நாட்டியம்

பிரபல கர்நாடக இசைப்பாடகி அனந்தலட்சுமி சடகோபனின் மகள் சுஜாதா விஜயராகவன், முறைப்படி பரதநாட்டியம் பயின்று பல ஆண்டுகள் ஆடியவர். பிரபலமான டான்ஸர்களின் பல பரதநாட்டிய நிகழ்ச்சிகளுக்கு மேடையில் பாடியும் இருக்கிறார். மியூசிக் அகாடமி, நாரத கான சபாவின் நாட்டியரங்கச் செயற்குழு உறுப்பினராக இருக்கும் சுஜாதா விஜயராகவன், நாட்டியக் கலைஞர்களுடன் தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

வைஜயந்தி மாலா:

நாரதகான சபாவின் அங்கமான நாட்டியரங்கத்தில் வைஜயந்தி மாலாவின் நடன நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்குவதாக ஏற்பாடு. எந்தெந்தப் பாடல்களுக்கு ஆடப்போகிறார் என்று வைஜயந்தியிடம் கேட்டேன். நல்ல மூடில் இருந்த வைஜயந்தி, 'ஆடப்போகும் ஒன்பது பாடல்களையும் நானே பாடிக் காண்பிக்கிறேன்’ என்று பாடினார். உட்கார்ந்து பாடும் போது அவர் முகத்தில் அவ்வளவு எக்ஸ்பிரஷன்கள்.

அவரை அறியாமலேயே கைகள் அபி நயம் பிடித்தன. எனக்காக மட்டும் பிரத் யேகமாக வைஜயந்தி மாலா இப்படி பாடி அபிநயம் செய்தது, கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காத வாய்ப்பு. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் எங்கள் சந்திப்பு நடந்தது.

'நீங்கள் உட்கார்ந்து பாடிக்கொண்டே அபிநயம் செய்து, விளக்குவது ரசி கர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும். எங்கள் சபாவில் இதையே ஒரு புரோகிரமாக நீங்கள் கொடுக்கலாமே...’ என்று கேட்டேன். 'கொடுக்கலாம். ஆனால், அதற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்ய ஒரு வருடம் ஆகும்’ என்றார். நான் விடாமல் கேட்கவே அடுத்த வருடம் ஒப்புக்கொண்டு நிகழ்ச்சி நடத் தினார். ரசிகர்களும் அமோகமாக ஆதரவு கொடுத்தனர்.

பத்மா சுப்பிரமணியம்

நாட்டிய சாஸ்திரம் - டான்ஸ் தியரியை நன்கு கற்றவர். இப்போது, பரதம் கற்றுக் கொள்ளும் இளம் தலைமுறையினர், டான்ஸ் தியரியின் முக்கியத்துவத்தை இவர் அடியொற்றித்தான் கற்றுக் கொள் கிறார்கள். ஆதிசங்கரர் வாழ்க்கை வரலாற்றை பத்மா சுப்பிரமணியம், 'ஜெயஜெய சங்கரா’ என்ற பெயரில் அருமையாக டான்ஸ் டிராமாவாக ஆடியிருக்கிறார். காவிக்கலர் புடவை கட்டிக் கொண்டு நகை எதுவும் அணியாமல், சங்கரராக அவர் நடனமாடுவதைப் பார்க்கும்போது மெய்சிலிர்க்கும். பரதக் கலைக்காக இவர் தன்னையே அர்ப் பணித்துக் கொண்டிருப்பதால், இவரை நான் பரதாழ்வார் என்று பெர்ஸனலாக குறிப்பிடுவேன்.

