Published:Updated:

“அஜித் படத்துல 400 பேர்ல ஒரு ஆளா ஓடுனது... செம ஃபீல் ஆயிட்டேன்!” - டேனியல்

“அஜித் படத்துல 400 பேர்ல ஒரு ஆளா ஓடுனது... செம ஃபீல் ஆயிட்டேன்!” - டேனியல்

“அஜித் படத்துல 400 பேர்ல ஒரு ஆளா ஓடுனது... செம ஃபீல் ஆயிட்டேன்!” - டேனியல்

“அஜித் படத்துல 400 பேர்ல ஒரு ஆளா ஓடுனது... செம ஃபீல் ஆயிட்டேன்!” - டேனியல்

“அஜித் படத்துல 400 பேர்ல ஒரு ஆளா ஓடுனது... செம ஃபீல் ஆயிட்டேன்!” - டேனியல்

Published:Updated:
“அஜித் படத்துல 400 பேர்ல ஒரு ஆளா ஓடுனது... செம ஃபீல் ஆயிட்டேன்!” - டேனியல்

‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்' படத்தில் கலாய் கவுன்டர்களைப் போட்டு ஆடியன்ஸை சிரிக்க வைத்து, ஒரு வைப்ரேஷன் மோடிலே வைத்திருந்தவர் டேனியல். ஒரு நல்ல நேரமா பார்த்து, ஷூட்டிங் ஸ்பாட் கேரவேனில் இருந்த அவருடன் பேசினோம்.

“இந்தப் படத்துல நடிக்க, டைரக்டர் உங்களுக்கு எப்ப நல்ல நாள் பார்த்தார்?”

“2015-லேயே ஆறுமுகம் அண்ணா என்னிடம் படத்தைப் பத்தி சொல்லி, `நீ கண்டிப்பா பண்ணணும், ஹீரோவோட ஃப்ரெண்ட் ரோல் படம் முழுக்க வருவ'னு என்கிட்ட ஸ்க்ரிப்ட் கொடுத்து படிக்கச் சொன்னார். படத்துல எடுத்திருந்த சப்ஜெக்ட் புதுசா இருந்தது. நடிச்சா நல்லா வரும்னு நடிக்க ஒப்புக்கொண்டேன். படத்துடைய எல்லா கேரக்டரும் கொஞ்சம் கொஞ்சமா ஃபிக்ஸ் பண்ணாங்க. அப்புறம் ஷூட்டிங் ஆரம்பிச்சது.'' 

“விஜய் சேதுபதி உங்க நடிப்பைப் பார்த்துட்டு என்ன சொன்னார்?''

“முதல் படத்துல நான் நடிக்கும்போது அவர் வளர்ந்து வர்ற நடிகர். இப்போ தமிழ் சினிமாவுல மாஸ் ஹீரோக்கள்ல ஒருவர். மனுஷன் அன்னைக்கு இருந்த மாதிரிதான் இப்பவும் இருக்கார். பொதுவா ஹீரோக்கள்கூட நடிக்கும்போது அவங்க ஒரு ஸ்பேஸ் கொடுத்தாதான், நம்ம நடிக்கிறதுக்கு ஈசியா இருக்கும். அந்த ஸ்பேஸ் சேது அண்ணா நிறையவே கொடுப்பார். `அப்படி பண்றதைவிட இப்படிப் பண்ணுடா, நல்லா இருக்கும்'னு ஐடியாவும் கொடுப்பார். க்ளைமாக்ஸ்ல எனக்கு பெருசா டயலாக் வரும். அதை டைரக்டர் ஒரே கட்ல வேணும்னு சொல்லிட்டார். ஆனா, நாலு தடவை டேக் வாங்கினேன். காரணம், சேது அண்ணா. `ரொம்ப நல்லா இருக்கு டா'னு சத்தமா சிரிச்சு எல்லாரையும் சிரிக்க வெச்சுருவார். அப்புறம் ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்து கொஞ்சதூரம் தள்ளிப் போயிட்டார். ஷாட் முடிஞ்சதும் என்னைக் கட்டிப்பிடிச்சு `சூப்பர்டா, எனக்கு ரொம்பப் பிடிச்சது'னு பாராட்டினார். அவரை மாதிரி பெரிய ஆர்டிஸ்ட்கிட்ட பாராட்டுகள் வாங்குறது ரொம்ப சந்தோஷமா இருந்தது.'' 

