Published:Updated:

நாலு டைரக்டர்ஸும் நல்லா இருந்த தமிழ் சினிமாவும்!

நாலு  டைரக்டர்ஸும்  நல்லா இருந்த  தமிழ் சினிமாவும்!
பிரீமியம் ஸ்டோரி
நாலு டைரக்டர்ஸும் நல்லா இருந்த தமிழ் சினிமாவும்!

சினிமா ஸ்பெஷல்

நாலு டைரக்டர்ஸும் நல்லா இருந்த தமிழ் சினிமாவும்!

சினிமா ஸ்பெஷல்

Published:Updated:
நாலு  டைரக்டர்ஸும்  நல்லா இருந்த  தமிழ் சினிமாவும்!
பிரீமியம் ஸ்டோரி
நாலு டைரக்டர்ஸும் நல்லா இருந்த தமிழ் சினிமாவும்!

‘கிராமம் சார், ராஜா சார், காதல் சார்’னு கதை சொன்ன அன்றைய டைரக்டர்ஸ் தொடங்கி, ‘நைட்டு சார், ஃபைட்டு சார், வெயிட்டு சார்’னு ஸீன் சொல்லும் இன்றைய டைரக்டர்ஸ் வரை, தமிழ் சினிமாவில் கட்டாயம் இடம்பிடிக்கும் 10 காட்சிகள் இவை. குழந்தைகள், முதியவர்கள், இதயம் பலவீனமானவர்கள், கர்ப்பிணிகள், ஏலியன்கள்னு யாருமே பார்க்க லாயக்கில்லாத... நம்ம கோலிவுட்டை காலிவுட் ஆக்கிட்டு இருக்கிற அந்த பாழாப்போன 10 ஷாட்ஸையும் இங்க ஓபன் பண்ணினா...

நாலு  டைரக்டர்ஸும்  நல்லா இருந்த  தமிழ் சினிமாவும்!

வெளிநாட்டுலதான் ஆடணுமா?!

காதல் வந்த செகண்ட் ஹீரோவும், ஹீரோயினும் பாஸ்போர்ட் இல்லாம, செக்கிங் இல்லாம, ஏன்... சென்னை ஏர்போர்ட்ல கண்ணாடிகூட உடையாம அஞ்சே செகண்ட்ல ஐரோப்பா போயிடுவாங்க... டூயட் பாட! மைனஸ் மூணு டிகிரி குளிர்ல கோபிநாத் கோட்டை ஹீரோவுக்குப் போட்டு ஆடவிட்டுட்டு, ஹீரோயினுக்கு மட்டும் அவங்க தேர்டு ஸ்டாண்டர்டு படிக்கும்போது போட்ட அதே டிரெஸ்ஸை போட்டு ஆடச் சொல்றது... அராஜகம். காலம் காலமா நடக்கிற இந்தக் கொடுமையைத் தட்டிக் கேட்க யாருமேயில்லையா?!

ஸ்பைடர்மேன் பாதி... டாபர்மேன் மீதி!

ஹாலிவுட்ல ஒருத்தன் பறந்து பறந்து சண்டை போடலைன்னா, அவன் சூப்பர் ஹீரோ கிடையாது. தமிழ் சினிமால அவன் சாதா ஹீரோவே கிடையாது. ‘நீ பொழப்புக்கு சூப்பர் ஹீரோ, நானெல்லாம் பொறந்ததுல இருந்தே சூப்பர் ஹீரோ!’னு ஹாலிவுட் கதாநாயகர்களைப் பார்த்தே கர்ஜிக்கிற கட்ஸ்! மீதி சில்லறைக்கு ஹால்ஸ் மிட்டாய் கொடுத்ததுக்குக்கூட மங்கள்யான் வரைக்கும் பறந்துபோய் சண்டை போடுறதெல்லாம் நம்மாளுங்களால மட்டும்தான் முடியும். இப்படிப் பறந்து பறந்து கடிக்கிறீங்களே... ஸாரி, அடிக்கிறீங் களே... நீங்கயெல்லாம் ஸ்பைடர்மேனா, டாபர்மேனா?!

அங்க ஒரு சாங் வைக்கிறோம்!

கும்பகோணம் மார்க்கெட்டுக்கு குஜராத் பொண்ணைக் கூட்டிட்டு வந்து ஆடவைக்கிற அயிட்டம் சாங்... அட டட டா! சேஸிங் ஸீன் முடியப்போகுதா, அங்க ஒரு சாங் வைங்க; படம் முடியப்போகுதா, அங்க ஒரு சாங் வைங்க; புரொட்யூசர் வாழ்க்கை முடியப்போகுதா... அட, கண்டிப்பா அங்க ஒரு சாங் வைங்கனு சாங் வைக்க தமிழ் சினிமாவில் அன்லிமிட்டட் ஸ்பேஸ் இருக்கும்!

பன்ச்சுக்கு பஞ்சமேயில்ல! 

‘நாலும் ஒண்ணும் அஞ்சு... அங்க வைக்கிறோம் பன்ச்சு’னு பஞ்சமே இல்லாம பன்ச் பேசுற ஹீரோக்கள், நம்ம சாபம். வில்லனை அடிக்க, அம்மாவைக் காப்பாத்தனு எதை செஞ்சாலும், ஒரு பன்ச் பேசிட்டுதான் செய்வாங்க. ‘நான் விளக்கப்போறேன் பல்லு, உனக்கு இருக்காடா தில்லு’னு பல்லுவிளக்கக்கூட பன்ச் பேசலைன்னா, அவன் தமிழ் சினிமா... ஹீரோ இல்ல!