லீலா சாம்ஸன்

இவர், இந்தியக் கப்பற்படை தளபதியாக இருந்த சாம்ஸனின் மகள். கலாஷேத்ராவில் குருகுலமாக தங்கி, ருக்மணி தேவியிடம் நேரடியாக பரதநாட்டியம் கற்றுக் கொண்டவர். 'சாகுந்தலம்’ நாட்டிய நாடகம் அரங்கேற இருந்த நிலையில் கலாஷேத்ரா மாணவியாக இருந்த அமலாவுக்குப் (பிறகு நடிகை ஆனவர்) பயங்கர வயிற்று வலி. ருக்மணி தேவி உடனே, லீலா சாம்ஸனை டெல்லியில் இருந்து விமானத்தில் சென்னை வரச்சொன்னார். மிகக் குறுகிய அவகாசத்தில் ஒத்திகை பார்த்து, சகுந்தலையாக ஆடி அனைவரின் பாராட்டையும் பெற்றார். இவரிடம் புது டெல்லியில் பரதம் பயின்றவர்களில் பிரியங்கா காந்தியும் ஒருவர்.

சித்ரா விஸ்வேஸ்வரன்

நளினம், லயம் இவரது நடனத்தின் ஸ்பெஷாலிட்டி. 'சிதம்பரம்’ என்ற இவரது நாட்டியப் பள்ளியில் பரதம் கற்பவர்களுக்கு நாட்டியத்துடன் முழு மையாக நட்டுவாங்கமும் சொல்லிக் கொடுத்து, அவர்கள் சொந்தமாக டான்ஸ் கிளாஸ் நடத்தவும் தயார் செய்கிறார். ஜப்பானில் இருந்து சான்பிரான்சிஸ்கோ வரை பல நாடுகளிலும் நிகழ்ச்சி நடத்துகிறார். உலகின் பல நகரங்களில் இவரது மாணவிகள் நடன வகுப்புகள் நடத்தி, பரதக்கலையை உலகெங்கும் பரப்பி வருகிறார்கள். இவரது கணவர் விஸ்வேஸ்வரன், ஜி.என்.பி - (பிரபல சங்கீத வித்துவான் ஜி.என் பாலசுப்பிரமணியம்)யின் சகோதரி மகன். சித்ராவின் நடன நிகழ்ச்சிகளில் விஸ்வேஸ்வரன் அற்புதமாகப் பாடுவார்.

சுதாராணி ரகுபதி

பாரம்பரியத்துக்கு மதிப்பு கொடுத்து நளினமாக ஆடுவார். அதேசமயம், நடனத்தில் பல புதுமைகளும் செய்வார். இவர் தயாரித்த 'மமுதா’ நடன நாடகத்தில் தெருக்கூத்து, பரதம், மேற்கத்திய இசை மூன்றும் சிறப்பாகக் கலந்திருக்கும்.

பிருகா பெஸ்ஸெல்

நாட்டிய மேதை பாலசரஸ்வதி போல, அபிநய கலைக்கு இவர் புத்துயிர் கொடுத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். நடனக் கலையில் பல சிகரங்களைத் தொட்டவர். பிரபல எழுத்தாளர் லா.ச.ராமாமிருதம் எழுதிய 'தாரைகள்’ என்ற சிறுகதைக்கு தனி நபராக நின்று பல பாத்திரங்களாக மாறி அபிநயம் செய்து நடனம் ஆடியிருக்கிறார்.

தனஞ்ஜெயன், சாந்தா தம்பதி

தனஞ்ஜெயன் நன்றாக மிருதங்கம் வாசிப்பார். சாந்தா சிறப்பாகப் பாடுவார். கதகளியும் தெரியும் என்பதால் புதுமைக்குக் கேட்கவே வேண்டாம். நாட் டியத்தில் நூற்றுக்கணக்கான ஆண் கலைஞர்களை உருவாக்கியவர்கள். இவர்கள் தங்கள் உடலை என்றுமே ட்ரிம்மாகவும் இளமையாகவும் வைத்திருக்கும் கலையில் தேர்ச்சி பெற்றவர் கள். எல்லா கண்டங்களிலும் இவரது சிஷ்யர்கள், சிஷ்யைகள் மூலம் பரதம் பரவி வருகிறது. பரதக்கலையின் தொடக்கமான பரதமுனியின் ஆசிகள் என்றைக்கும் இவர்களுக்கு உரித்தாகும்.

