Published:Updated:

திரைக்கு வருமா 'விஸ்வரூபம்'?

 திரைக்கு வருமா 'விஸ்வரூபம்'?
திரைக்கு வருமா 'விஸ்வரூபம்'?
 திரைக்கு வருமா 'விஸ்வரூபம்'?

சென்னை: நடிகர் கமல்ஹாசனின் 'விஸ்வரூபம்' திரைப்படத்தை தியேட்டர்களில்  வெளியிடுவதில்லை என விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் முடிவு  செய்துள்ளனர்.இதனால் விஸ்வரூபம் திரைக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தயாரித்து நடித்து, வரும் ஜனவரி 11-ம் தேதி வெளியிட  திட்டமிடப்பட்டுள்ள விஸ்வரூபம் திரைப்படத்தை வழக்கமான முறையில்  திரையரங்குகளில் வெளியிடுவதுடன், டி.டி.எச். முறையில் வீடுகளுக்கே நேரடியாக  ரிலீஸ் செய்யவும் நடிகர் கமல் திட்டமிட்டுள்ளார்.

##~~##
இந்தப் புதிய முறைக்கு திரையரங்க உரிமையாளர்கள் ஏற்கனவே கடும் எதிர்ப்பு தெரிவித்து  இருந்தனர்.ஆனால் கமல் தனது முடிவில் உறுதியாக இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்த சூழ்நிலையில், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு  திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றைச் சேர்ந்த நிர்வாகிகள்  சென்னையில் ஆலோசனை நடத்தினர்.
இக்கூட்டத்தில், டி.டி.எச். முறையில் வெளியிடப்படும் விஸ்வரூபம் உள்பட எந்தத்  திரைப்படத்துக்கும் ஒத்துழைப்பு தருவதில்லை என முடிவெடுக்கப்பட்டது.
இதனால் கமலின் 'விஸ்வரூபம்' தியேட்டர்களில் ரிலீஸ் ஆவதில் சிக்கல்  ஏற்பட்டுள்ளது.இருப்பினும் கடைசி நேரத்தில் ஏதாவது சில முயற்சிகள்  மேற்கொள்ளப்பட்டு சிக்கல் தீரவும் வாய்ப்புள்ளது.