பாட்டாவே பாடுறது!

‘விடிவி’ கணேஷ் மாதிரி வாய்ஸ் இருக்கிற நம்ம ஹீரோக்கள் எல்லாம் ‘நானும் சிங்கர்தான்’னு ஆசை தோசைக்கு அவங்க நடிக்கிற படங்கள்ல ஒரு பாட்டுப் பாடிக்கிற பேராசைக்கு பலி... நாமதான்! ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் பிட்ச்ல, யூடியூப் சிங்கர்(!) கல்பனா அக்கா ஸ்டைல்ல நீங்க பாடுற அட்ராசிட்டிக்கு எல்லாம்... யாராச்சும் உங்க வாய்ல ஸ்டிக்கர் ஒட்ட!

ஹீரோயின் காஸ்ட்யூமில் சமத்துவம்!

கதை ஆண்டிபட்டில நடந்தாலும் சரி, அமெரிக்காவுல நடந்தாலும் சரி... நம்ம ஹீரோயின்ஸ் மேக்கப்ல சமத்துவம் காட்டுவாங்க. கிராமத்து ஹீரோயின்ஸ்கூட டிசைனர் கட் பிளவுஸில் கலக்குவாங்க; குளிச்சிட்டு வர்றப்போவும் லிப்ஸ்டிக்கோட வருவாங்க; தூங்கி எழுந்திரிக்கும்போதும் மஸ்காரா போட்டுட்டுதான் கண்விழிப்பாங்க; ஏன், நம்ம வில்லன்கள் கடத்தி வெச்சிருந்தாகூட நெயில் பாலிஷ் பளபளக்கத்தான் ‘ப்ளீஸ் என்னை விட்டுடு’னு அவன்கிட்ட கையெடுத்துக் கும்பிடுவாங்க. அட... பேயா வந்தாக்கூட பேய் மேக்கப் (!) போட்டுட்டு மிரட்டுறாங்களே!

மழை பெய்யுதாம்... பொறி பறக்குதாம்!

ஹீரோ-ஹீரோயின் இன்ட்ரோ ஸீனை, இன் னும் 10, 20 வருஷம் ஆனாலும் புதுசா யோசிக்க நம்ம டைரக்டர்ஸுக்கு மனசு வராது. முந்தின ஸீன்ல என்ன வெயிலடிச்சாலும் சரி, ஹீரோயின் என்ட்ரி ஸீன்ல மழை பெய்யெனப் பெய்யும். நம்ம ரஜினிமுருகன்கூட ‘ஆமா பாஸ்’ சொல்றாரு பாருங்க. இட்ஸ் எ ரமணின் மிராக்கிள். அதுவே ஹீரோ என்ட்ரியில், ஷூவை தரையில தேய்ச்சு நடக்க... அதான், அதேதான்... தீப்பொறி பறக்கும்!

காதல் வந்திருச்சு!

கண்டதும் கண்வலிதான் வரும். ஆனா, காதல் வரும்னு 1,840 தடவையா மறுபடியும் மறுபடியும் சொல்லிட்டே இருக்காங்க நம்ம டைரக்டர்ஸ். தடுக்கி விழும்போது தாங்கிப்பிடிச்சா, ட்ரெயின், பஸ்ல ஏற கைகொடுத்தா, கீழ விழுந்த புக்ஸ், பொருளை எடுத்துக்கொடுத்தா... அட, பிச்சைக்காரனுக்கு காசுகொடுத்தா கூடவா லவ் வரும்?! இப்படியெல்லாம் லவ் பண்ணாதீங்க பாஸ்... லைஃப் நல்லாவே இருக்காது!

டாஸ்மாக் தத்துவம்!

‘மது உடல் நலத்துக்கு கேடு, குடி குடியைக் கெடுக்கும்’னு ஓபன் கார்டு போட்டாலும், எண்ட் கார்டு போடுறதுக்குள்ள ஒரு ஒயின்ஷாப் சாங் வைக்கலைன்னா, இன்னிக்கு நிலவரத்துக்கு அது தமிழ் சினிமா இல்லைங்க. அந்தப் பாடல்களில் எல்லாம் பெரும்பாலும் பிழியப்படுற கருத்து... காதலி/ பொண்டாட்டி தொல்லை. தமிழ்நாட்டை டாஸ்மாக் நாடாக்கின பெருமை ‘அவங்களுக்கு’ன்னா, டாஸ்மாக்கை தத்துவக்காடாக்கின பெருமை உங்களுக்குதான் டைரக்டர்ஸ்.

ஹீரோவுக்கு ‘கார்த்திக்’, ‘சிவா’ என்று பெயர் வைக்கும் இயக்குநர்களுக்கு இது சமர்ப்பணம்!

பின்குறிப்பு: ‘10 ஷாட்ஸ்னு சொல்லிட்டு, 9தான் இருக்கு?’னு கண்டுபிடிச்சிட்டீங்களா..? தமிழ் சினிமா ரசிகரா இருந்துட்டு இப்படி லாஜிக் எல்லாம் பார்க்கலாமா பாஸ்?!

லோ.சியாம் சுந்தர், ஓவியம்:பிரேம் டாவின்சி