Published:Updated:

வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!

வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!

இளசுகளின் இன்ஸ்பிரேஷன் தொடர்! Season 3, episode 3Director Raja

வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!

இளசுகளின் இன்ஸ்பிரேஷன் தொடர்! Season 3, episode 3Director Raja

Published:Updated:
வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!

"பாலசந்தர் சார் இன்டர்வியூவில் பாஸ் ஆனேன்!"

டியர் ஃப்ரெண்ட்ஸ்... நம்ம சந்திப் போட மூணாவது எபிசோடு இது!

மொத்த வாழ்க்கையிலும் சந்தோஷ மான சேப்டர்... பெரும்பாலும் எல்லோருக் கும் காலேஜ் லைஃபாதான் இருக்கும். என்னோட கல்லூரிச் சாலைப் பயணத்தை உங்ககிட்ட ஷேர் பண்றேன்..!

சினிமாதான் என்னோட எதிர்காலம்னு முடிவு செய்த பிறகு, ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்ல சேர்ந்து படிக்க ஆசைப்பட்டேன். ஆனா, அங்க படிக்கிறதுக்கு ஒரு டிகிரி முடிச்சிருக்கணும். அதனால, சென்னை நியூ காலேஜ்ல பி.ஏ., கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப் சேர்ந்தேன். அப்பாவோட தயாரிப்பு வேலைகளில் உதவியா இருக்கலாம்னு யோசிச்சு தேர்ந் தெடுத்த கோர்ஸ் அது.

வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காலேஜ் முதல் நாள்... சீனியர்ஸ் ரேகிங்ல சிக்கிக்கிட்டேன். ‘மீசையை எடுத்துட்டு வா தம்பி’னு என்னை அவங்க அமுல் பேபி ஆக்கினதை மறக்கவே முடியாது. அப்போ ரேகிங் பயங்கரமா இருக்கும். நான் ஒரு சினிமா புரொட்யூசர் பையன்னும் யார்கிட்டயும் சொல்லமாட்டேன். அப்புறம் எப்படித்தான் இந்த ரேகிங்கை சமாளிக்கிறது? ஐடியா! சீனியர் ஒருத்தரோட வீட்டுக்கு நேரா போய் சரண்டர் ஆகிட்டேன். அவர் தயவால ரேகிங்கில் இருந்து தப்பிச்சாச்சு.அப்புறம் நாம சீனியர் ஆனதும், நமக்கும் ஒரு கெத்து ஃபார்ம் ஆயிருச்சு.

அப்போ தமிழ்நாட்டுல முதல் முதல்ல கறுப்பு கலர் ஆர்.எக்ஸ்.100 மாடல் யமஹா பைக் லான்ச் ஆக, சென்னையிலேயே நான்தான் முதல்ல அந்த பைக்கை வாங்கினேன். அதேபோல, ரவி காலேஜ் படிச்சப்போ, தமிழ்நாட்டில் அந்த நேரத்தில் லான்ச் ஆன `ஹீரோ ஹோண்டா சிபிஇஸட் பைக'்கை, சென்னையிலேயே முதல்ல வாங்கினது ரவிதான். ‘அப்பா பைக் வேணும்...’னு கேட்டு நாங்க நின்னதும், கடமைக்கு வாங்கித் தராம, ‘அந்த புது மாடல் பைக் வரப்போகுதாம்... பொறுத்து வாங்குங்க...’னு எங்க ஆசைகளை இப்படியெல்லாம் மெருகேற்றி நிறைவேற்றி வைக்கிற அப்பா கிடைச்சவங்க நாங்க.

`எப்படா அந்த பி.ஏ டிகிரி முடியும்... எப்படா ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்'ல சேர்வோம்னு பல்லைக் கடிச்சிட்டுக் காத்திருந்தேன். அட்டெண்டன்ஸ் தேவைக்கு மட்டுமே நான் காலேஜ் போவேன். மற்ற நேரம் எல்லாம் அப்பாவோட எம்.எம். ப்ரிவ்யூ தியேட்டர்தான் என்னோட குருகுலம். காலேஜைக் கட் அடிச்சிட்டு, ஆந்திராவுல நடக்கிற அப்பாவோட பட ஷூட்டிங் பார்க்கப் போயிடுவேன். இப்படி சினிமா மோகத்தில் சரியா படிக்காம, 16 அரியர்களோட கடைசி செமஸ்டர் வந்து சேர்ந்தேன். ஆனா, அத்தனையையும் மொத்தமா அந்த செமஸ்டர்ல க்ளியர் செஞ்சுட்டேன். அப்பா வேலையில் பிஸியா இருந்ததால, தப்பிச்சேன். அம்மாவுக்கு எங்களோட ஆல் சேட்டைகள் தெரியும். இருந்தாலும் எங்களை நம்பி, பக்கபலமா இருப்பாங்க.

வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!

பி.ஏ முடிச்ச நேரம், எனக்கு அற்புதமான அனுபவத்தை ஏற்படுத்தித் தந்தார் அப்பா. அவர் 1964 - 1994 வரை ஒவ்வொரு வருஷமும் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல்ல தவறாமல் கலந்துக்குவார். 1995-ல், மும்பையில நடந்த ஃபிலிம் ஃபெஸ்டிவலுக்கு என்னை அனுப்பிவெச்சார். ‘அங்க போடுற படத்தை எல்லாம் அப்பாவும், பையனும் சேர்ந்து உட்கார்ந்து பார்க்கிறது சங்கடமா இருக்கும். அதுவுமில்லாம, சினிமா சினிமானு பைத்தியமா இருக்கிறவனுக்கு, அவன் பார்க்கிற சினிமாவைத் தாண்டி அந்தப் படைப்புலகம் எவ்வளவு பெருசுனு அங்க போய் பார்த்து தெரிஞ்சுட்டு வரட்டும்’னு அம்மாகிட்ட அப்பா சொல்ல... ராஜாவுக்கு டிக்கெட் போட்டாச்சு.

