‘வீட்ல சும்மாதானே இருக்க... இதைக்கூட செய்ய மாட்டியா?’

‘எனக்கு ஆபீஸ் டென்ஷன்ல அப்பப்ப கோபம் வரும்... நீதான் பொறுத்துப் போகணும்!’

- இந்த டெம்ப்ளேட் டயலாக்குகளை எல்லாம் வாழ்வில் ஒருமுறையாவது தங்கள் கணவரிடமிருந்து கேட்காத மனைவிகள் இருக்க முடியாது. இப்போது இதை கொஞ்சம் உல்டாவாக யோசித்துப் பாருங்கள். வேலைக்குச் செல்வது, வருமானம் ஈட்டுவது மனைவியாகவும்... சமைப்பது, துணி துவைப்பது, வீட்டைக் கவனித்துக்கொள்வது கணவனாகவும் இருந்தால் எப்படி இருக்கும்?! இந்த ஐடியா இயக்குநர் பால்கிக்கு தோன்றியதன் விளைவுதான், ‘கி அண்டு கா’ (அவளுடைய - அவனுடைய) என்கிற பாலிவுட் படம்.

கரீனா கபூர் - அர்ஜுன் கபூர், மனைவி, கணவனாக நடிக்க... பால்கி இயக்கியிருக்கும் ‘கி அண்டு கா’படத்தின் கதை, இதுதான். கரீனா கபூர் (கியா) ஒரு நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மேனேஜராக வேலைபார்ப்பவர். அர்ஜுன் கபூருக்கு (கபீர்) வேலை என்ற நினைப்போ இலக்கோ இல்லை. கரீனா மீது காதல்கொள்ளும் அர்ஜுன், புரபோஸ் செய்யும்போதே தன் நிபந்தனையையும் சொல்லிவிடுகிறார்.

அர்ஜுன்: எனக்கு என் அம்மாவைப்போல இருக்க விருப்பம்.

கரீனா: உங்க அம்மா என்ன செய்றாங்க?

அர்ஜுன்: எங்க அம்மா ஒரு ஹவுஸ் வொய்ஃப்.

- இதுதான் அர்ஜுனின் கண்டிஷன்.பல கலாசார கலாட்டாக்களுக்குப் பிறகு அர்ஜுன் கழுத்தில் தாலி கட்டுகிறார் கரீனா. இந்தத் தம்பதியின் லைஃப் ஸ்டைல் எப்படி இருக்கும், என்ன பிரச்னைகள் எல்லாம் வரும் என்பதை, தன் வித்தியாசமான ஸ்டைலில் படமாக்கியிருக்கிறார் பால்கி.

மாமியார் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கு வது, காய்கறி நறுக்குவது, சமையல் செய்வது, வீட்டுச் செலவுக்கு மனைவியிடம் பணம் கேட்டுப் பெற்றுக்கொள்வது, ‘ராத்திரி வர லேட்டானாலும் பரவாயில்லை’ என மனைவியை வழியனுப்பி வைப்பது... இப்படி சகலமும் உல்டா ரியாக்ஷன் ஸ்கிரிப்ட்டுடன் தயாராகியிருக்கும் ‘கி அண்டு கா’

படத்துக்கு சினிமா ரசிகர்கள் ஆவலுடன் வெயிட்டிங்.

‘சீனி கம்’ படத்தில் வயது முதிர்ந்த அமிதாப், நடுத்தர வயது தபு காதலைச் சொன்ன பால்கி, ‘கி அண்டு கா’ படத்தில் சொல்ல வருவது ‘ஜெண்டர் டோன்ட் மேட்டர்’ என்பதைத்தான். படம் ஏப்ரல் 1 அன்று ரிலீஸ்.

ஹவுஸ் ஹஸ்பண்ட் எப்படியிருக்கிறார் என்று பார்ப்போம்!

பா.ஜான்ஸன்