அலர்மேல் வள்ளி

'என்றும் 16' எனும்படியாக உற்சாகமாகத் துள்ளி ஆடுவார். சிறந்த சங்கீத ஞானம்! ஒடிஸியும் ஆடுவார். சங்கப் பாடல்களை தனது நடனம் மூலம் பிரபலப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு. டிசம்பர், சீஸன்களில் மட்டும் சென்னையில் காணக் கிடைப்பார். மற்ற நேரங்களில் எல்லாம் வெளிநாடுகளில் தொடர்ந்து நிகழ்ச்சிகள் கொடுப்பார்.

ஸ்வர்ணமுகி

அபூர்வமான ஒரு கலைஞர். உடல் ரப்பர் மாதிரி வளையும். 108 கரணங்களில் கடினமான போஸ்களை எல்லாம், மற்றவர்கள் நினைத்துப் பார்க்கக் கூட முடியாத லாகவத்தோடு, சிரமமின்றிச் செய்வார்.

நர்த்தகி நடராஜ்

தமிழ் இலக்கியத்தில் ஆழமான அறிவு கொண்ட திருநங்கை. தஞ்சாவூர் கிட்டப்பா பிள்ளையிடம் குருகுலமாக இருந்து நடனம் பயின்றவர். பெண்களுக்கே உரிய நளினம், மென்மை, நாணம் போன்றவற்றை அழகாக வெளிப்படுத்துவார். 'முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்’ போன்ற பாடல்களில் ஒவ்வொரு பதத்துக்கும் இவர் காட்டும் அபிநயம் கண்ணுக்கு விருந்து.

ஸ்ரீதர் - அனுராதா தம்பதி

கன்னட திரைப்பட உலகில் பாப்புலர் ஹீரோவாக பல படங்கள் நடித்துவிட்டு, நடிப்புக்கு முழுக்கு போட்டு நாட்டியத் துறைக்கு வந்தவர் ஸ்ரீதர். தம்பதி இருவருமே சிறந்த டான்ஸர்கள். ராமாயணம், மகாபாரதம் போன்ற காப்பியங்களை நடன நாடகமாகச் செய்து, இருவருமே எல்லா கேரெக்டர்களிலும் ஆடி நம்மை வியக்க வைப்பார்கள்.

டொமினிக் டெலோர்

பிரான்ஸ் நாட்டில் இருந்து நாட்டியத்துகாக தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஆண் கலைஞர். வைத்தீஸ்வரன் கோவில் முத்துசாமி பிள்ளையிடம் மூன்று ஆண்டு கள் பரதம் கற்றுக் கொண்டவர். நந்தனார் கதைக்கு இவர் ஆடுகையில் நம்மையும் அறியாமல் கண்கள் பெருக்கெடுக்கும்.

இசை

கிருஷ்ண கான சபாவில் 50 ஆண்டுகளுக்கும் மேல் செயலாளராகப் பணியாற்றிய கலைமாமணி யக்ஞராமனின் மகன் ஒய்.பிரபு. இவர் கடந்த எட்டு ஆண்டுகளாக கிருஷ்ண கான சபாவின் செகரெட்டரியாக இருக்கிறார். சார்ட்டட் அக்கவுன்டன்ட் ஆக இருக்கும் இவர், சில இசைக் கலைஞர்கள் பற்றிய அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார்.

மஹாராஜபுரம் சந்தானம்

இவரும் இவரது தந்தை மகாவித்வான் மஹாராஜபுரம் விஸ்வநாத அய்யரும் சேர்ந்துதான் 1954-ம் ஆண்டு, கிருஷ்ண கான சபாவை ஆரம்பித்தனர். 1955-ம் ஆண்டு முதல் என்தந்தை செகரட்டரியாக ஆனார். கல்லூரி மாணவ மாணவியர், இளைஞர்கள் கூட்டத்தையும் கர்நாடக இசையின் பக்கம் இழுத்தவர் என்று சந்தானத்தைச் சொல் லலாம். எளிமையாக, புரிகிற மாதிரி பாடுவார். மெல்லிசை போல, கர்நாடக இசையையும் அனைவருக்கும் போய்ச் சேர வைத்தது இவரது சாதனை. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இவருக்கு பெரிய விசிறி. தன் இசைவாழ்வில் உச்சகட் டத்தில் இருந்த நேரத்தில் விபத்தில் இவர் மறைந்தது, கர்நாடக இசைக்குத் துரதிருஷ்டம். கிருஷ்ண கான சபா இருக்கும் சாலைக்கு இவர் பெயர்தான் சூட்டப்பட்டுள்ளது.

லால்குடி ஜெயராமன் - வயலின்

பத்மபூஷன் விருது பெற்றுள்ள இவர், 50 ஆண்டுகளாக கோகுலாஷ்டமி விழா விலும் டிசம்பர் சீசனிலும் கிருஷ்ண கான சபாவில் கச்சேரி நடத்தி வருகிறார். இங்கே ஒவ்வொரு கச்சேரிக்கும் ஒரு வர்ணமோ தில்லானாவோ புதிதாக வாசிப்பது இவர் ஸ்பெஷாலிட்டி. சாரதா ராமனாதன் இயக்கிய, 'சிருங்காரா’ என்ற படத்துக்கு இசை அமைத்து, இந்தியாவின் சிறந்த திரைப்பட இசை அமைப்பாளருக்கான ஜனாதிபதி விருது பெற்றவர். இவரது 50-வது ஸோலோ நிகழ்ச்சி எங்கள் சபாவில் நடந்தபோது, லதா மங்கேஷ்கர் தலைமை வகித்துப் பாராட்டியதை மறக்கவே முடியாது. ஏராளமான இசைக் கலைஞர்களை உருவாக்கிய பெருமை இவருக்கு உண்டு. இவர் ஒரு சிறந்த வாய்ப் பாட்டுக்காரரும் கூட.

எம்.டி.ராமநாதன்

குறைவான ஸ்ருதியில் பாடக்கூடிய அற்புதமான பாடகர். இவருக்கு வயலின், மிருதங்கம் வாசிப்பது கஷ்டம். 'ஸ்ருதியை உயர்த்திப் பாட முடியுமா?’ என்று பாலக்காடு மணி அய்யர் கேட்ட நேரத்தில் கூட, 'எனக்கு இதுதான் சௌகரியம்’ என்று சொல்லிவிட்டார். அவர் கச்சேரி நடக்கும் போது எங்கள் வீட்டில் இருந்து நிறைய பாதாம் பருப்பை நெய்யில் வறுத்து மிளகுப் பொடி போட்டுக் கொண்டு வருவோம். பாதாம் பருப்பை, ஒவ்வொன்றாக வாயில் போட்டுக் கொண்டு பாடுவது இவருக்குப் பிடிக்கும்.

கே.ஜே.ஜேசுதாஸ்

கர்நாடக இசையையும், திரைப் படங்களுக்கு பின்னணி பாடுவதையும் சரியாக பேலன்ஸ் செய்து, இரண்டிலும் முன்னணியில் இருக்கும் பாடகர். இவர் கச்சேரி செய்யும்போது அவரது சொந்த சவுண்ட் சிஸ்டம், மைக்குகளைத்தான் உபயோகப்படுத்துவார். அதற்காக அவரது டெக்னிஷியன்கள் முன்கூட்டியே வந்து ஏற்பாடு செய்துவிடுவார்கள். எப்போது கச்சேரி ஏற்பாடு செய்தாலும் கூட்டம் நிரம்பி வழியும். கேரளா, கர்நாடகாவில் மிகப்பெரிய மைதானங்களில்தான் இவரது கச்சேரிகள் நடக்கும். 'ஹரிவராஸனம்’ என்ற ஐயப்பன் பாடலை இவர் எப்போது பாடினாலும் நமக்கு கண்களில் நீர் பெருகும்.

சுதாரகுநாதன்

எம்.எல்.வசந்தகுமாரியின் பிரதம சிஷ்யை சுதா. பல ஆண்டுகள் மேடைகளில் குருவுடன் சேர்ந்து பாடி யிருக்கிறார். குருவின் வழக்கத்தைப் பின்பற்றி இன்றும் கிருஷ்ண கான சபாவில் கிறிஸ்துமஸ் அன்று காலை ஒவ்வொரு ஆண்டும் பாடி வருகிறார். இவரது இசைக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். சென்னை எத்திராஜ் கல்லூரியில் எம்.ஏ. ஆங்கில இலக்கியம் படித்த சிறந்த மாணவி. 'ஆறுமோ ஆவல் ஆறுமுகனே’ இனிமையாகப் பாடுவார்.

ரவி கிரண்

இரண்டரை வயதிலேயே மேடை ஏறி, எந்தப் பாட்டை யார் எழுதியது, என்ன ராகம் என்று சொல்லி அனைவரையும் வியக்க வைத்தவர். அந்த நிகழ்ச்சியில் ஒரு டிக்கெட் ஒரு ரூபாய் என்று வைத்து 1200 ரூபாய் வசூல் ஆனது. அதை ரவி கிரணிடம் கொடுத்தபோது, அவர் தந்தை நரசிம்மன் அந்தத் தொகையை கிருஷ்ண கான சபாவுக்கே நன்கொடையாகக் கொடுத்தது நெகிழ்வான ஒரு நினைவு. 12-வது வயதில் இருந்து கோட்டு வாத்திய கச்சேரிகள் செய்து வருகிறார்.

டி.என்.சேஷகோபாலன்

அழகான குரல், இசையில் ஆழமான அறிவு, கடினமான உழைப்பு எல்லாம் இவரது ப்ளஸ். இவருக்கு நிறைய இளைஞர்கள் ரசிகர்கள். தியாகராஜ ஸ்வாமிகள் இயற்றிய 'ஓ ரங்க சாயி’ பாடலை இவர் பாடும்போது, எக்ஸ்ட்ரா மெருகு, அழகு, இனிமை கிடைக்கும். குன்னக்குடி வைத்தியநாதன் தயாரித்த 'தோடிராகம்’ படத்தில் ஹீரோவாக பாடி, நடித்திருக்கிறார்.

உன்னி கிருஷ்ணன்

'அந்த கிருஷ்ண பகவான் மாதிரியே அழகா இருக்கான். நார்த் இந்தியாவிலே இருந்து சினிமாகாரங்க இவனை கடத்திண்டு போயிடுவா’ என்று பிரபல கலைவிமர்சகர் சுப்புடு சொல்வார். சம்பிரதாயமான உடை தவிர, ஜீன்ஸ், டீ ஷர்ட் அணிந்தும் படு ஸ்மார்ட் ஆக இருப்பார். சினிமாவில் பாடிய முதல் படமான 'காதலன்’ படத்தின், 'என்னவளே, அடி என்னவளே’ பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடருக்கான ஜனாதிபதி விருது பெற்றவர். ஜேசுதாசைப் போலவே திரைப்படங்களுக்குப் பாடுவதையும், கர்நாடக இசையையும் நன்றாகவே பேலன்ஸ் செய்கிறார்.

பாம்பே ஜெயஸ்ரீ

லால்குடியின் சிஷ்யை. லால்குடி ஜெயராமனிடம் இசை கற்றுக் கொள்வதற்காகவே மும்பையில் இருந்து சென்னைக்கு வந்துவிட்டவர். இந்துஸ்தானி இசையும் நன்றாக வரும். இளம் வயதில் சங்கீத சூடாமணி விருது பெற்ற சிலரில் குறிப்பிடத்தக்கவர். இவர் பாடுவதைக் கேட்டால் மனசுக்கு நிம்மதி, ஆனந்தம், எல்லாமே கிடைக்கும். 'சர்வம் பிரம்ம மயம்’, 'கிருஷ்ணாநீ பேகனே’ - இவரது ஸ்பெஷல்.