இப்போவெல்லாம் எல்லா மொழிப்படங்களையும் வீட்டில்... சேனலில், யுடியூபில்னு பார்க்கலாம். ஆனா, அந்தக் காலகட்டத்துல ஃபிலிம் ஃபெஸ்டிவல்தான் உலகின் எல்லா மொழிப் படங்களையும் ஒரே இடத்தில் இருந்து பார்க்கிறதுக்கான மிகப்பெரிய வாய்ப்பு. நான் முதல் முறையா அதில் கலந்துக் கிட்டது, பல மொழிப் படங்களை, பல மொழிக் கலைஞர்களைக் கண்டு வியந்தது, நான் அதுவரை பார்த்திடாத, சினிமா கலையின் வேறொரு பரிமாணம், வேறொரு உயரம் கண்டு பிரமிச்சதுனு... அந்த அனுபவத்தோட வீடு திரும்பினப்போ டைரக்‌ஷன் ஆசை எனக்கு இன்னும் முறுக்கேறிடுச்சு. அந்த வேகத்தோட ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்ல விண்ணப்பிச்சேன்.

வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!

இப்போ நிறைய ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்கள் இருக்கு. ஆனா... அப்போ சென்னை தரமணி, புனேனு ரெண்டு ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்கள்தான். தரமணியில் ஒவ்வொரு வருஷமும் ஒவ்வொரு துறையிலும் 11 பேருக்கு மட்டும்தான் அட்மிஷன். டைரக்‌ஷன் கோர்ஸுக்கு விண்ணப்பிச்சிருந்த நான், எழுத்துத் தேர்வில் பாஸ். அடுத்தது, இன்டர்வியூ. லெஜண்ட்ரி இயக்குநர் கே.பாலசந்தர் சார் உட்பட மூணு இயக்குநர்கள் என்னை இன்டர் வியூ செய்தாங்க. சினிமா குறித்த என் பார்வை, ஆசை பத்தியெல்லாம் கே.பி. சார் எங்கிட்ட கேட்ட கேள்விகளுக்கு நான் தந்த பதில்களில், ‘பையன் ஓ.கே.’னு டிக் செய்துட்டாங்க. ஸீட் கிடைச்சிடுச்சு.

ரொம்ப கூச்ச சுபாவம் கொண்டிருந்த எனக்கு, ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் சேர்ந்த பிறகுதான் கூச்சம், தயக்கம், பயம் எல்லாம் விலகிச்சு. கோர்ஸ் படிக்கும்போது மூணு ஷார்ட் ஃபிலிம்கள் எடுத்தேன். அதுல ஒரு ஃபிலிமில் ரவி ஒரு பாட்டுல நடிச்சான். அதேபோல, ரவி விஸ்காம் படிச்சப்போ அவன் எடுத்த ஒரு ஷார்ட் ஃபிலிம்ல நான் நடிச்சேன். இப்படி நாங்க ரெண்டு பேரும் அப்போவே கைகோத்துதான் சினிமா கத்துக்கிட்டோம்.

‘உன் நண்பர்களைச் சொல்; உன் கேரக்டரை சொல்றேன்’னு சொல்வாங்களே... அந்த மாதிரி என்னோட வேவ்லெங்க்த்தில் பொருந்திப்போற மாதிரி, இன்ஸ்டிட்யூட்ல எனக்கு பாஸ்கர், முருகேஷ், பாலான்னு மூணு நண்பர்கள் கிடைச்சாங்க. நாங்க நாலு பேரும் ஒரு கேங். இதுல என்னோட பாஸ்கர்தான் சமீபத்துல வெளியான `பெங்களூரு நாட்கள்' படத்தோட இயக்குநர். அவன் தெலுங்கில் இயக்கின `பொமரில்லு' படம்தான் தமிழ்ல நான் ரீமேக் செய்த `சந்தோஷ் சுப்ரமணியம்'. நாங்க சினிமா, சினிமானு தேடி, பார்த்து, பேசித் திரிவோம். ஒருமுறை ஏலகிரிக்கு ஒரு ஷார்ட் ஃபிலிம் டிஸ்கஷனுக்குனு கிளம்பிப்போயிட்டு, நல்லா சுத்திப் பார்த்துட்டு, அங்கிருந்து கிளம்பும்வரை ஸ்கிரிப்ட்டுக்கு எந்த வேலையும் செய்யல. ஆனா, வழியில் திடீர்னு ஞானோதயம் வந்து, டிராவல்லயே ஸ்கிரிப்டை முடிச்சுட்டோம்.

வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!

என் காலேஜ் வாழ்க்கையின் பெரிய சந்தோஷம்... பிருந்தா. என் மனைவி. ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்ல நான் படிச்சப்ப, என் பேராசிரியரோட பொண் ணான பிருந்தா ஒளிப்பதிவுக்கான கோர்ஸ் படிச் சாங்க. அவங்க அதுல கோல்டுமெடல் வாங்கின ஒரு படிப்பாளி. ரெண்டு பேரும் நண்பர்களா அறி முகமாகி, காதலர்கள் ஆனோம். இரு வீட்டார் சம்  மதத்தோட டும் டும் டும். இப்போ ஹேப்பி கபிள்ஸ்.

இந்த ராஜா இயக்குநரான கதையை, பிப்ரவரி 23-ம் தேதி வர்ற ‘அவள் 16’-ல் பகிர்ந்துக்கிறேன். 

டேக் கேர்!

கு.ஆனந்தராஜ், படங்கள்:எம்.உசேன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism