Published:Updated:

``2.0வை முந்தியது காலா’’ - ஏப்ரல் 27-ல் ரிலீஸ்!

``2.0வை முந்தியது காலா’’ - ஏப்ரல் 27-ல் ரிலீஸ்!
``2.0வை முந்தியது காலா’’ - ஏப்ரல் 27-ல் ரிலீஸ்!

ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள காலா படம் வரும் ஏப்ரல் 27-ம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் காலா. இருவரது கூட்டணியில் வெளிவந்த கபாலி, ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, ரஜினி - ரஞ்சித் கூட்டணியில் 2-வது பட அறிவிப்பு வெளியானது. அறிவிப்பு வெளியானதிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவியது. படத்தின் பெயர் 'காலா' என்று தெரிந்த உடனே, இந்தப் படத்துக்கும் மும்பைக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. அதற்குப் பதிலளிக்கும் விதமாக, படத்தின் இயக்குநர் பா.ரஞ்சித், ``காலா திரைப்படம் மும்பைவாழ் திருநெல்வேலி மக்களின் கதைக்களம்’’ என்று தெரிவித்திருந்தார். 

ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ், தனது வுண்டர்பார் பிலிம்ஸ் பேனரில் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ரஞ்சித்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். காலா படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் நடந்துவந்தன. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.0 பட ரிலீஸுக்குப் பின்னரே, காலா ரிலீஸ் இருக்கும் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், 2.0 படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகம் என்பதால், அதற்காகக் கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக ஒரு தகவல் வெளியானது. இதையடுத்து, காலா படத்தின் போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் வேகமெடுக்கத் தொடங்கின. இந்தநிலையில், காலா படம் வரும் ஏப்ரல் 27-ல் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தயாரிப்பாளரான தனுஷ், இதை சமூக வலைதளங்கள் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். 
 

அடுத்த கட்டுரைக்கு