Published:Updated:

டீச்சர் லவ், பல முறை 'பல்ப்', காருக்குள்ள செல்ஃபி, 'தீரன்' படம் - காதல் சொல்லும் காளி வெங்கட். #LetsLove

டீச்சர் லவ், பல முறை 'பல்ப்', காருக்குள்ள செல்ஃபி, 'தீரன்' படம் - காதல் சொல்லும் காளி வெங்கட். #LetsLove

டீச்சர் லவ், பல முறை 'பல்ப்', காருக்குள்ள செல்ஃபி, 'தீரன்' படம் - காதல் சொல்லும் காளி வெங்கட். #LetsLove

டீச்சர் லவ், பல முறை 'பல்ப்', காருக்குள்ள செல்ஃபி, 'தீரன்' படம் - காதல் சொல்லும் காளி வெங்கட். #LetsLove

டீச்சர் லவ், பல முறை 'பல்ப்', காருக்குள்ள செல்ஃபி, 'தீரன்' படம் - காதல் சொல்லும் காளி வெங்கட். #LetsLove

Published:Updated:
டீச்சர் லவ், பல முறை 'பல்ப்', காருக்குள்ள செல்ஃபி, 'தீரன்' படம் - காதல் சொல்லும் காளி வெங்கட். #LetsLove

சின்ன ரோல், பெரியல் ரோல் என எதுவாக இருந்தாலும் சரி, அந்த கேரக்டருக்கு உயிரோட்டம் கொடுத்து அப்ளாஸ் அள்ளுவது காளி வெங்கட்டின் ஸ்பெஷல். திருமணமாகி சில மாதங்களே ஆன, காளி வெங்கட்டிடம் காதல் குறித்து ஜாலி டாக்!
 

உங்களுடைய முதல் புரபோஸல் எப்போ பண்ணீங்க?

"நான் இதுவரை புரபோஸ் பண்ணதில்லை. ஆனா, நிறைய பேர்மேல க்ரஷ் வந்திருக்கு. நான் மூணாவது படிக்கும்போது எங்க டீச்சர்மேல எனக்கு செம க்ரஷ். அவங்களைத்தான் முதல்ல லவ் பண்ணேன். எண்ணெய் வெச்சுத் தலை சீவி, மல்லிகைப் பூ வெச்சு, மஞ்சள் வெச்சு ரொம்ப அழகா இருப்பாங்க. நான் நாலாவது போனதுக்கு அப்புறம்கூட, மூணாங் க்ளாஸுக்குப் போய் அவங்களைப் பாத்துட்டுதான் என் க்ளாஸுக்குப் போவேன். பெங்களூர்ல இருந்து எங்க ஊருக்கு வேலைக்கு வந்த பொண்ணுகிட்ட புரபோஸ் பண்ணணும்னு நினைச்சு, தைரியம் வரவெச்சுட்டுப் போனா, அதுக்குள்ள அந்தப் பொண்ணு ஊருக்குப் போயிடுச்சு"   

காதல்ல சொதப்பிய அனுபவம் இருக்கா?   

"அந்தப் பொண்ணுதான் நம்ம காதலினு கனவு கண்டுவெச்சிருப்போம். அது பேச்சு வாக்குல அப்படியே 'அண்ணா'னு சொல்லிடும். அந்த நேரத்துல 'சட்டை கிழிஞ்சிருந்தால்...'னு பாட்டு பேக்ரவுண்ட்ல ஓட ஆரம்பிச்சிடும். அந்தமாதிரி நிறைய முறை 'பல்ப்' வாங்கிருக்கேன். மத்தபடி காதல் பண்ணாதானே சொதப்புறதுக்கு?"

உங்க காதலிக்கு முதல் முதல்ல என்ன கிஃப்ட் கொடுக்கணும்னு நினைச்சீங்க?

"நான் எனக்கு வரப்போற காதலிக்கு ஒரு கிஃப்ட்டைக் கொடுக்கணும்னு நினைச்சு யோசிச்சு யோசிச்சு கடைசியா ஒரு ஐடியா கிடைச்சது. நம்ம லவ் அமையாததுனால, இந்த ஐடியாவை என் குருநாதர் விஜய் பிரபாகரனுக்கு யூஸ் பண்ணிட்டேன். அது என்னன்னா, முகம் பார்க்குற கண்ணாடியை வாங்கி அதுல,  'இந்த பிம்பத்தினும் சிறந்த பரிசு இருப்பதாய் தோன்றவில்லை'னு ஒட்டிக் கொடுத்துட்டேன்."

உங்க மனைவியுடன் எடுத்த முதல் செல்ஃபி? 

"அந்தத் தருணம் சர்ப்ரைஸா இருந்துச்சு. கல்யாணம் முடிஞ்சு மணக்கோலத்துல வீட்டுக்கு கார்ல போகும்போது,  எல்லாரும் தூங்கிட்டாங்க. நாங்க ரெண்டு பேரும் மட்டும்தான் முழிச்சிருந்தோம். அப்போ, அவங்கதான் 'ஒரு செல்ஃபி எடுக்கலாமே'னு கேட்டாங்க. நானும் 'ஓ...எடுக்கலாமே'னு சொல்லி ஒரு செல்ஃபியை எடுத்துவிட்டுட்டோம்"
 

புரபோஸ் பண்ண காரணமும் அவங்க ஏத்துக்கிட்ட காரணமும்?

"நாம்தான் புரபோஸ் பண்ணலையே. சரி, நான் என் மனைவிக்கும் எனக்குமான காதலைப் பத்தி சொல்றேன். அவங்ளை எனக்குப் பிடிச்ச காரணம், அவங்க டீச்சர்ங்கிறதுதான். ஒருவேளை, அந்த மூணாங் கிளாஸ் டீச்சர் வைப்ரேஷனா இருந்தாலும் இருக்கும்னு நினைக்கிறேன். அவங்க என்னை முதல்ல வேணாம்னு சொல்லிட்டாங்க. அப்புறம், கூட இருக்கவங்க என்னைப் பத்தி சொல்லச் சொல்ல அவங்களுக்கும் பிடிச்சுப்போச்சுனு எங்கிட்ட சொல்லிருக்காங்க. "

உங்களுக்கும் உங்க மனைவிக்கும் வந்த முதல் சண்டை எப்போ?

"ஒரு வாரத்துலயே சண்டை வந்துடுச்சு. காலையில அவசரமா கிளம்பிட்டு இருந்தேன். அப்போ, 'எங்க போகணும்?'னு கேட்டாங்க. எனக்கு அப்படிக் கேட்டா பிடிக்காது. 'நாலஞ்சு இடத்துக்குப் போக வேண்டியிருக்கு. எல்லாமே விளக்கமா சொல்லணுமா? என்னை கன்ட்ரோல் பண்ண ட்ரை பண்ணுறியா?'னு கேட்டு கோபப்பட்டுட்டேன். அதுதான் எங்களுக்குள்ள வந்த முதல் சண்டை. "

நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் ஆனபிறகு, முதல் முறையா வெளியே போன இடம்? 

"பாண்டிச்சேரிதான் முதல்ல போனோம். நான் காரை ஓட்டிட்டு, பாட்டை போட்டுட்டு ஜாலியா ரெண்டு பேரும் ஆஹா.. உண்மையாவே செம ஃபீல்ங்க"

உங்க காதலை எந்தப் படத்தோட ரிலேட் பண்ணுவீங்க? 

" 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தைதான் ரிலேட் பண்ணுவேன். அந்தப் படம் பார்க்கும்போது பயங்கர ஷாங்கிங்கா இருந்துச்சு. 80 சதவிகித டயலாக் நாங்க வீட்ல வழக்கமா பேசுறதுதான். என்னைவிட ஜனனி அடிக்கடி ரிலேட் பண்ணுவாங்க. 'சின்னச்சின்ன கண்ணசைவில்' பாட்டை தினமும் ஒரு முறையாவது கேட்காமல் இருக்கமாட்டாங்க. அதுல வர்ற கார்த்தி - ரகுல் ப்ரீத் சிங்தான் நானும் என் மனைவி ஜனனியும்னு ஒரு ஃபீல் இருக்கும்"
 

கோபம் வந்தா உங்களுக்குள்ள அடிக்கடி திட்டிக்குற வார்த்தை என்ன? 

" 'லூசு'னுதான் ஃபர்ஸ்ட் வாயில வரும். மத்த வார்த்தைகள் எதுமே டக்குனு சொல்ல வரமாட்டேங்குது"
 

பிடிச்ச காதல் பாடல், காதல் தோல்வி பாடல்கள்ல உங்க சாய்ஸ்?

"பிடிச்ச காதல் பாடல் - 'ஒரு நாள் கூத்து' படத்துல வர்ற 'அடியே அழகே'. இது காதல் தோல்வி பாடலானு தெரியலை. ஆனா, '7G ரெயின்போ காலனி' படத்துல 'நினைத்து நினைத்து பார்த்தால்' பாட்டை கேட்டா மனசுல ஒரு கனம் இருக்கும். இது ரெண்டும்தான் என்னோட ஃபர்ஸ்ட் சாய்ஸ். "

பிரேக்அப் ஆனவங்களுக்கு உங்களின் அட்வைஸ் என்ன? 

"பிரேக்அப் ஆகிடுச்சுன்னா, அவங்களுக்கு என் வாழ்த்துகளை சொல்வேன். ஏன்னா, கமிட்மென்ட்டுதான் கஷ்டம், பிரேக்அப்னா எவ்ளோ ஃப்ரீயா இருக்கலாம். பிரேக்அப்பை நினைச்சு நினைச்சு பலர் அவங்க சுயமரியாதையை இழக்குறாங்க. அதுமாதிரி இல்லாமல் சந்தோசமா இருக்கணும். அதை நினைச்சு வருத்தப்பட்டா அவங்க இன்னும் அப்டேட் ஆகலைனு அர்த்தம். "