Published:Updated:

தமன்னாவைவிட ஷாலினி பாண்டே சூப்பரா நடிச்சியிருக்காங்க. '100% காதல்' சந்திரமெளலி

தமன்னாவைவிட ஷாலினி பாண்டே சூப்பரா நடிச்சியிருக்காங்க. '100% காதல்' சந்திரமெளலி
தமன்னாவைவிட ஷாலினி பாண்டே சூப்பரா நடிச்சியிருக்காங்க. '100% காதல்' சந்திரமெளலி

தமன்னாவைவிட ஷாலினி பாண்டே சூப்பரா நடிச்சியிருக்காங்க. '100% காதல்' சந்திரமெளலி


நாக சைதன்யா, தமன்னா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் '100 % லவ்'. இந்தப் படம் தற்போது தமிழில் ரீமேக் ஆகியிருக்கிறது. சந்திரமெளலி இயக்கியிருக்கும் இதில், ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஷாலினி பாண்டே ஜோடியாக நடித்திருக்கின்றனர். படம் பற்றிய அப்டேட்ஸூக்காக சந்திரமெளலியிடம் பேசினேன். 

''சினிமாவில் பல வருடங்களாக இருக்கிறேன். '100 % காதல்' படத்தின் தயாரிப்பாளர் சுகுமார் எனக்கு நீண்ட கால நண்பர். அவர்தான் தெலுங்கில் இந்தப் படத்தை எடுத்தார். படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அப்போதே, சுகுமார் என்னை இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்யச் சொன்னார். ஆனா, அப்போது நான் வேறொரு வேலையில் பிஸியாக இருந்ததால், என்னால் தமிழில் உடனடியாக டைரக்‌ஷன் பண்ண முடியலை. இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்யச் சொல்லி நானே இரண்டு டைரக்டர்களிடம் பேசினேன், அவர்களும் பிஸியாக இருந்தனர். 

நிறைய விளம்பரப் படங்கள் எல்லாம் நான் டைரக்‌ஷன் செய்திருக்கிறேன். தெலுங்கு இயக்குநர் அசோக்குமாரிடம் உதவி இயக்குநராய் வேலை பார்த்திருக்கிறேன். அதனால, நாமே டைரக்‌ஷன் செய்யலாம்னு ரீமேக் செய்துவிட்டேன். இந்தப் படத்துக்காக எல்லா நடிகர், நடிகைகளையும் தேர்ந்தெடுத்தது, சுகுமார் சார்தான். 

தெலுங்கு ரீமேக்காக இருந்தாலும், தமிழுக்கு ஏற்ற மாதிரி சில மாற்றங்களைச் செய்திருக்கிறேன். படம் பார்க்கும்போது ஆடியன்ஸூக்கு இந்தப் படம் ரொம்ப பிடிக்கும். படத்துல ஆறு குழந்தைகள் முக்கியமான ரோல்ல நடிச்சிருக்காங்க. இந்தக் குழந்தைகளுக்காகவே தனி ஆடிஷன் நடத்தி தேர்ந்தெடுத்தேன். ஆறு குழந்தைகளும் பியூட்டிஃபுல்லா நடிச்சிருக்காங்க. 

இந்தப் படத்துல ஹீரோவா நடிக்க நிறைய நடிகர்களைப் பார்த்தேன். ஆனா, சின்னப் பையன் கேரக்டருக்கு ஜி.வி-யைத் தவிர, வேற ஆப்ஷன் எனக்குக் கிடைக்கலை. அவரைப் பார்த்தா முப்பது வயசு ஆனமாதிரியே தெரியாது. இன்னும் டீன்ஏஜ் பையன் மாதிரியேதான் இருக்கார். படத்துல அவரோட பெர்ஃபார்மென்ஸும் பிரமாதமா வந்திருக்கு.  

படத்தோட ஹீரோயினா முதல்ல லாவண்யா திரிபாதியைதான் கமிட் பண்ணோம். லண்டன்ல அவரோட போர்ஷன் ஷூட்டிங். ஆனா, கடைசி நேரத்துல கால்ஷீட் பிரச்னை காரணமா, அவரால நடிக்க முடியலை. இந்த விஷயம் எனக்கு ரொம்ப டென்ஷனை ஏற்படுத்திருச்சு. ஏன்னா, அந்தப் பொண்ணால எங்களுக்கு நிறைய நஷ்டம். அவங்ககிட்ட கதையைச் சொல்லித்தான், கமிட் பண்ணோம். கடைசியில அவங்க அப்படிப் பண்ணது எங்களுக்குச் சரியா படலை. தயாரிப்பாளர் சங்கத்துல லாவண்யா திரிபாதி மேல் புகார் கொடுத்தப்போ அந்தப் பொண்ணு, 'தெலுங்கு வெர்ஷன்ல தமன்னா நடிச்சமாதிரியே, இந்தப் படத்துலேயும் என்னை நடிக்கச் சொன்னாங்க. ஆனா, எனக்கு அது பிடிக்கலை'னு சொல்லிட்டாங்க. ஒரு கட்டத்தில் இந்தப் படத்துல நடிக்க தமன்னாவையே நடிக்கவைக்கலாம்னு கேட்டோம். ஆர்வமா இருந்தாங்க, அவங்களுக்கும் கால்ஷீட் பிரச்னையால நடிக்கமுடியாம போச்சு.  

இந்தப் படத்துக்காக ஜி.வி. தொடர்ந்து அறுபது நாள் கால்ஷூட் கொடுத்திருந்தார். 'எந்தப் படத்துக்கும் இவ்ளோ நாள் கொடுத்ததில்லை. படத்துமேல இருக்கிற நம்பிக்கையிலதான் கொடுத்தேன்'னு சொன்னார். லாவண்யா திரிபாதியால படத்தோட டேட்ஸ் தள்ளிப்போயிருச்சு. அப்போதான், 'அர்ஜூன் ரெட்டி' படம்  ரிலீஸாயிருந்துச்சு. சுகுமார் இந்தப் படத்தை பார்த்திருந்தார். அவருக்குப் படத்தின் ஹீரோயின் ஷாலினி பாண்டே நடிப்பு பிடிச்சிருந்துச்சு. நானும் பார்த்தேன். சீரியஸா நடிச்சிருந்தாங்க. இந்தப் படத்துல துறுதுறுனு நடிக்கணும். எனக்கு சரியா இருக்கும்னு தோணுச்சு, ஷாலினுக்கும் இந்தப் படத்தோட கதை பிடிச்சிருந்தது. 

ஷாலினிக்கு இந்திதான் நல்லா தெரியும். தமிழில் ஸ்க்ரிப்ட் சொல்லி படிக்க வைத்தோம். சொல்லிக் கொடுத்ததைவிட, நல்லா நடிச்சாங்க. மத்த எந்த நடிகை நடிச்சிருந்தாலும், இந்தளவுக்குப் பண்ணியிருக்கமாட்டாங்கனு நினைக்கிறேன். இன்னும் சொல்லப்போனா, தமன்னா தெலுங்கில் நடிச்சதைவிட இந்தப் படத்துல ஷாலினி பாண்டே பின்னிட்டாங்க. லாவண்யா திரிபாதி செய்த பிரச்னை காரணமாக லண்டனில் நடக்கவிருந்த ஷுட்டிங்கை கேன்சல் பண்ணிட்டு, நஷ்டம் காரணமா இந்தியாவுக்கு மாத்திட்டோம். 

தெலுங்கில் ரிலீஸாகி இத்தனை வருடங்கள் கழித்து தமிழ்ல ரீமேக் ஆனாலும், கண்டிப்பா ஹிட் ஆகும்னு நம்பிக்கை இருக்கு. ஏன்னா, படத்தோட கதை அப்படி. காதலர்களுக்கு இடையே இருக்கிற ஈகோ பிரச்னையை அழகா காட்டியிருக்கோம். படத்துல டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி ஜி.வி., ஷாலினி ரெண்டு பேரும் நடிச்சிருக்காங்க. இந்தப் படத்துல வழக்கமான ஜி.வியை நீங்க பாக்கமுடியாது. அவருடைய நடை, உடை, பாவனை என எல்லாத்தையும் மாத்தி நடிக்க வெச்சிருக்கேன். 

பாலு மகேந்திரா, மகாலெட்சுமிங்குற கேரக்டரில் பெயரில் ஜி.வி.பிரகாஷ், ஷாலினி நடிச்சிருக்காங்க. ஜி.வி.பிரகாஷின் தாத்தாவாக நாசர் நடித்திருக்கிறார். தாத்தா, பேரன் கெமிஸ்ட்ரி படத்துல சூப்பரா வந்திருக்கு. முதலில் இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்வதாகத்தான் இருந்தேன். ரன்வீர் கபூரிடம் கதை சொன்னேன். அவருக்கும் ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. சில பிரச்னை காரணமாக இந்தப் படத்தைப் பண்ணலை. இதுக்கு அப்புறம் இந்தியில் எடுப்பேனானு தெரியலை. ஆனா, தமிழில் இன்னும் அதிகமா படங்களை இயக்குவேன்'' என்கிறார், சந்திரமெளலி. 

அடுத்த கட்டுரைக்கு