சஞ்சய் சுப்பிரமணியம்

சில ஆண்டுகள் முன்புவரை ஆடிட்டராக பிராக்டிஸ் செய்தவர். இசையை, கல்கத்தா கிருஷ்ண மூர்த்தி யிடமும், கீர்த்தனைகள் பாட நாகஸ்வர வித்வான் வைத்தியநாதனிடமும் கற்றவர். ஒவ்வொரு கச்சேரியும் கேட்பவர்களுக்குப் புது அனுபவமாக இருக்கும். தமிழ் மூவர்களான முத்து தாண்டவர், அருணாசல கவிராயர், மாரிமுத்துப் பிள்ளை பாடல்களை நிறையப் பாடுவார். நிறையப் புத்தகங்கள் படிப்பார். கல்யாண கச்சேரிகளை ஒப்புக் கொள்வதில்லை என்ற கொள்கை உடையவர்.

மாண்டலின் ஸ்ரீநிவாஸ்

குழந்தைப் பருவத்தில் இருந்தே இசைமேதை. 10 வயதில் இருந்து கச்சேரி. இசை வாத்தியக் கச்சேரிக்கு இத்தனை கூட்டம் சேர்த்தது இவரது பலம். மேற்கத்திய இசைக் கருவியான மாண்டலினில் சிறிய மாற்றங்கள் செய்து, உலகம் முழுவதும் மாண்டலினை நோக்கி தனிகவனம் ஈர்த்தவர். ஒரு நிகழ்ச்சியில், சேஷகோபாலன் இவரை நெக்குருகப் பாராட்டிவிட்டு, தன் மோதிரத்தையும் கழற்றி அணிவித்தார்.

அருணா சாய்ராம்

முன்பு, மும்பையில் இருந்து வந்து பாடுவார். இப்போது, சென்னையிலேயே செட்டில் ஆகிவிட்டார். இவர் கச்சேரியை ஆயிரம் பேர் அரங்கில் அமர்ந்து கேட்டாலும், அதில் ஒவ்வொருவருமே அருணா சாய்ராம் தனக்காகவே பாடுவதாக நினைக்க வைப்பது இவர் சிறப்பு. அபங்க், இந்துஸ்தானி இசை இவரது ஸ்பெஷாலிட்டி. எந்தப் பாட்டு பாடுகிறாரோ, அந்த மூடுக்கு ஆடியன்ஸை அழைத்துச் செல்லுவார். பெப்சி நிறுவனத்தின் பிரதம தலைமை அதிகாரியான இந்திரா நூயி இவரது நெருங்கிய உறவினர். கச்சேரிகளை ரசிப்பதற்காகவே சத்தமில்லாமல் சென்னைக்கு வந்து போவார்.

நாடகம்

நாரத கான சபாவின் காரியதரிசியாக 1962 முதல் இருந்து வருகிறார் சீனியர் அட்வகேட் ஆர்.கிருஷ்ணஸ்வாமி. இயல், இசை, நாடகத் துறைகளுக்கு ஆற்றிய சேவைக்கு 'கலைமாமணி’ விருது பெற்றவர். நாடகத் துறை கலைஞர்கள் பற்றிய அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார்.

ஆர்.எஸ்.மனோகர்

இதிகாசப் புராண, சரித்திர நாடகங்களைத் தொடர்ந்து தயாரித்து இயக்கி, முக்கியப் பாத்திரங்களில் நடித்தவர் மனோகர். இலங்கேஸ்வரன், சாணக்ய சபதம் போன்ற நாடகங்களுக்காக அசாத்திய உழைப்பும், அதிக பொருட் செலவும் செய்தார். 'நாடகக்காவலர்’ என்று இவருக்கு அளிக்கப்பட்ட பட் டத்துக்கு முற்றிலும் தகுதியானவர். அரண்மனை, காடு, நந்தவனம், வீடு போன்ற செட்களை சில நொடிகளில் மேடையில் மாற்றிக்காட்டி, நாடக ரசிகர்களை திகைப்பில் ஆழ்த்தியவர். அவரது நாடகங்கள் எப்போதும் எங்கும் ஹவுஸ்ஃபுல்லாகவே இருக்கும்.

எங்கள் நாரத கான சபா அரங்கைக் கட்டிய போது, மேடை அமைப்பு தொடர்பாக, ஆர்.எஸ்.மனோகர் முக்கியமான சில ஆலோசனைகள் கூறினார். அவருடைய அனுபவ அறி வுரையுடன் சேர்ந்து உருவான இந்த மேடையின் அளவுக்கு சென்னையில் வேறெங்கும் நாடக அரங்கத்தைப் பார்க்க முடியாது.

சோ

ஒய்.ஜி.பி-யின் யு.ஏ.ஏ நாடகக் குழுவில் நடிக்க ஆரம்பித்தார் சோ. அப்போது அவர் நடித்த ஒரு நாடகத்தில் அவரது காரெக்டர் பெயரே, அவரது பெயராகி விட்டது. சோவின் தம்பி, அம்பி, நண்பர் நீலு போன்றவர்கள்தான் விவேகா ஃபைன் ஆர்ட்ஸ் குழுவை ஆரம்பித்தனர். நெருங்கிய நண்பர்களே அவருடைய குழு. காமராஜ், எம்.ஜி.ஆர், கலைஞர் உட்பட பல தலைவர்கள் இவரது நாடகங்களைப் பார்த்து ரசித்து இருக்கிறார்கள். அரசியலையும் அரசியல் தலைவர்களையும் தைரியமாக நையாண்டி செய்வார். 'சோ’ நாடகம் என்றாலே பலத்த போலீஸ் பந்தோபஸ்து இருக்கும். நாடக அரங்குக்குள் சி.ஐ.டி-கள் குறிப்பு எடுப்பார்கள். அவர் நாடகங்கள் ஹவுஸ்ஃபுல் ஆவது மட்டுமல்ல, நாடகம் முழுவதும் சிரிப்பும், கைதட்டலும் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கும்.

கே.பாலசந்தர்

சினிமா உலகில் இவர் அடைந்த உச்சத்துக்கு முக்கியக் காரணம் - நாடகத்துறையில் பெற்ற செம்மையான அனுபவம்தான். 'எதிர்நீச்சல்’ நாடகத்தில் ஒரே கட்டடத்தில் பல குடித்தனங்கள் இருப்பதைக் காட்ட மாடியும், கீழேயுமாக ஒரு ஸெட் அமைத்தார். தமிழ் நாடக மேடைக்கு அது, புதுஅனுபவம். மாது, பட்டு மாமி பேசுகிற வசனங்களுக்கு அன்றைய காலகட்டத்தில் கிடைத்த கை தட்டலுக்கு இன்றும் ஈடு இணையில்லை. கே.பி-யும் அவரது ஸ்டார்களும் சினிமாவில் தொடர்ந்து பிஸி ஆனது... நாடகத்துறைக்கு ஏற்பட்ட ஒரு பெரிய இழப்பு என்றே சொல்லலாம்.

