Published:Updated:

சிறந்த நடிகர் ஜெயம் ரவி - `பூலோகம்’

சிறந்த நடிகர்  ஜெயம் ரவி - `பூலோகம்’
பிரீமியம் ஸ்டோரி
சிறந்த நடிகர் ஜெயம் ரவி - `பூலோகம்’

சிறந்த நடிகர் ஜெயம் ரவி - `பூலோகம்’

சிறந்த நடிகர் ஜெயம் ரவி - `பூலோகம்’

சிறந்த நடிகர் ஜெயம் ரவி - `பூலோகம்’

Published:Updated:
சிறந்த நடிகர்  ஜெயம் ரவி - `பூலோகம்’
பிரீமியம் ஸ்டோரி
சிறந்த நடிகர் ஜெயம் ரவி - `பூலோகம்’

ஜெயம் ரவிக்கு இது இரண்டாவது இன்னிங்ஸ். சாஃப்ட் வாய்ஸ் சாக்லேட் ஹீரோ இமேஜை உடைத்து, ஆக்‌ஷன் அவதாரம் எடுத்தார்.  உடம்பை முறுக்கேற்றி, முரட்டு பாக்ஸர் பூலோகமாக புத்திமதி சொல்லி நாக்அவுட் செய்தது மரண மாஸ். `தனி ஒருவன்’ முழுக்க கோபக்கார இளைஞனாகப் புருவம் சுருக்கி மிரட்டியெடுத்து 100 டிகிரியில் கொதித்தார்.  `ரோமியோ ஜூலியட்’டில் `தூவானம் தூவத் தூவ...’ மயங்கி மயங்கிப் பண்ணிய ரொமான்ஸுக்கு பெண்கள் பக்கம் புயலடித்தது. கதைத் தேர்வில் கவனம் காட்டுகிற அதே நேரம், தன் உடல்
மொழியில் ரவி காட்டும் அக்கறை, அபாரம். 2015-ம் ஆண்டில்  தான் நடித்த நான்கில் மூன்று படங்களை ஹிட் லிஸ்ட்டில் ஏற்றிய ஜெயம் ரவிக்கு இது சக்சஸ் ஆண்டு. `அண்ணன் மேல் சவாரி செய்கிறார்’ என்ற இமேஜையும் தள்ளி, தனி ஒருவனாக தலை நிமிர்ந்திருக்கும் ஜெயம் ரவிக்கு தம்ஸ்அப்.

சிறந்த நடிகர்  ஜெயம் ரவி - `பூலோகம்’

Best Actor  Jayam Ravi - ‘BhooloHam’

This is Jayam Ravi’s second innings. He has come out of his soft-voiced chocolate hero image to move into hardcore action. With his well-toned physique, he plays the role of the aggressive and righteous pugilist named Bhooloham, and knocks his opponents out. In ‘Thani Oruvan,’ he was an angry young man, whose rage was aptly captured by the constant frown on his face. The romance of ‘Romeo Juliet’s ‘Poovaanam thoova thoova…’ earned him lots of female fans. Jayam Ravi has now started to pay attention to story selection. But, what sets him apart is the fact that he is also taking care of body language and mannerisms of the characters that he plays. Of the four films that he did in 2015, three turned out to be blockbuster hits, making 2015 a very successful year for Jayam Ravi. This was also the year when he finally got rid of the ‘backed by the elder brother’ tag and began to soar on his own. Thumbs up for the actor who has managed to make a fine name for himself.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிறந்த நடிகர்  ஜெயம் ரவி - `பூலோகம்’

‘‘எவரும் இந்த அளவுக்கு பாராட்டியதில்லை”

 “நான் மிகவும் மதிக்கிற விருது, விகடன் விருது. 2015-ம் ஆண்டில் இது எனக்குக் கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி. இதற்காக நான் அதிகம் உழைத்திருக்கிறேன். என்னை அங்கீகரித்த விகடனுக்கு நன்றி.

`பூலோகம்’ கதையை நான், அப்பா, அண்ணன் அனைவரும் கேட்டோம். மற்றவர்கள், இது எனக்குப் பொருந்துமா என யோசித்தார்கள். ஆனால் நான், ‘இதில் நடித்தே ஆகவேண்டும்’ என்பதில் தெளிவாக இருந்தேன். இதுவரை நான் திரையில் பார்க்காத ஒரு கதாபாத்திரம். அதுக்கு உயிர்கொடுக்க வேண்டும் என நினைத்தேன். மூன்று மாதங்கள் இயக்குநரிடம் அவகாசம் கேட்டு, உடலை ஏற்றினேன். மிகவும் கடினமான பயிற்சிகள். படம் முடிந்த பிறகு அது உடனே வெளிவராததால், உண்மையிலேயே மொத்தக் குழுவும் சோர்ந்துபோய்விட்டோம். ஆனால், அந்தக் கஷ்டங்கள் அனைத்தும் இப்போது மக்களின் கைதட்டல்களைக் கேட்கும்போது காணாமல் போய்விட்டன. என் நடிப்பை, இதுவரை எவரும் இந்த அளவுக்குப் பாராட்டியது இல்லை. இதோ, விகடன் விருதுகள் வரைக்கும் அழைத்துவந்திருக்கிறதே... வேறு என்ன வேண்டும்?’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism