Published:Updated:

சினிமா பற்றிப் பேசலாமா?

சினிமா பற்றிப் பேசலாமா?
பிரீமியம் ஸ்டோரி
சினிமா பற்றிப் பேசலாமா?

சினிமா பற்றிப் பேசலாமா?

சினிமா பற்றிப் பேசலாமா?

சினிமா பற்றிப் பேசலாமா?

Published:Updated:
சினிமா பற்றிப் பேசலாமா?
பிரீமியம் ஸ்டோரி
சினிமா பற்றிப் பேசலாமா?

வெட்டிக் கதை பேச டீக்கடை பெஞ்ச், படுத்து உருள‌ பார்க் பெஞ்ச் மாதிரி ஃபிலிம் பத்தி பேசத்தான் இந்த ஃபிலிம் பெஞ்ச் (Film Bench). இது ஒரு சினிமா பேச்சுக்களம். அதுவும் உங்க சினிமா, எங்க சினிமா இல்லைங்க... உலக சினிமா!

சினிமா பற்றிப் பேசலாமா?

இப்போவெல்லாம் சினிமா ஆர்வலர் ஒருவர் இணையத்தில் விசிட் அடிச்சு யூ டியூப் பக்கம் சென்றால், ரகம்ரகமா வரும் பேரீச்சம்பழம் வாங்கக்கூட தேறாத மொக்கை வீடியோக்கள். சினிமா விமர்சனம்கிற பேர்ல கொலையாய் கொல்றதெல்லாம் தனி ரகம்.

‘சரியானவர்களைப் பின் தொடர்’ என்பார்கள். அதேபோல் சினிமா பற்றிய தேடல் என்றால் அதே துறையைச் சேர்ந்தவர்களிடம் கேட்டால்தான் அது சரியானதாக இருக்க முடியும். அந்த வகையில் யூ டியூபில் சென்று ஃபிலிம் பெஞ்ச் எனத் தட்டினால் போதும். ஒரு தரமான பேச்சுக்களம் வீடியோ கிடைக்கும். இந்திய மொழிப் படங்கள் மற்றும் உலக அளவிலான மிகச் சிறந்த திரைப்படங்களைப் பற்றிய அழகான அலசல் தளமே இந்த ஃபிலிம் பெஞ்ச். சென்னை எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் ஆறு பேர் கொண்ட இந்தக் குழுவில் சவுண்ட், வீடியோ, மியூஸிக், ஆங்கரிங் என ஒவ்வொருவரும் ஒரு ஸ்பெஷலிஸ்ட். ரத்தம், சதை, புத்தி, சுவாசம் என அனைத்திலும் சினிமா ஆர்வமும், தேடலும் முற்றிப்போன இளைஞர்கள். ஃபிலிம் பெஞ்ச் பற்றிக் கேட்டால் கொட்டித் தீர்க்கிறார்கள்.

‘‘எங்கள் டீமில் முதலில் சரவணாவுக்குதான் இந்த சிந்தனை உதயமானது. நாங்கள் அடிக்கடி சினிமா பற்றிய கலந்துரையாடலில் ஈடுபடுவோம். அந்த டைம்ல அவர் சொன்ன ஐடியாதான் இது. எங்களுக்குத் தெரிந்த சினிமாவை அனைவரிடமும் பகிரலாமே என்று தோன்றியது. ஆங்கிலப் படமோ, தமிழ்ப் படமோ எந்தப் படம் பார்க்கப் போனாலும் எல்லோரும் சேர்ந்து ஒண்ணாதான் போவோம். அந்தப் படம் பிடித்திருந்தால் திரும்பவும் பார்ப்போம். அதுபற்றிய கலந்துரையாடலில் ஈடுபடுவோம். அதை எடுத்தவர் யார், என்ன கதை என்பதையும் தாண்டி அதில் கையாளப்பட்டுள்ள தொழில் நுட்பம், எதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதுவரை அதன்  சுவாரஸ்யமான காட்சிகளை மிக ஆழமாகக் கவனிப்போம். அதுபற்றிய ஹைலைட்ஸ்களை ஃபிலிம் பெஞ்ச்சில் விளக்கம் அளிப்பவர் குரு சுப்பு  மற்றும் ராம். இரண்டு பேருமே ஃபிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சினிமா பற்றிப் பேசலாமா?

குரு சுப்பு பற்றிச் சொல்லணும்னா ‘சென்னைச் சாலைகளில் கழிப்பிடமின்மை’ பற்றி அவர் எடுத்த ‘சொர்க்கவாசல்’ என்னும் ஷார்ட் ஃபிலிம் யூ டியூபில் செம ஹிட். அதன் மூலம் நிறைய விழிப்பு உணர்வு ஏற்படுத்தியவர். முதலில் ஃபிலிம் பெஞ்ச் துவங்கிய நேரத்தில் மொத்தம் ஐந்து பேர்தான். ஒளிப்பதிவை சரத் மற்றும் விக்னேஷ் பார்த்துக்கொள்வார்கள். எடிட்டிங் போன்ற சமாசாரத்தை சரவணாவுடன் இணைந்து சரத்  பார்ப்பார். எங்களின் இந்த முயற்சியில் காலப்போக்கில் சவுண்ட் கிளாரிட்டி என்னும் தெளிவான ஆடியோ தேவைப்பட்டதன் காரணமாகக் கடைசியாக வந்து சேர்ந்தவர்தான் ராகவ். இவர் ஆடியோ தொழில்நுட்பம் கற்கும் இறுதி ஆண்டு மாணவர். சினிமா விமர்சனம் செய்வதே ஒரு கலை. இங்கே அப்படி சிலர் இல்லாதது வருத்தம். அந்தக் குறையைப் போக்கவே இந்தத் தளம்.

சினிமா விமர்சனம் என்ற பெயரில் ஆளாளுக்குப் பண்ற அட்ராசிட்டிகளைப் பார்த்து நாங்கள் பலமுறை காண்டாகி இருக்கிறோம். பல கோடி போட்டுப் படம் எடுப்பவர்களின் வலி எங்களுக்குத் தெரியும். நாங்கள் உருவாக்கும் வீடியோக்கள் அனைத்துமே ஒரு சிறந்த படத்தைப் பற்றிய நல்ல கமென்ட்ஸ் மட்டுமே. ஒரு நல்ல சினிமாவை நாங்கள் ரசித்துவிட்டோம். எங்கள் ரசனைகளை நண்பர்களாகிய நாங்கள் பகிர்ந்துகொள்வோம் அல்லவா? அதேபோல் என் தமிழ் நண்பர்கள் அனைவரிடமும் பகிர‌ ஆசைப்பட்டோம். அதுதான் இப்படி ஒரு தளம்’’ என்கிறார்கள்.

ஃபிலிம் பெஞ்சில் கமர்ஷியல், ரொமான்டிக், வெஸ்டன், கில்லர் என இவர்கள் போட்ட அனைத்துப் படங்களுமே மிக வித்தியாசமானவை. அமெரிக்க ப்ளாக் அண்ட் ஒயிட் படம் முதல் முதல் தி பெஸ்ட் சிங்கிள் டேக் மூவி ‘விக்டோரியா’ வரை இவர்களின் அலசல் ஏ ஒன் ரகம். இதில் விசேஷம் என்னவென்றால் இவர்கள் பகிர்ந்த சினிமாவில் இதுவரை வந்த இரண்டு தமிழ்ப் படங்கள் ‘காக்கா முட்டை’யும் ‘விசாரணை’யும் மட்டுமே.

வாழ்த்துகள் பாஸ்!

-தி.ஹரிஹரன்