கலாய்
Published:Updated:

சினிமால்!

சினிமால்!
பிரீமியம் ஸ்டோரி
News
சினிமால்!

சினிமால்!

‘யான்’ படத்துக்குப் பிறகு இடைவெளி எடுத்துக்கொண்ட ஜீவாவுக்கு ‘போக்கிரி ராஜா’வும் ஹிட் அடிக்காததால், மார்க்கெட்டை மனதில் வைத்து அடுத்தடுத்து கிடைக்கும் வாய்ப்புகளையெல்லாம் ஓகே செய்து விடுகிறாராம். சமீபத்தில் கமல் உதவியாளர் ஹரி என்பவர் சொன்ன பேய் கதைக்கு ஓகே சொல்லி ஷூட்டிங்கும் கிளம்பிவிட்டார். ‘கவலை வேண்டாம்’ படத்தில் நடித்துக்கொண்டே திவ்யா, ராதிகா, சூரியோடு பேய் படத்திலும் நடித்து வருகிறார். வெல்கம் டூ பேய் கிளப் ஜீவா!

சினிமால்!

• தன் ‘தெறி’ படத்தின் ஆல்பம் வி.ஐ.பி ஆல்பமாக இருக்க வேண்டும், பாடல்கள் பட்டையைக் கிளப்ப வேண்டும் என விஜய் சொல்ல அதே மாதிரி உருவாக்கி வருகிறார் ஜி.வி. முக்கிய வி.ஐ.பி-க்களை கூப்பிட்டுப் பாட வைத்துள்ளார். தேவா ஒரு பாடலும், விஜய் இரண்டு பாடலும் பாட குத்துப்பாட்டு மன்னன் டி.ஆரையும் அழைத்து ஒரு பாடலைப் பதிவு செய்துவிட்டார் ஜி.வி. சமீபமாகப் படங்களில் பாட மறுத்து வந்த டி.ஆர்., விஜய் படத்துக்கு எனக் கேட்டவுடனேயே வந்து பாடிக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார். டண்டனக்காங்ணா?

• 10 வருடங்களாக நடித்துவரும் ஹீரோக்களின் பிறந்தநாள் விழாக்கள்கூட இப்படி விமரிசையாக நடந்ததில்லை. ஆனால், அஜித் மகன் ஆத்விக்கின் முதல் பிறந்தநாளை அஜித் ரசிகர்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடித் தீர்த்துவிட்டார்கள். கட் அவுட், பேனர், நலத்திட்ட உதவிகள், அன்னதானம் என முடிந்தவரை சிறப்பாகவே கொண்டாடிவிட்டார்கள். இவற்றைக் கேள்விப்பட்ட அஜித் ரொம்பவே மனம் நெகிழ்ந்துவிட்டாராம். தன்னைப் பார்க்க வீட்டுக்கு வந்த சில ரசிகர்களை வீட்டுக்குள் அழைத்து விருந்தும் பரிமாறினாராம். பிரியாணி விருந்தா?

சினிமால்!

• அபிநயாவுக்குத் தற்போது ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது அபிநயாவுக்கு. ரூபம் ஷர்மா இயக்கும் ‘தி லிட்டில் ஃபிங்கர்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் அவருடன் 56 மாற்றுத் திறனாளி நடிகர்களும் நடிக்க இருக்கிறார்களாம். இன்னும் சில மாதங்களில் படப்பிடிப்பு ஆரம்பமாகிறதாம். கலக்குங்க அபி!

• ஆர்யா நடிக்கும் படத்துக்கு ‘தனிக்காட்டு ராஜா’ என்ற தலைப்பை அதன் இயக்குநர் ‘மஞ்சப்பை’ ராகவன் கேட்க, அதன் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியும் அதற்கான முயற்சிகளில் இறங்கினார். தயாரிப்பாளர் ராமாநாயுடுவிடம்தான் அந்தத் தலைப்புக்கான உரிமை இருந்ததாம். தலைப்புக்கு ஒரு பெரும் தொகையை ராமாநாயுடு தரப்பில் கேட்க, தலைப்புக்கே ஏன் இவ்வளவு செலவு செய்யணும், வேற தலைப்பு யோசிங்க என இயக்குநரிடம் சொல்லிவிட்டாராம் சிக்கனமான தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி. மஞ்சப்பை மாதிரி சின்னதா யோசிங்க சார்!

• ‘சதுரங்க வேட்டை’ படத்துக்குப் பிறகு சூர்யாவுக்கும், அஜித்துக்கும் கதை சொன்னார் இயக்குநர் வினோத். கதை கேட்டு சூர்யா ஓகே சொல்லி நடிக்க ஒப்புக்கொண்டார். லிங்குசாமி தயாரிப்பில் உருவாக இருந்தது படம். இடையில் லிங்குசாமிக்கு ஏற்பட்ட பிரச்னைகளாலும், சூர்யாவோ ‘24’, ‘சிங்கம் 3’ படங்களில் நடிக்கப் போக வினோத் படம் தள்ளிப் போனது. இந்த நிலையில் கார்த்தி நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார் வினோத். ‘மாயா’ படத்தைத் தயாரித்த பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிக்க இருக்கிறது. இதை முடித்துவிட்டு சூர்யா படத்தை இயக்குவாராம். தம்பியிருக்க பயமேன்!

சினிமால்!

• ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தின் மிகப்பெரிய ஹிட்டுக்குப் பிறகு அதே டீம், மீண்டும் அதே மாதிரி ஒரு கதைக்களத்தில் இணைய இருக்கிறதாம். அடல்ட் காமெடியாக உருவாகும் அந்தப் படத்துக்கு ‘விர்ஜின் மாப்ள’ என்று பெயர் வைத்துள்ளார் இயக்குநர் ஆதிக். ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக இரண்டு ஹீரோயின்களாம். முந்தையப் படம் போலவே தூக்கலான காட்சிகளும், வசனங்களும் நிறைய இருக்குமாம். சிம்பு படத்தை இயக்கிக்கொண்டே இந்தப் படத்தையும் இயக்க இருக்கிறார் ஆதிக். மாற மாட்டீங்களாப்பா?

• ‘வாலு’ டீம் இன்னொரு படத்தில் இணைய இருக்கிறதாம். பக்கா ஆக்‌ஷன் படமாக உருவாகும் இந்தப் படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரிக்க இருக்கிறாராம். சிம்புவுக்கு இரண்டு ஜோடிகளாம். அதில் மெயின் ஹீரோயினாக காஜல் அகர்வால் நடிக்க இருக்கிறாராம். காமெடியனாக சூரியிடம் பேசி வருகிறார்களாம். வாலு-2 னு மட்டும் பேர் வெச்சுடாதீங்க பாஸ்!

• மற்ற மொழி ஹீரோயின்களெல்லாம் தமிழ்ப் படத்தில் டப்பிங் பேசுகிறார்கள், பாடுகிறார்கள். ஆனல் தமிழ்ப் பெண்ணான நாம் பாடினால் என்ன என நினைத்த த்ரிஷா, தான் நடித்துவரும் அடுத்த படத்தில் பாட இருக்கிறாராம். தன் மேனேஜர் கிரிதர்தான் தயாரிப்பாளர் என்பதால் அவரிடம் இதைச் சொல்ல அவரும் ஓகே என தலையசைத்து விட்டாராம். அறிமுக இசையமைப்பாளர் இசையில் தன் அறிமுகப் பாடலைப் பாடுகிறார் த்ரிஷா. ஆடிப் பாடி நடிங்க!

சினிமால்!

• கடந்த ஏழெட்டு ஆண்டுகளில் சூர்யாவை வசூல் ரீதியில் காப்பாற்றி வருவது அவரின் சிங்கம் படங்கள் மட்டுமே. அதனாலேயே சூர்யாவுக்கு சிங்கம் சீரீஸ் மீது நம்பிக்கை அதிகம். ‘சிங்கம்’, ‘சிங்கம் 2’ படங்களைத் தொடர்ந்து சூர்யா நடித்து வரும் ‘சிங்கம் 3’ படத்தையும் ரொம்பவே நம்பும் அவர் வில்லன் வேடத்தை மட்டும் சஸ்பென்ஸாக வைக்கச் சொல்லிவிட்டாராம். இன்டர்நேஷனல் அளவில் நடக்கும் கதை என்பதால் வில்லன் பற்றிய விஷயங்களை சஸ்பென்ஸாக வைத்தால், அவை படத்துக்கு ப்ளஸ்ஸாக அமையும் என நம்புகிறாராம். இன்டர்நேஷனல் வில்லனா?

• ஸ்ரீதேவி மகள் ஜான்வியை நாயகியாக அறிமுகப்படுத்த பல தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் முட்டி மோதுகிறார்கள். ஆனால், ஸ்ரீ தேவியோ அமைதியாகத் தன் மகளை லாஸ் ஏஞ்சல்ஸில் அலியா பட் படித்த ஃபிலிம் ஸ்கூலில் படிக்க வைத்துக்கொண்டிருக்கிறார். படித்து முடித்தபின் கரண் ஜோகர் இயக்கத்தில் அறிமுகப்படுத்தலாம் என முடிவெடுத்திருக்கிறாராம். சும்மா நடிப்பதைவிட படித்துவிட்டு நடித்தால்தான் நிலைக்க முடியும் என் நம்புகிறாராம் ஸ்ரீ தேவி. அனுபவசாலி அம்மா!

• விமல், அஞ்சலி நடித்த ‘மாப்ள சிங்கம்’ படம் ரிலீஸ் ஆவதற்கே படாதபாடு பட்டது. அதற்குள் யாரோ ஒரு புண்ணியவான் அந்தப் படத்தின் சென்சார் காப்பியை எடுத்து இணையதளத்தில் ‘பிரேமம்’ படத்தைப் போல லீக் பண்ணிவிட பதறிவிட்டனர் படக்குழுவினர். நல்லவேளையாக அதை யாரும் டவுன்லோடு செய்வதற்குள் கண்டுபிடித்து நீக்கிவிட்டார்கள். இதில் அதிகம் மன உளைச்சலுக்கு ஆளானது அதன் ஹீரோ விமல்தானாம். சோதனை மேல்...