``போடா போ... நான்லாம் உனக்கு செட்டாக மாட்டேன்!’' ஹீரோயின்களின் காதல் ஒன்லைனர்கள் #ValentinesDay

காதல்

தமிழ் சினிமாவும் காதலும் பிரித்துப் பார்க்கவே முடியாத அம்சம். பாகவதர் காலம் தொடங்கி ஜி.வி.பிரகாஷ் காலம் வரை, கதாநாயகர்கள் தங்கள் காதலை நாயகியிடம் விதவிதமாக வெளிப்படுத்துவது ரொம்பவே பிரபலம். ஆனால், கதாநாயகிகள் காதலை வெளிப்படுத்துவது, தமிழ் சினிமாவில் அரிதாக நடக்கும் விஷயம். அப்படியான சில படங்களில் நாயகிகள் பேசிய வார்த்தைகள், சோஷியல் மீடியாக்களில் செம வைரல். ஹீரோயின்களின் அந்தக் காதல் ஒன் லைனர்கள் சிலவற்றைப் பார்ப்போமா? 

surya

வாரணம் ஆயிரம் - திவ்யா 

வாரணம் ஆயிரம்' படத்தில் சூர்யா, சமீரா ரெட்டியைக் காதலிப்பார். சமீராவின் மரணத்துக்குப் பிறகு, சூர்யாவின் தங்கைக்குத் தோழியாக வரும் திவ்யா, மழை விடும்வரை பேருந்து நிலையத்தில் காத்திருப்பார். தனது பெஸ்ட் ஃப்ரெண்டாக திவ்யா இருப்பார் என்று சூர்யா நினைத்திருக்க, "Surya i am in love, with you, ரொம்ப நாளாவே... உனக்கு 17 எனக்கு 15 அப்போதிருந்தே" என அழகாக புரபோஸ் பண்ணுவார். 

நயன்தாரா

ராஜா ராணி - நயன்தாரா 

அநியாயத்துக்கு அப்பாவியாக இருப்பார் ஜெய். அவர் மொபைலுக்கு புதிய எண்ணிலிருந்து அழைத்து, ஐ லவ் யூ சொல்வார் நயன்தாரா. அதுபற்றி கேட்க நண்பனுடன் சென்று நயன்தாராவிடம் விசாரிப்பார் ஜெய். 'அது என் நம்பர் இல்லை' என நயன்தாரா சொன்னதும் திரும்பிச் செல்வார். அவரை அழைத்து... 

" எவனோ ஒருத்தன், உனக்கு யாரு ஃபோன் பண்ணி ஐ லவ் யூ சொன்னாலும் அது  நான் தான்னு சொல்றான், உனக்குத் தோணல இல்லே ". என மிரட்டலாக புரபோஸ் செய்வார். 

ஜெயம் ரவி நயன் தாரா


தனி ஒருவன் - நயன்தாரா 

காவல் பணிக்கான பயிற்சிக் காலத்தில் ஜெயம் ரவியிடம் தன் காதலைத் தெரிவிக்கும் நயன்தாரா... 

"எனக்கு புரபோஸ்லாம் பண்ணத் தெரியாது. முன்னே பின்னே இருந்தா அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ. மனசுல இருந்ததை அப்படியே சொல்லிட்டேன்" என யதார்த்தமாகப் பகிர்ந்துகொள்வார். 

சிம்பு வரலட்சுமி


போடா போடி - வரலட்சுமி 

லண்டனில் நடக்கும் கதையான 'போடா போடி' படத்தில், சிம்புடன் 24 மணி நேரம் ஊர் சுற்றும் வரலட்சுமி, பிறகு... 

''அர்ஜூன் ஃபர்பெக்ட் ஃபார் மீ. வெக்கத்தை விட்டுச் சொல்லவா... ஐ லவ் யூ" என்பார். 

vijay sneha


வசீகரா - சினேகா 

'வசீகரா' படத்தில், நிச்சயதார்த்தம் முடிந்து ஓரிரு நாள்களில் திருமணம் நடக்கப்போகும் கேரக்டர் சினேகாவுக்கு. இந்த இடைப்பட்ட காலத்தில், விஜய் மீது காதல் ஏற்பட்டுவிடும். இருவரும் கோயிலுக்குச் செல்கையில், கடவுளிடம் வேண்டிக்கொள்வதைப் பற்றிய உரையாடலின்போது... 

"நான் இப்ப ஆண்டவன்கிட்ட வேண்டிகிட்டதே நீங்க எனக்குக் கிடைக்கணும்னுதான். உன்னைப் பிடிச்சிருக்கு பூபதி" என ஷாக் புரொபோஸ் தருவார். 

karthi

'மெட்ராஸ்' - தெரசா கேத்ரீன் 

வட சென்னை, ஹவுசிங் போர்டு பகுதியில் நடைபெறும் 'மெட்ராஸ்' படத்தின் கதையில், கார்த்தி மீதான காதலைச் சொல்ல வரும் கேத்ரீன் தெரசா... 

"நீதான் வேண்டும். கல்யாணம் பண்ணிக்கிறியா?" எனச் சொல்வது ரொம்பவே ஃபேமஸ்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!