Published:Updated:

" 'மெர்குரி' ஸ்பெஷல், 'சீமராஜா', அனுஷ்கா வாய்ஸ், நாச்சியார் சர்ச்சை..." #QuickSeven

" 'மெர்குரி' ஸ்பெஷல், 'சீமராஜா', அனுஷ்கா வாய்ஸ், நாச்சியார் சர்ச்சை..." #QuickSeven
" 'மெர்குரி' ஸ்பெஷல், 'சீமராஜா', அனுஷ்கா வாய்ஸ், நாச்சியார் சர்ச்சை..." #QuickSeven

னுஷ்கா தனது 12 வருட சினிமா வாழ்க்கையில் 47 படங்களில் நடித்தவர். இதில் ஒருபடத்தில் கூட இவர் டப்பிங் பேசியதில்லை. சமீபத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய இவர் இதற்கான காரணத்தைக் கூறியுள்ளார். "என் தோற்றத்தைப் போல் என் குரல் இருக்காது. நான் நடிக்கும் கதாபாத்திரங்களுக்குக் கம்பீரமான குரல் தேவை. அதற்கு குழந்தை போல் பேசினால் காமெடியாக இருக்கும். என் வீட்டில் இருப்பவர்களே எனது குரல் குழந்தை போல் இருக்கிறது என்று கிண்டல் செய்வார்கள்." என்று கூறியுள்ளார். 

பீட்சா புகழ் கார்த்திக் சுப்பராஜின் அடுத்தபடம் 'மெர்குரி'. பிரபுதேவா, இந்துஜா, ரம்யா நம்பீசன் நடித்துள்ள இந்தப் படம் சைலன்ட் த்ரில்லர் கதையாக உருவாகியிருக்கிறது. இப்படம் முழுக்க டயலாக் எதுவும் இல்லாமல் மௌனமாகவே எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த மாதிரியான புதிய முயற்சிகொண்ட படம் வருகிற ஏப்ரல் மாதம் 13- ம் தேதி அன்று தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் திரைக்கு வர இருக்கிறது. 

மிழ் மற்றும் தெலுங்கு படங்களோடு இந்தியிலும் அவ்வபோது நடித்து வருகிறார் எமி ஜாக்சன். தற்போது 'சூப்பர் கேர்ள்' எனும் ஹாலிவுட் சீரீஸில் நடித்து வருவதால் இனி இந்திய படங்களில் நடிக்க மாட்டார் என்று கூறப்பட்டு வந்தது. மேலும், இவர் கதாநாயகியாக நடித்து வெளிவர இருக்கும் 2.0 படம் இந்த ஆண்டு வெளியாகும் நிலையில் இருக்கிறது. அதோடு இந்தியில் சல்மான்கான் நடிக்கும் 'கிக்-2' படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், சல்மான்கானுக்கு ரேஸ்-3 படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிற காரணத்தினால், இப்படத்தின் படப்பிடிப்பு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. 

மிழ் மற்றும் இந்தி படங்களில் நடித்துவரும் 'அதா ஷர்மா' தற்போது 'சார்லி சாப்ளின்-2' படம் மூலம் தமிழுக்கு வர இருக்கிறார். இந்தப் படத்தில் நிக்கி கல்ராணியுடன் சேர்ந்து இரண்டாவது ஹீரோயினாக இவர் நடித்து வருகிறார். மேலும், இவர் சிம்பு நடித்த 'இது நம்ம ஆளு' படத்தில் ஒரேயொரு பாடலுக்கு  மட்டும் நடனம் ஆடியவர். 'கமாண்டோ', 'ஹஸீ தோ பஸீ', 'பிர்' போன்ற படங்கள் இவர் நடித்ததில் குறிப்பிடத்தக்கது. சார்லி சாப்ளின் படத்தின் முதல் பாகத்தை இயக்கிய சக்தி சிதம்பரம் இதன் இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். 

திருமணத்துக்குப் பிறகும் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் சமந்தா. 'இரும்புத்திரை', 'மகாநதி', 'சூப்பர் டீலக்ஸ்' ஆகிய படங்களின் ஷூட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் சமந்தா கேரவேனில் சமையல் காரரை வைத்து சமைத்து சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இவர் சமந்தாவின் ஷூட்டிங் ஸ்பாட் அத்தனைக்கும் கூடவே சென்று சமைத்துக் கொடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஃபார்முலாவை தற்போது காஜல் அகர்வாலும், தம்மனாவும் பின்பற்ற தொடங்கியுள்ளனர். இவர்களும் தங்களது சமையல்காரரையும் உடன் அழைத்துச் செல்ல இருப்பதாகத் திட்டமிட்டுள்ளார்.   

சிவகார்த்திகேயன் பொன்ராம் இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்திற்கு 'சீமராஜா' என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. இவரது சென்ற படத்தை தயாரித்த ஆர்.டி. ராஜா இப்படத்தையும் தயாரிக்கிறார். இமான் இசையமைப்பில் சமந்தா சூரி மற்றும் பலர் இதில் நடிக்கின்றனர். இப்படம் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என்று படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். 

பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜீவி பிரகாஷ், இவானா மற்றும் பலர் நடித்து நேற்று திரைக்கு வந்த படம் 'நாச்சியார்'. இதில் ஜோதிகா பேசிய வசனம் ஒன்று தற்போது சர்சையைக் கிளப்பியுள்ளது. "கோவிலாக இருந்தாலும் சரி, குப்பை மேடாக இருந்தாலும் சரி...எங்களுக்கு எல்லாமே ஒன்றுதான்" என்று ஜோதிகா பேசிய வசனம் இந்துக்களை துன்புறுத்தும் வகையிழும், இந்து கோவில்களை அவமதிக்கும் வகையிலும் அமைத்துள்ளது. இந்த வசனத்தை படத்திலிருந்து உடனே நீக்க வேண்டும் இல்லையெனில் ஜோதிகா மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியினர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்துள்ளனர்.