ஒய்.ஜி.மகேந்திரா

1952-ல் ஆரம்பிக்கப்பட்டு, தொடர்ந்து 60 ஆண்டுகளாக... இன்றும் நாடகம் போடும் ஒரே நாடகக் குழு ஒய்.ஜி.பி-யின் யூஏ.ஏ-தான். ஜெயலலிதா, லட்சுமி, மௌலி, விசு போன்று பல சினிமா பிரபலங்கள் இந்தக் குழுவில் நடித்திருக்கிறார்கள். நிறைய புது நடிகர்களை ஒய்.ஜி.பி. உருவாக்கியிருக்கிறார். அவரது நாடகங்கள் 'அறிவாளி’, 'பார் மகளே பார்’ 'கௌரவம்’, 'பரிட்சைக்கு நேரமாச்சு’, என்ற பெயர்களில் திரைப்படங்களாக வந்திருக்கின்றன. ஒய்.ஜி.பி-யின் மகன் ஒய்.ஜி.மகேந்திரா சின்னஞ்சிறு வயது தொட்டே நாடகத்தில் ஊறியவர். அதனால் இன்றும் நாடகக் குழுவை சிறப்பாக நடத்துவதுடன் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர பாத்திரங்களில் நடித்தும் வருகிறார். ஒய்.ஜி.மகேந்திராவின், 'வேல் வேல் வெற்றி வேல்’ நாடகத்தைப் பார்ப்பதற்காக ஒய்.ஜி.பி. வந்திருந்தார். வேறு ஒரு நிகழ்ச்சி இருந்த காரணத்தால் நாடகம் தொடங்குவது தள்ளிப்போனது. அதனால், நாடகம் பார்க்காமல் வீட்டுக்குத் திரும்பினார். சிறிது நேரத்தில் ஹார்ட் அட்டாக் வந்து காலமானார். ஒருவேளை அன்று அவர் நாடக அரங்கிலேயே இருந்து, நாடகத்தை ரசித்துக் கொண்டு இருந்தால்... ஹார்ட் அட்டாக் வராமலே போயிருக்கலாம் என்று ஏக்கத்துடன் நினைத்துக் கொள்வேன்.

சிவாஜி

சினிமாவில் ஜெயித்த பின்னரும் 'வீரபாண்டிய கட்டபொம்மன்’, 'தங்கப்பதக்கம்’, 'வியட்நாம் வீடு’ போன்ற நாடகங்களால் நாடக மேடையைச் சிறப்பித்தவர். நாடகம் இருக்கும் நாட்களில் மதியம் 2 மணிக்கே அரங்குக்கு வந்து விடுவார். 4 மணி வரை இங்கேயே தூங்குவார். ஃப்ரெஷ்ஷாக கண் விழித்தால், நாடகம் முடியும் வரை வேறு எந்த சிந் தனையும் இருக்காது. அவர் மேடைக்கு வரும் முதல் காட்சியில் இருந்தே நாடகம் களை கட்டிவிடும். தமிழ்நாட்டில் அதிக சன்மானம் பெற்ற நாடகக்குழு சிவாஜி நாடக மன்றம்தான்.

எஸ்.வி.சேகர்

மனோகர் ஒருவிதம் என்றால்.... இவர் குழு இன்னொரு துருவம். சேகர் டிராமக்களில் யாருக்கும் எதற்காகவும் டென்ஷன் இருக்காது. ரொம்பவும் காஷ§வல். மேக்அப் போடாமலே நாடகம் நடிக்கும் ஒரே நடிகர் சேகர்தான். தாமதமாக நாடகத்தை ஆரம்பிக்க நேர்ந்தாலும், ரயில் வேகத்தை அட்ஜஸ்ட் பண்ணுகிற மாதிரி... சரியான நேரத்தில் முடித்து விடுவார். சேகர் எப்போதுமே வசூல் ராஜா.

கிரேஸி மோகன்

எஸ்.வி. சேகருக்கும் இவருக்கும்தான் நகைச்சுவையில் விறுவிறு போட்டி இன்று வரை தொடர்கிறது. டெலிபதி மாதிரியான ஒருவித அலைவரிசையில் இவருடைய ஒட்டுமொத்த குழுவும் இயங்கும். கமல்ஹாசன் படங்களுக்கு வசனம் எழுதி கூடுதல் புகழ் பெற்றாலும்... நாடக மேடையில் எப்பவுமே மோகன் பிஸிதான். இவரும் எஸ்.வி.சேகர் போலவே 'ஒரே நாளில் மூன்று நாடகம்' போன்ற சாதனைகளைப் படைத்து, துளியும் ஓயாமல் நகைச்சுவை மழை பொழிபவர்தான்!