Published:Updated:

இவை பெண்களின் சினிமா..!

இவை பெண்களின் சினிமா..!
பிரீமியம் ஸ்டோரி
இவை பெண்களின் சினிமா..!

சினிமா ஸ்பெஷல்

இவை பெண்களின் சினிமா..!

சினிமா ஸ்பெஷல்

Published:Updated:
இவை பெண்களின் சினிமா..!
பிரீமியம் ஸ்டோரி
இவை பெண்களின் சினிமா..!

சினிமா என்ற பொழுதுபோக்கு, கலை என்பதைக் கடந்து, தொழில் என்பதை நோக்கி முன்னேறி ஆண்டுகள் ஆகின்றன. எல்லாவற்றிலும் சம உரிமையை நிலைநாட்ட முயன்றாலும், இன்னமும் சினிமாவில் கதாநாயகனுக்குத் தரப்படும் முக்கியத்துவம் கதாநாயகிகளுக்குத் தரப்படுவதில்லை. அவர்களுக்குத் தரப்படும் சம்பளமும்கூட கதாநாயகனோடு ஒப்பிடமுடியாத நிலையில்தான் இருக்கிறது. இந்த எல்லா தடைகளையும் கடந்து பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து சமீப காலங்களில் வெளியான, வெளியாக இருக்கும் படங்களின் தொகுப்பு இது!

சோனம் கபூர் (நீர்ஜா)

இவை பெண்களின் சினிமா..!

எப்பொதெல்லாம் உங்களை பயம் தொற்றிக்கொள்கிறதோ, அப்போ தெல்லாம் உங்கள் ஆழ்மனதில் இருக்கும் தைரியம் வெளிவரும்... தானாக! 1986-ம் ஆண்டு மும்பையிலிருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரத் துக்குப் பயணிக்க இருந்தது பேன் ஏம் விமானம். கராச்சியில் விமானம் தரை இறங்கியபோது, அதைத் தீவரவாதிகள் கடத்தினர். நீர்ஜா என்ற விமானப் பணிப்பெண் மட்டும் அந்த விமானத்தில் இல்லையென்றால், பயணம்செய்த 300-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருப்பார்கள். ஆனால், நீர்ஜா சாமர்த்தியமாக எடுத்த முடிவுகளால் 360 பயணிகளையும் அவரால் காப்பாற்ற முடிந்தது. தன் உயிரைப் பற்றிக் கவலைப்படாது, பயணிகளை மீட்டார் நீர்ஜா. அந்த திக் திக் நிமிடங்களை மையமாகவைத்து எடுக்கப்பட்ட பாலிவுட் படம், ‘நீர்ஜா’. சோனம் கபூர் நீர்ஜாவாக லைக்ஸ் அள்ளிக்கொண்டார். இனி நீர்ஜாவையும், சோனம் கபூரையும் பிரித்துப் யோசிக்க முடியாத அளவுக்கு மனதில் தங்கிவிட்டார் சோனம்.

ப்ரியங்கா சோப்ரா (குவான்டிக்கோ)

இவை பெண்களின் சினிமா..!

இந்திய சினிமாவில் நடிகைகளின் வேலிடிட்டி பீரியட் மிகவும் குறைவு. ஆனால், பிரியங்கா சோப்ரா அதை உடைத்து எறிந்து பயணித்துக்கொண்டிருக்கிறார். ‘தமிழன்’ படத்தில் அறிமுகமான ப்ரியங்கா சோப்ரா, தற்போது ஹாலிவுட் வரை அசத்திக்கொண்டு இருக்கிறார். அமெரிக்கத் தொலைக்காட்சி தொடரான ‘குவான்டிக்கோ’வில் (Quantico) முதன்மை வேடத்தில் கலக்கிக்கொண்டிருக்கும் ப்ரியங்கா, அடுத்து ‘பே வாட்ச்’ என்னும் ஆங்கிலப்படத்திலும் நடிக்கவிருக்கிறார். 1989-ஆம் வருடம் வெளிவந்து ஹிட் அடித்த ‘பே வாட்ச்’ தொலைக்காட்சி தொடரை மையமாக வைத்து இப்படம் தயாராகிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் முடிந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், ப்ரியங்கா விருது வழங்க அழைக்கப்பட்டிருந்தது, பெருமையான தருணம்.

ப்ரீ லார்சன் (ரூம்)

இவை பெண்களின் சினிமா..!

