Published:Updated:

`விசுவாசம்' இமானின் நெகிழ்ச்சி..! வாழ்த்திய அனிருத்

`விசுவாசம்' இமானின் நெகிழ்ச்சி..! வாழ்த்திய அனிருத்
`விசுவாசம்' இமானின் நெகிழ்ச்சி..! வாழ்த்திய அனிருத்

'விசுவாசம்' படத்தின் இசையமைப்பாளர் இமான் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று மாலை வெளி வந்தது. இயக்குநர் சிவா மற்றும் அஜித் கூட்டணி நான்காவது முறையாக இணைவதும், அஜித்- நயன் தாரா நான்காவது முறையாக இணைவது எனப் பல ஸ்பெஷல்கள் விசுவாசம் படத்தில் இருக்கிறது. இந்த வகையில் இசையமைப்பாளர் இமானுக்கு மிகவும் ஸ்பெஷலாக இருக்கும் 100 படங்களுக்குமேல் இசையமைத்துள்ள இமான் முதன் முறையாக 'தல' அஜித்துக்கு இசையமைக்கிறார். இது 101 வது படம் என்றால் இன்னும் ஸ்பெஷல் இருக்கிறது இமான் இசையமைத்த வெளியான முதல் படம் தளபதி விஜய் நடித்தத் தமிழன். 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தவுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியாக ஆங்கிலப் பதிவை ஒன்றை ட்வீட்டிட்டார் இமான். அதில் குறிப்பிடிருந்ததாவது "பல பேர் என்னிடம் வெகு நாட்களாக கேட்ட ஒரே கேள்வி 'எப்பொ  'தல' படத்துக்கு மியுசிக் கம்போஸ் பண்ணப் போறீங்க?' அந்த கேள்விக்கு இப்போ பதில் எனக்கு கிடைத்துள்ளது. விசுவாசம் படத்திற்கு இசையமைக்கிறேன். சிவா சார் மற்றும் சத்யஜோதி நிறுவனத்திற்கு நன்றி" எனத் தெரிவித்திருந்தார். 

இதற்கு பல பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். தல அஜித்துக்கு கடைசி இரண்டு படங்களுக்கு இசையமைத்தவர் அனிருத் இமானுக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட்டிட்டிருந்தார். இரண்டு இசையமைப்பாளர்களுக்குள் இருக்கும் இந்த நட்பு  இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவெற்பைப் பெற்றிருக்கிறது . அதே வேளையில் 'ப்ரோ படத்துல நீங்க பாடனும்னு" பலரும் அனிருத்திற்கு பதில் ட்விட் இட்டு வருகிறார்கள். இமான் ப்ரோ என்ன முடிவெடுக்கிறார் என்று பொருத்திருந்து பார்ப்போம்.