Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

•   `ட்விட்டரில் 1 கோடி ஃபாலோயர்களைத் தொட்ட முதல் தமிழர், முதல் தென் இந்தியர்’ என்ற சாதனையைப் படைத்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். ஏற்கெனவே ஃபேஸ்புக்கிலும் 1 கோடி ரசிகர்களைத் தாண்டியவர் என்கிற சாதனையும் ரஹ்மான் வசமே. ட்விட்டரில் 27 லட்சம் ஃபாலோயர்களுடன் ரஜினிகாந்த் இரண்டாவது இடத்தில் இருக்க, மூன்றாவது இடத்துக்கு தனுஷ், த்ரிஷாவுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. த்ரிஷாவைவிட 40 ஆயிரம் ஃபாலோயர்ஸ் தனுஷுக்கு அதிகம்! இசைத்தமிழன் ராக்ஸ்!

இன்பாக்ஸ்

•   சச்சின், அமிதாப், ஐஸ்வர்யா ராய் என நம்ம ஊர் பிரபலங்கள் முதல் உலகப் பிரபலங்கள் பலரும் மெழுகுச்சிலைகளாக நிற்கும் இடம் லண்டன் `மேடம் டுசாட்ஸ்' மியூசியம். உலகின் பல இடங்களில் கிளைகளை அமைத்துவரும் மியூசிய நிர்வாகம், அடுத்து டிக் அடித்திருப்பது டெல்லியை. அடுத்த வருடம் முதல் பொதுமக்களின் பார்வைக்கு வரவிருக்கும் இந்த மியூசியத்தின் முதல் மாடலாக போஸ் தர இருப்பவர், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால். அம்மாவுக்கு ஒரு சிலை பார்சல்ல்ல்!

•   கோலிவுட் டைம்லைனுக்கு ஏற்ப பேய் கதையுடன் ரீ-என்ட்ரி கொடுக்கிறார் செல்வராகவன். கெளதம் மேனன் தயாரிப்பில், எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடிக்கும் `நெஞ்சம் மறப்பதில்லை' படத்தை இயக்குகிறார் செல்வா. ரெஜினா, நந்திதா என இரண்டு ஹீரோயின்கள். மூன்று இயக்குநர்கள் இணையும் படம் என்பதால், எதிர்பார்ப்பு எகிறுகிறது. இது ஃபேன்டசி பேய்!
 

•    ஹ்ரித்திக் ரோஷன் - கங்கனா ரனாவத் சண்டைதான் பாலிவுட்டின் சமீபத்திய சென்சேஷன். `ஹ்ரித்திக் தனது மனைவியை விவாகரத்து செய்ததற்குக் காரணம் கங்கனாதான்' எனச் செய்திகள் முளைத்தபோது, இருவருமே அதை மறுக்கவில்லை. இப்போது திடீரென கங்கனா, ஹ்ரித்திக்கை தனது முன்னாள் காதலன் என மறைமுகமாகச் சொல்ல, பற்றிக்கொண்டது பரபரப்பு. ` `ஆஷிக் 3' படத்தில் இருந்து உங்களை நீக்கியதற்கு, ஹ்ரித்திக் ரோஷனுடனான சண்டைதான் காரணமா?' எனக் கேட்டதற்கு, `மீடியாவின் கவனம் தன் பக்கம் திரும்ப வேண்டும் என்பதற்காக, என் `எக்ஸ்' இதுபோன்ற அறிவற்ற விஷயங்களைப் பரப்புகிறார்' என கங்கனா சொல்ல, ‘யாருடன் வேண்டுமானாலும் எனக்குக் காதல் வரும். ஆனால், நீங்கள் சொல்லும் நபருடன் எப்பவுமே வராது' என ஹ்ரித்திக் ட்விட்டரில் கொந்தளிக்க, டைம்லைன் முழுக்கப் பரபரா! காதலுக்குப் பின் மோதல்!

•    `வருடத்துக்கு, சுமார் 80 லட்சம் டன் பிளாஸ்டிக்குகள் கடலுக்குள் வந்துசேர்கின்றன. இதே அளவு தொடர்ந்தால் 2050-ம் ஆண்டுக்குள் கடலுக்குள் இருக்கும் மீன்களின் எண்ணிக்கையைவிட பிளாஸ்டிக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துவிடும்' என எச்சரிக்கிறது உலகப் பொருளாதாரக் கூட்டமைப்பு. கடலுக்குள் பிளாஸ்டிக்குகளைக் கொட்டும் நாடுகளில் சீனா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் வியட்நாம் போன்ற ஆசிய நாடுகள்தான் முதல் ஐந்து இடங்களில் இருக்கின்றன. `விரைவில் இந்தியாவும் இந்த டாப் லிஸ்ட்டில் இடம் பிடிக்கும்’ என்கிறார்கள். பிளாஸ்டிக் எமன்!

•    ``அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நான் வெற்றிபெற்றால் தற்போதைய ஜனாதிபதியான ஒபாமாவை உச்ச நீதிமன்ற நீதிபதியாக்க முயற்சிசெய்வேன்'' என்கிறார் ஹிலாரி கிளின்டன். அதிபர் தேர்தலில் போட்டியிட ஆதரவு திரட்டிவரும் ஹிலாரி, `ஒபாமாவுக்கு நீதிபதியாகும் அனைத்து தகுதிகளும் இருக்கின்றன. எந்த விஷயமாக இருந்தாலும், அதைச் சிறப்பாக விவாதித்து வெற்றிபெறும் திறமை அவரிடம் இருக்கிறது'' என்று சொல்லியிருக்கிறார். நீதிபதி ஒபாமா வாழ்க!

இன்பாக்ஸ்

•    `தங்க நகைகள், வைரங்கள் மற்றும் பணத்துக்காக நான் யாரையும் திருமணம் செய்ய மாட்டேன். குழந்தை பெற்றுக்கொள்ளும் காரணத்தைத் தவிர, வேறு எதற்காகவும் என் வாழ்வில் ஆண் தேவை இல்லை. திருமணம் செய்துகொள்ளாமல் குழந்தை பெற்றுக்கொள்வதை நம் சமூகம் ஏற்றுக்கொள்ளாது. அதனால் குழந்தை பெற்றுக்கொள்வதற்காக மட்டுமே நான் திருமணம் செய்துகொள்வேன். என் திருமணம் காதல் திருமணமாகத்தான் இருக்கும். அதுவும் இந்தியர் ஒருவரைத்தான் திருமணம் செய்துகொள்வேன்' என, திருமணம் பற்றி முதல்முறையாகப் பேசியிருக்கிறார் பிரியங்கா சோப்ரா. #அதிரடின்னா இதுதான்!

இன்பாக்ஸ்

•   பிரேசிலில் ஜூலை மாதம் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்காகத் தயாராகிவருகிறார் உசேன் போல்ட். '200 மீட்டர் போட்டியில் 19 விநாடிகளுக்குள் ஓட வேண்டும் என முடிவுசெய்திருக்கிறேன். இதுவரையிலும் எந்த மனிதனும் செய்யாத சாதனை அது. அதைப் பார்த்துவிட்டுத்தான் அடுத்தடுத்த முடிவுகளை எடுப்பேன்’ என தம்ஸ்அப் காட்டியிருக்கிறார் போல்ட். போல்டான போல்ட்!