ஒரு அறையில் உங்களால் எவ்வளவு நேரம் இருக்க முடியும்? ஒரு கொடியவன், ஜாய் என்ற பெண்ணைக் கடத்தி ஒரு அறையில் அடைத்துவைத்துவிடுகிறான். சில நாட்கள் அல்ல, சுமார் ஏழு ஆண்டுகள். அவள் அந்த அறையின் தனிமையில்தான் காலம் கடக்கிறாள். அவளைப் பல்வேறு பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்குகிறான் அவன். ஜாய்க்கு குழந்தை பிறக்கிறது. குழந்தைக்கு ஐந்து வயதாகும்போது, இருவரும் இருப்பது ஒரு சிறை என்பதை தன் குழந்தைக்குப் புரியவைத்து, அங்கிருந்து குழந்தையின் உதவியுடன் தப்பிக்கிறாள் ஜாய். உண்மைச் சம்பவத்தை மையமாகவைத்து எழுதப்பட்ட ‘ரூம்’ நாவலின் தழுவலே ‘ரூம்’ ஹாலிவுட் திரைப்படம். ஜாயாக நடித்த ப்ரீ லார்சன்தான், இந்த ஆண்டின் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது பெற்றவர்.

எமிலி ப்ளன்ட் (தி கேர்ள் ஆன் தி ட்ரெயின்) 

இவை பெண்களின் சினிமா..!

ரேச்சல், அன்னா, மேகன் ஆகிய மூன்று பெண்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாகவைத்து எடுக்கப்படும் ஹாலிவுட் படம், தி கேர்ள் ஆன் தி ட்ரெயின் (The Girl on the Train). வேலையில்லாமல் இருப்பதைவிட கொடுமையான விஷயம், நம் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்வது. எனவே, வேலைக்கும் செல்வதைப் போலவே, தினமும் ரேச்சல் ரயிலில் பயணிக்கிறாள். ரயில் பயணத்தின்போது, தன் முன்னாள் கணவர் டாம் - அவருடைய மனைவி அன்னா  மகிழ்வாக இருப்பதைப் பார்க்கிறாள். அருகில் இருக்கும் மற்றொரு வீட்டில், ஸ்காட்டும் மேகனும் மிகவும் மகிழ்வாக வாழ்கிறார்கள். அவர்களைப் பார்த்துப் பொறாமைப்பட்டாலும், உள்ளூர மகிழ்கிறாள் ரேச்சல். ஆனால், தினமும் செல்லும் வழி என்பதால், அந்த இருவருக்கும் ஏதோ பிரச்னை என்பதை உணர்கிறாள் ரேச்சல். ஒருநாள் மேகன் மாயமாக மறைகிறாள். ரேச்சல், மேகன், அன்னா மூவரையும் இணைக்கிறது கதை. ரேச்சலாக எமிலி ப்ளன்ட் கலக்கியிருக்கும் இந்தப் படம், அக்டோபர் மாதம் வெளியாக விருக்கிறது.

காஜல் அகர்வால் (டூ லஃப்ஜொன் கி கஹானி)

இவை பெண்களின் சினிமா..!

முன்னாள் பாக்ஸர் ஆன சூரஜ், ஒரு நிறுவனத்தில் பார்க்கிங் ஆளாக வேலைக்குச் சேர்கிறான். அங்கு வரும் பார்வையற்ற ஜென்னிக்கும், சூரஜுக்கும் காதல் மலர்கிறது. ஜென்னியின் பார்வைக்காக மீண்டும் பாக்ஸராகக் களமிறங்குகிறான் சூரஜ். இந்தக் கதைப்புலத்தில் வெளிவரவிருக்கும் பாலிவுட் படம், ‘டூ லஃப்ஜொன் கி கஹானி’ (Do Lafzon Ki Kahani). ஜென்னியாக, நம் காஜல் அகர்வால். தமிழ், தெலுங்கு மொழிகளில் தொடர்ச்சியாக நடித்து வந்தாலும், காஜல் அகர்வாலை பெரும்பாலும் பாடல்களுக்கு மட்டுமே நம் திரையுலகம் பயன் படுத்தி இருக்கிறது. இந்தப் படத்தின் ட்ரெய்லர், ‘இது காஜலா?!’ என்று வாய்பிளக்க வைக்கிறது. ஜென்னியாக காஜல் ஜெயித்துவிட்டார் என்று கொண்டாடுகிறது பாலிவுட். காஜல் என்றதும் நம் நினைவுக்கு வருவது அவர் அகல விழிக்கும் கண்கள்தான். பார்வையற்றவராக, அந்தக் கண்கள் இருளைப் பேசுவது இன்னும் அழகு.

ஆண்மயமான திரையில்... பெண்களின் முத்திரை!  

கார்த்தி