Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'' 'ம்'னு சொல்லுங்க, நடிக்கவைக்கிறேன்னார் தனுஷ்.... எத்தனை ‘ம்’ சொல்றது நான்?" - ராதாரவி ஷேரிங்ஸ்

ராதாரவியிடம் பேச ஆயிரம் விஷயங்கள் இருக்கிறது. சினிமா, அரசியல் என எதுவும் பேசலாம். அப்படி, அவரிடம் பேசியதிலிருந்து கொஞ்சம்...

நாஞ்சில் சம்பத்?

"அண்ணன் வைகோ கட்சியில் அவருக்கு அடுத்தபடியாக நல்ல பேசக்கூடிய பேச்சாளராக இருந்தவர், நாஞ்சில் சம்பத். இப்போது தளபதியாரைத் திட்டினால்தான் அவருக்குப் பிழைப்பு என்ற சூழ்நிலையில் சிக்கித் தவிக்கிறார். முன்னாடி இன்னோவா கார் கொடுத்தார்கள் என்று கோபித்துக்கொண்டு கட்சியைவிட்டு வெளியேறினார். அடுத்து பார்ச்சுனர் கார் கொடுத்தவுடன், மறுபடியும் கட்சியில் சேர்ந்து கொண்டார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விலைப்பட்டியல் இருக்கிறது அவ்வளவுதான். நாஞ்சில் சம்பத் எப்போது 'யார் துப்பினாலும் துடைத்துக்கொள்வேன்' என்று சொன்னாரோ, அப்போதே அவர் எவ்ளோ பெரிய மானஸ்தன் என்பதை நிரூபித்து விட்டார். இப்போது நான் துப்பினாலும் அப்படித்தானே செய்வார்?"

தனுஷ் மீதான வருத்தம்?

"எனக்கு சினிமாவில் எந்தக் கேரக்டர் வேண்டுமானாலும் கொடுங்கள். என்னால் சிறப்பாகச் செய்யமுடியும். ஆனால், ஹீரோ வேடத்தில் என்னால் நடிக்கமுடியாது. ஏனென்றால், ஒரு முழுப் படத்தையும் தாங்கி இழுத்துச்செல்லும் வல்லமை எனக்குக் கிடையாது. நான் நடிக்கும் கேரக்டரை ஹீரோவிடம் கொடுத்து நடிக்கச்சொல்லுங்கள், அவர்களால் நடிக்க முடியாது. ரஜினி சார் 'பாட்ஷா'வில் பேசும் வசனம் மாதிரி, 'நான் உண்மையைச் சொன்னேன்'.  ஒருமுறை தனுஷை பார்த்தபோது, 'தம்பி உன்  படத்துல நடிக்க என்னைக் கூப்பிடமாட்டியா?'னு கேட்டேன். ' 'ம்'முன்னு சொல்லுங்க ரவிசார், நான் உடனே சான்ஸ் தருகிறேன்' என்றார். பிறகு, தனுஷ் இருந்த ஒரு சினிமா ஆடியோ விழாவில் தனுஷ்சாரிடம் நடிக்க வாய்ப்பு கேட்டேன், ' 'ம்' முன்னு சொல்லுங்க நான் உடனே வாய்ப்பு தருகிறேன்'னு சொன்னார். நானும் எத்தனை முறைதான் முக்கிக்கொண்டே இருப்பது? என்று மேடையிலேயே கூறிவிட்டேன். பிறகு, தெரிந்தது  தனுஷ் என்மேல் மனவருத்தத்தில் இருப்பதாக சிலபேர் சொன்னார்கள்.

ராதாரவி.

ஏதோ, சின்னதாய் புரிந்துகொள்வதில் கோளாறு. அதனாலேயே இருவருக்கும் இடையில் ஒரு இடைவெளி. உண்மையை வெளியே சொல்லாமல் மனசுக்குள் போட்டு மறைத்தால், அழுக்குதான் அதிகமாகும். எல்லோருக்கும்  தலையை ஆட்டிக்கொண்டு இருந்தால் பொய்யாகச் சிரித்துக்கொண்டு, பாராட்டிக்கொண்டு இருந்தால் ராதாரவிக்கு ஏராளமான சினிமா படங்கள் குவியும். அதற்கு பதில் நான் வேறு ஏதாவது தொழில் செய்துவிட்டுப் போகலாம். ஒருமுறை இன்னொரு சினிமா மேடையில் சிங்கம் என்றால் கர்ஜித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று பேசினேன். அப்போது இடைமறித்த ஒரு இயக்குநர், 'சிங்கம் தூங்கும்போதும் கர்ஜிக்குமா?' என்று கிண்டல் செய்தார். 'சிங்கம் குறித்த என்சைக்ளோ பீடியாவைப் படித்துப்  பாருங்கள், சிங்கம் தூங்கும்போது விடும் மூச்சுக்காற்று சத்தத்திற்கு கர்ஜனை என்று பெயர்' என அந்த மேடையிலேயே அவருக்குப் பதில் சொன்னேன்."

கமல் அரசியல்?

" 'விஸ்வரூபம்' படத்தின் ரிலீஸ் பிரச்னையின்போது வெளியே போயிட்டு வீட்டுக்கு வந்து கைலியைக் கட்டிக்கொண்டு சோபாவில் அமர்ந்தேன். 'ஏங்க, கமல் சார் டிவி-யில அழுதாருங்க' என்று என் மனைவி சொன்னார்.  நான் பதறிப்போயிட்டேன். கமல் என்னிடம் சரியாகப் பேசமாட்டார், என்மீது கோபமாக இருக்கிறார் என்பதெல்லாம் வேறு கதை.  கமல் என் பழைய நண்பர். வீட்டிலிருந்து கட்டிய கைலியோடு கமல் வீட்டுக்கு ஓடினேன். என்னால் அவருக்கு என்ன உதவியைச் செய்யமுடியும்... நான் அவர் பக்கத்தில் நின்றால் ஒரு ஆறுதல் அவ்வளவுதான். கமல் அழுதார் என்கிற வார்த்தையைக் கேட்டு அப்படியே உறைந்து போய்விட்டேன்.  'நீ கடன் கேட்டால் கொடுப்பதற்கு ஆயிரம் பேர் இருக்கலாம். இந்தா, என் வீட்டுப் பத்திரத்தை அடகுவைத்து உன் கடனைத் தீர்த்துக்கொள்' என்று உரிமையோடு கமலிடம் கொடுத்தேன். இப்போது கட்சி தொடங்குகிறார். வாழ்க்கையில் என்ன நடக்க வேண்டும் என்று நம் தலையில் எழுதப்பட்டிருக்கிறதோ, அதை யாராலும் மாற்றமுடியாது. ஜாதகங்களில் இருக்கும் கட்டங்கள் போடும் திட்டங்களிலிருந்து நாம் தப்பிக்கவே முடியாது.'' என்கிறார், ராதாரவி.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்