“ஷூட்டிங் ஸ்பாட்ல என்ன மாதிரியான ரகளைகள் நடக்கும்?” 

(குபீர் சிரிப்புடன்...) ``ஒருநாள் மலை மேல் ஷூட்டிங் நடந்தது. ஷாட் எடுக்க எல்லாமே ரெடி பண்ணிட்டு கேமராவும் ரோலிங் ஆகியிருச்சு. ரெண்டு பேர் திடீர்னு ஓட ஆரம்பிச்சுட்டாங்க. என்னன்னு பின்னாடி பார்த்தா ரெண்டு யானை ஓடி வந்துட்டு இருந்தது. `ஆத்தாடி'னு எல்லாரும் தலை தெறிக்க ஓட ஆரம்பிச்சுட்டாங்க. அந்த யானை பார்க்க ரொம்ப வீக்கா, அழுக்கா, விகாரமா இருந்தது. எல்லாரையும் தூக்கிட்டுப் போயிருமோன்னு எல்லாரும் மரத்துல ஏறி ஒளிஞ்சுகிட்டாங்க. இது ஒரு காமெடி. அப்புறம், அந்தப் படத்துல `சின்ன நைனா'னு ஒரு கேரக்டர்ல முத்து அண்ணா நடிச்சிருப்பார். அவரை வெச்சு செஞ்சிட்டாங்க. க்ளைமாக்ஸ்ல ஒரு டென்ட் உள்ள கத்தியை எடுத்து டேபிள்ல வெட்டணும். இது அவருடைய போர்ஷன். ஒவ்வொரு டேக்கா வாங்கி வாங்கி அந்த டேபிளை கொதறி வெச்சுட்டார் மனுஷன். மதியம் ஆரம்பிச்ச அந்த ஷாட் முடிய நைட் ஆகியிருச்சு. அதைப் பார்த்துட்டு எனக்கும் கௌதமுக்கும் சிரிப்பு தாங்க முடியல. 40 தடவை `ஏய்ய்ய்ய்'னு கத்தி அவர் தொண்டையே புண் ஆகியிருச்சு. இது மாதிரி நடக்குற சின்னச்சின்ன விஷயங்கள்கூட ரொம்ப காமெடியா இருக்கும்.”

“ ‘ஜருகண்டி’ படத்துல தனுஷைக் கலாய்ச்சிருக்கீங்களா? அந்தப் படத்துல உங்களுக்கு என்ன மாதிரி கேரக்டர்?”

“அந்த சீன்ல தனுஷ் சாரை கிண்டல்லாம் பண்ணல. நீங்களா ஏதாவது கிளப்பி விட்றாதீங்க. எங்களை கடத்தி ஒரு இடத்துல அடைச்சுருவாங்க. அந்த இடத்துலதான் அந்த டயலாக் வரும். இவ்வளவுதான்.  சுத்தி எல்லாருமே இருப்பாங்க, நான் தனியா லூசு மாதிரி கத்திட்டு இருப்பேன். `ஜருகண்டி' செம ஜாலியான படம். ஜெய் ஃப்ரெண்டா நடிச்சிருக்கேன். அவர் ஒரு இக்கட்டான சூழ்நிலையில மாட்டுவார். அவர்கூட சேர்ந்து, அவருக்கு உதவி பண்ற மாதிரியான ரோல். படம் ஆடியன்ஸுக்குப் பிடிக்கும்னு நம்புறேன்.”  

“ஆடியன்ஸோட ரியாக்‌ஷன்களை எப்படிப் பார்க்குறீங்க?” 

