Published:Updated:

''வருண் தவானின் 'ரான் பூமி', 'பானுமதி' அனுஷ்கா, மோகன்லால் - நிவின் காம்போ..." #WoodBits

''வருண் தவானின் 'ரான் பூமி', 'பானுமதி' அனுஷ்கா, மோகன்லால் - நிவின் காம்போ..." #WoodBits

''வருண் தவானின் 'ரான் பூமி', 'பானுமதி' அனுஷ்கா, மோகன்லால் - நிவின் காம்போ..." #WoodBits

''வருண் தவானின் 'ரான் பூமி', 'பானுமதி' அனுஷ்கா, மோகன்லால் - நிவின் காம்போ..." #WoodBits

''வருண் தவானின் 'ரான் பூமி', 'பானுமதி' அனுஷ்கா, மோகன்லால் - நிவின் காம்போ..." #WoodBits

Published:Updated:
''வருண் தவானின் 'ரான் பூமி', 'பானுமதி' அனுஷ்கா, மோகன்லால் - நிவின் காம்போ..." #WoodBits

பானுமதியாக நடிக்கும் பாகமதி

'நடிகையர் திலகம்' சாவித்திரியின் நிஜ வாழ்க்கை நிகழ்வுகள் தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் படமாக எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் சாவித்திரியாக கீர்த்திசுரேஷ் நடித்துள்ளார். தெலுங்கில் 'மகாநதி' எனப் பெயரிடப்படுள்ள இப்படத்தின் முக்கியமான வேடங்களில் துல்கர் சல்மான், சமந்தா அக்கினேனி, விஜய் தேவரக்கொண்டா, ஷாலினி பாண்டே மற்றும் பிரகாஷ் ராஜ் என ஆந்திரா, தமிழகத்தில் பரிட்சயமான முகங்களைக் கொண்டு உருவாகிவரும் இப்படத்தில் மேலும் ஒரு சிறப்புக் கதாபாத்திரம் சேர்க்கப்பட்டுள்ளது. அன்றைய சூப்பர் ஸ்டார்களுக்கெல்லாம் சூப்பர் ஸ்டாராக விளங்கியவர், பழம் பெரும் நடிகை பானுமதி. அவருடைய கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்கா ஒப்புக்கொண்டுள்ளார். இக்கதாபாத்திரத்தில் நடிக்க ஒரு தேர்ச்சியான நடிகை தேவைப்பட்டதாகவும், அதற்கு அனுஷ்கா சரியாக இருப்பார் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. மார்ச் 29-ம் தேதி வெளிவரவுள்ள இப்படம், தமிழில்  'நடிகையர் திலகம்'  எனப் பெயரிடப்பட்டுள்ளது.

நிவின் பாலியுடன் இணையும் மோகன்லால்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'ஓடியன்' படத்திற்காக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் மெலிந்த உருவத்தோற்றம் சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்பட்டன. இதைத்தொடர்ந்து அவரது புதுத்தோற்றம்தான், இன்று மலையாளக் கரையோரம் பெரும் பேச்சாக இருக்கின்றது. நிவின்பாலி நடிக்கும் 'காயம்குளம் கொச்சுன்னி' படத்தில் மோகன்லாலின் 'இத்திக்காரப்பக்கி' கதாபாத்திரத்திற்கான உருவ அமைப்புதான் அது. தமிழில் '36 வயதினிலே' படத்தை இயக்கிய ரோஷன் ஆண்ட்ருஸ் இப்படத்தை இயக்குகிறார். 'லாலேட்டன்' என மலையாளப் பட உலகில் அன்பாக அழைக்கப்படும் மோகன்லாலுடன் நிவின்பாலி இணைவது இதுவே முதல் முறையாகும். முன்னதாக நிவின், த்ரிஷா நடிப்பில் வந்த 'ஹேஜுட்' திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

ஹாரி பாட்டர் நாயகியின் ஒரு மில்லியன் பவுண்ட் 

பிரிட்டிஷ் நாட்டின் உயரிய விருதான 'பாஃப்டா' விருதுகள் விழா அண்மையில் நடந்தது. அப்போது பணியிடத்தில் பெண்களுக்கான பாதுகாப்பை உத்தேசிக்கும் வகையில் மற்றும் வன்கொடுமையில் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையில் 27 வயது நிரம்பிய 'ஹாரிபாட்டர்' புகழ் எம்மா வாட்சன் ஒரு மில்லியன் பிரித்தானிய பவுண்டை நன்கொடையாக அளித்துள்ளார். ஏறத்தாழ 190-க்கும் மேற்பட்ட வெவ்வேறு துறைகளைச் சார்ந்த பெண்கள் முன்னெடுத்த இந்த விழிப்புஉணர்வுக்கு 'பாஃப்டா' நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட தன்னார்வல அமைப்பிடம் இதை வழங்கினார்.

ரோட்டர்டாம் சர்வதேசப் பட விழாவில் விருது வென்ற கன்னடப் படம்

2016-ல் வெளிவந்த கன்னட திரைப்படம் 'திதி'. ரசிகர்கள் மத்தியிலும் சர்வவதேச திரைப்பட விழாக்களிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து, 'திதி' படத்தின் இணை கதாசரியர் எரா கௌடா இயக்கியுள்ள திரைப்படம் 'பலேகெம்பா'. இப்படம் சமீபத்தில் நடந்த ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில் விருது ஒன்றை வென்றுள்ளது. சர்வதேசத் திரைப்பட விமர்சக சம்மேளனத்தின் விருதைப் பெற்ற ஒரே இந்தியப் படம் 'பலேகெம்பா' என்பதும் குறிபிடத்தக்கது.  

வருண்தவான் நடிப்பில் 'ரான்பூமி'

இந்தியில் வளர்ந்து வரும் ஹீரோக்களிள் ஒருவர் வருண் தவான். 'ஹம்ப்டி ஷர்மா கி துல்ஹனிய', 'பத்ரிநாத் கி துல்ஹனியா' ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக வருண் - கைத்தான் இணையும் படத்தை கரண் ஜோஹர் தயாரிக்கிறார். 'ரான்பூமி' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம், 'பாகுபலி' போன்று போர், இதிகாசம் கலந்த பிரமாண்டமான படைப்பாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். 2020 தீபாவளிக்கு இப்படம் வெளியாகும் என ட்விட்டரில் அறிவித்துள்ளார், வருண் தவான்.    

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism