் பார்க்க ரசிகர் கூட்டம் காத்துக் கிடக்கிறது. ரசிகர்களுக்காகவாவது சிம்பு வருடத்துக்கு ஒரு படம் பண்ணனும் என்பதுதான் அவரோட ரசிகர்களும், ஏன் அவருமே எதிர்பார்ப்பது. தனக்குத் திறமை இருக்குனு பண்ணுறதுல தப்பு இல்லைனு நினைக்கக் கூடாது, இது சிம்புவுக்கும் இப்போ நல்லாவே புரிஞ்சிருக்கும். 

சமீபத்துல ஜிம்முல வொர்க் அவுட் பண்ற ஒரு வீடியோ, மணிரத்னம் படத்துக்கான கெட்டப்னு சிம்புவின் முகம் தெரிந்ததற்கே இணையம் வைரலாகிறது. ஆயிரம்தான் மீம்ஸ் போட்டுக் கலாய்ச்சாலும், 'நான் சிம்பு ஃபேன்'னு காலரைத் தூக்கிவிட்டுச் சொல்ற கூட்டம் இன்னமும் இருக்கு. சிம்புவுக்கான இடம் தமிழ் சினிமாவில் எப்போதும் இருக்கும். பிறந்தநாள் வாழ்த்துகள் சிம்பு.