
அக்கட தேசத்து அழகிகள்!
பார்த்தவுடன் ஜொள்ளுவிட வைக்கும் பக்கத்து ஸ்டேட் அழகு டார்லிங் டம்பக்குகள் இவர்கள்...
மல்லுவுட் பெர்லி மானே

கொச்சின் டாக்டர் ஃபேமிலி பெற்றெடுத்த அமுல் பேபி! பெங்களூருவுக்கு காலேஜ் படிக்க வந்த பொண்ணு அப்படியே மாடலிங்கில் குதித்ததில் ஆச்சர்யமில்லை. ‘பெர்ஃபெக்ஷனிஸ்ட்’ என மேடமே எடுத்த ஆங்கில ஷார்ட் ஃபிலிம் பார்த்து அம்ரிதா டி.வி-யில் காம்பியரிங் வாய்ப்பு வந்தது. அப்படியே மழவில் மனோரமா சேனல், கௌமுதி டி.வி என உலா வந்தார்.
சமீர் தாஹிரின் ‘நீல ஆகாசம் பச்சக்கடல் சுவண்ண பூமி’ படத்தில் சின்ன ரோல் கிடைத்தது. ‘தி லாஸ்ட் சப்பர்’, ‘ஞான்’, ‘லோஹம்’, ‘டபுள் பேரல்’, ‘புஞ்சிருக்கு பரஸ்பரம் ஜோ அண்ட் தி பாய்’ என வரிசையாய்ப் படங்கள் நடித்து விட்டார். ஆனாலும் இன்னமும் சொல்லிக்கொள்ளும்படியான வெயிட்டான ஹீரோயின் ரோல் நடிக்காததால், இந்த அழகுகுட்டிச் செல்லம் ஸ்டில் வெயிட்டிங்!
தெலுங்கு பாய்ஸ் ‘கல்யாண வைபோகமே’ படத்துக்காக கூப்பிட்டு இருக்காங்களாம்!
டோலிவுட் நிகிதா நாராயண்

பத்து வயதிலிருந்து மாடலிங் பண்ணும் ஹைதராபாத் பேபி. எம்.பி.ஏ முடித்துவிட்டு மாடலிங்கை டிக் அடிக்க, ஆரம்பத்தில் வீட்டில் சின்னதாய் ஜெர்க் ஆனார்கள். ஆனாலும், அமேஸான்.காம் விளம்பரத்தில் நடித்ததும் வீட்டில் ஓகே ஓகே சொல்லிவிட்டார்கள். ஃபேஸ்புக் நிறுவனத்தில் வேலை கிடைத்தும் நடிப்புக் காதலால் போகவில்லை. ராஜீவ் மேனனின் விளம்பரங்களில் அடிக்கடி தலைகாட்டும் நிகிதாவின் முதல் படமான ‘இட்ஸ் மை லவ் ஸ்டோரி’ தெறி ஹிட்! ஒரு பாடலையும் அசத்தலாக அந்தப் படத்தில் பாடிவிட சைமா விருதுகள் கிடைத்தன பொண்ணுக்கு! ‘மேட் இன் விஸாக்’, ‘லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்’, ‘பெசரட்டு’ என ஹீரோயின் ரோல்களில் அசத்தும் நிகிதாவுக்கு இன்னும் உச்சங்கள் காத்திருக்கு. ஏ நிக்கி மனசுல நிக்கி!
சாண்டல்வுட் தனிஷ்கா

ஒல்லி பெல்லி மங்களூரு மல்கோவாவின் ஒரிஜினல் பெயர் தேஜஸ்வினி பிரகாஷ். ‘மசனடா மக்களு’ படத்தின் மூலம் 2008-ல் சினிமாவுக்கு வந்தவருக்கு போன வருஷம் ‘மாத்தாடு மாத்தாடு மல்லிகே’ படத்தில் சுஹாசினி-விஷ்ணுவர்தன் ஜோடிக்கு மகளாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. குட்டி ரோலிலும் அசத்தலாக நடிக்க ‘நீட்டா’ படம் தனிஷ்காவுக்கு நீட்டான பெயரை வாங்கிக் கொடுத்ததுது. ‘ஈ-ப்ரீத்தி’, ‘அரமனே’ என ஹிட் லிஸ்ட் நீள்கிறது. இன்னும் இன்னும் தனி ஒருவளாய் நிறைய எதிர்பார்க்கிறோம் தனி!
-ஆர்.சரண்