“நான் நடிச்ச எல்லா படங்களையுமே தியேட்டர்க்கு போய்தான் பார்ப்பேன். `ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்' படத்துக்கு எல்லா தியேட்டருக்குமே விசிட் போனேன். என் சீன் வந்ததும் ஆடியன்ஸ் கைதட்டி உற்சாகமா பார்த்தது எனக்கு ரொம்ப சந்தோஷம். நிறைய பாசிட்டிவ் கமென்ட்ஸ் வரும். ஸ்க்ரீன்ல என்னைப் பார்க்கும்போது அவங்க வீட்டுல ஒருத்தன் மாதிரி `அவன் மூஞ்சிய பாரேன், அவன் ஃபேஸ் ரியாக்‌ஷன் பாரேன்'னு ரொம்ப ஜாலியா என்ஜாய் பண்ணிப் பார்ப்பாங்க. எனக்கு அது நிறைவா இருக்கும். டேனி ஹேப்பி அண்ணாச்சி. ஆனா, சில பேர் `நீ ஏன் ரங்கூன் படத்துல நெகடிவ் ரோல் ஏன் பண்ண?,`ரௌத்திரம்' படத்துல நடிச்சிட்டு இருக்கும்போது சில பேர் `இப்படியே நடிச்சிட்டு இருந்தா, அந்த படத்துல வர்ற சென்றாயன் மாதிரி இண்டஸ்ட்ரியில இருந்து காணாம போயிருவ'ங்கிற மாதிரி சொல்லியிருக்காங்க. எடுத்துக்க வேண்டியதை எடுத்துகிட்டு, தேவையில்லாததை விட்டுருவேன்.'' 

“இனி வர்ற படங்கள்ல என்ன மாதிரியான ரோல்ல டேனியலை எதிர்பார்க்கலாம்?”

“ ‘இப்படித்தான் நடிப்பேன்'னு எனக்கு எந்த குறிக்கோளும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் நான் சினிமாவுக்குள்ள வந்ததே `காக்க காக்க' படத்துல வர்ற ஜீவன் மாதிரி பெரிய வில்லன் ஆகணும்னுதான். யாருக்கும் தெரியாத ஒரு ரகசியத்தை உங்களுக்குச் சொல்றேன். `பரமசிவன்'னு ஒரு படம் வந்தது. உங்களுக்கு ஞாபகம் இருக்கா? அதுல நடிக்க வர்றீங்களான்னு கேட்டாங்க. அப்ப நான் 12-வது படிச்சிட்டு இருந்தேன். ஜிம்ல எனக்கு பழக்கமான ஒருத்தர் `அஜித் படத்துல நடிக்கிறியாபா?'னு கேட்டார். `அதுக்கென்ன நடிக்கிறேன்'னு சொன்னேன். ஷூட்டிங்கும் ஆரம்பிச்சது. ஒரு ஜெயில் ட்ரெஸ் போட்டு 400 பேர் ஓடிட்டு இருந்தாங்க. அந்த ட்ரெஸ்ஸை என்னையும் போடச் சொல்லி `ஓடுப்பா தம்பி'னு சொன்னாங்க. நானும் குடுகுடுன்னு ஓடினேன். இதுல ஆறுதல் என்னன்னா ரெண்டு ஷாட்ல அஜித் சார் பக்கத்துல வருவேன். ரிலீஸான அப்புறம் படத்தைப் பார்த்துட்டு, `இந்த மூஞ்சிக்கு வில்லன் வேலைக்கே ஆகாது'னு `பரமசிவன்' படத்தோட அந்த நினைப்பையே பரண் மேல போட்டேன்.

அப்புறம் தனுஷ் சார் நடிச்ச `பொல்லாதவன்' படத்துல சின்ன ரோல்ல நடிச்சேன். ஒரு ஷாட்ல அவர் மட்டுமே பேசிக்கிட்டு இருந்தார். வெற்றி சார்கிட்ட `என்ன சார் அவர் மட்டுமே பேசிகிட்டு இருக்கார், நான்லாம் பேசக் கூடாதான்'னு கேட்டேன். அவர் சிரிச்சிகிட்டே `தம்பி இருப்பா'னு சொன்னார். இப்படி ஆரம்பத்துல இதுதான் சினிமான்னு எனக்கு தெரியாது. இப்பதான் சினிமான்னா என்னனு புரிய ஆரம்பிச்சிருக்கு. ‘காட்டேரி’, ‘மாங்கல்யம் தந்துனானேனா’னு சில படங்கள்ல நடிச்சிட்டு இருக்கேன். ஆடியன்ஸுக்கும் பிடிக்கும்னு நம்புறேன்'' என விடைபெற்றார்.