குறிப்பிட்ட ஒரு நாயகன், நாயகியை மையமாகக் கொண்டு கதைகளை அமைப்பது, நூல் பிடித்தது போல அந்தக் கதையை நகர்த்திச் சென்று ஒரு தீர்வை அல்லது முடிவை வழங்கி, பார்வையாளர்களை சந்தோஷமாக அல்லது மனம் கனத்து வழியனுப்பி வைப்பது போன்ற சினிமாக்கள் இன்று காலாவதியாகி விட்டன. சிக்கலும் குழப்பமுமான வாழ்க்கைச்சூழல் நம் கலைகளுக்குள்ளும், கலைகளில் ஒன்றான சினிமாவுக்குள்ளும் வினைபுரியத் தவறவில்லை.

அமெரிக்காவிலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் 1990களிலேயே ஒரு புதுவிதமான சினிமாவுக்கான சூழல் உருவானது.

2005-ல் 'ஹேப்பி எண்டிங்ஸ்’ என்ற திரைப்படத்தை விமர்சிக்கும்போது அலீசா குஆர்ட் எனும் விமர்சகர் ஒரு புது பதப் பிரயோகத்தைப் பயன்படுத்தினார். ஹைப்பர் லிங்க் சினிமா (hyperlink cinema) என்ற அந்தப் புதிய வகை சினிமாவின் கூறுகளாக பல திசைகளில் கதை பயணிப்பது, தொடர்பற்ற பல்வேறு பாத்திரங்கள் கதையில் ஏதாவதொரு புள்ளியில் இணைவது, ஃப்ளாஷ்பேக், ஃப்ளாஷ் ஃபார்வர்டு உத்திகளின் மூலம் தொடக்கத்துக்கும் முடிவுக்கும் இடையே முன்னும் பின்னுமாக நகர்ந்தபடி கதை கூறுதல், படங்களில் அடிக்குறிப்புகளைப் பயன்படுத்துவது, திரையை இரண் டாகவோ நான்கா கவோ பிரித்துப் பயன்படுத்துவது போன்றவற்றை முன் மொழிந்தார்.

இந்த வகையில் கதைசொல்லும் போக்கை ஆரம்பித்து வைத்த படமாக அமெரிக்க இயக்குநர் குவான்டின் டொரான்டினோவின் 'பல்ப் ஃபிக்ஷன்’ (pulp fiction) கருதப்படுகிறது. உலகத் திரைப்பட வரலாற்றில் இத்தாலியன் நியோ ரியலிஸம், ஃப்ரெஞ்ச் நியூ வேவ் போன்ற திரைப்பட இயக்கங்கள் ஹாலிவுட் வணிகத் திரைப்படங்களுக்கு மாற்றாக ஒரு புதிய போக்கை உருவாக்கியதைப் போல, 1990-களுக்குப் பிந்தைய உலக சினிமாவின் போக்கில் 'ஹைப்பர் லிங்க் சினிமா’ பெரும் தாக்கத்தை விளைவிக்கத் தொடங்கி இருப்பதைக் காணமுடிகிறது.

விளம்பர நிறுவனத்தில் ஓவியராக இருந்த சத்யஜித் ரே, 1950-களில் லண்டனுக்கு அலுவலகப் பணியாக அனுப்பப்பட்டார். அங்கு தங்கியிருந்த ஆறு மாதங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களைப் பார்த்ததாகவும், அங்கு இத்தாலிய நியோ ரியலிஸப் படங்களில் முக்கியமானதாகக் கருதப்படும் 'பைசைக்கிள் தீவ்ஸ்’ எனும் (மிதிவண்டி திருடர்கள்) படம் விளைவித்த பாதிப்பிலேயே தன்னுடைய 'பதேர் பாஞ்சாலி’யை 1956-ல் வெளியிட்டு அதன்மூலம் இந்திய சினிமாவை உல கறியச் செய்தார். ஆனாலும், ரேயின் 'பதேர் பாஞ்சாலி’ இந்திய சினிமாவின் போக்கை உடனடியாகப் பெரிதாக அசைத்து விடவில்லை.

கர்நாடகத்தில் பி.வி.காரந்த், கிரிஷ் கர்னாட், கிரிஷ் காசரவள்ளி, கேரளத்தில் அடூர் கோபாலகிருஷ்ணன், அரவிந்தன், வடஇந்தியாவில் மணிகவுல், குமார்சகானி ஆகியவர்களை ரேயின் தொடர்ச்சியாகக் குறிப்பிடலாம். இவர்கள் அனைவருமே கலைப்பட இயக்குநர்கள் என்று முத்திரை குத்தப்பட்டவர்கள். இவர்களால் இவர்கள் சார்ந்த மாநில மொழிப் படங்களின் வெகுஜன சினிமாவுக்குள் இதன் தாக்கத்தைக் கொண்டு சேர்க்க முடிந்ததில்லை. தமிழகத்தில் இந்த ரியலிஸ கலைப்பட மரபைப் பரி சோதித்தவர்களாக ஜெயகாந்தனையும், ஜான் ஆபிரஹாமையும் ஆய்வாளர்கள் குறிப்பிடுவது உண்டு. ஆனால், ரேயின் தாக்கத்தால் உருவான மகேந்திரனையும் அவரின் 'உதிரிப்பூக்கள்’ படத்தையும் தவிர்க்கவே முடியாது.

ஆனாலும், மேற்கண்ட இயக்குநர்களின் முயற்சிகள் வெகுஜன சினிமாவை எவ் விதத்திலும் பாதிக்கவில்லை. இதை வலியுறுத்திச் சொல்வதற்குக் காரணம், பொதுவாக 1990-களுக்கு முந்தைய மாற்று சினிமா மற்றும் கலைப்பட முயற்சிகள் சிறு பான்மை ரசிகர்களுக்கான சினிமாவாக குறுகிப் போய்விட்டது. ஆனால், 90-களுக்குப் பிந்தைய பின்நவீனத்துவ சினிமா அல்லது விளிம்பு நிலை சினிமா அல்லது நான்லீனியர் சினிமா அல்லது ஹைப்பர்லிங்க் சினிமா (இவற்றைத் தனித் தனியாகவும் வகைப்படுத்த முடியும். அதேநேரத்தில், எல்லாவற்றையும் இணைக்கும் பொதுக்கூறுகளும் உண்டு) போன்றவை, இன்று வெகுஜன சினிமாவுக்குள் ஓரளவு தாக்கத்தை விளைவிக்கத் தொடங்கியுள்ளன. இன்றைய உலகமயச்சூழலில் இதுபோன்ற வகைப் பாட்டு இடைவெளிகள் வெகுவாகக் குறைந்துவிட்டதோடு, கலைப்படம் என்ற ஒன்று தனியாக இருக்க முடியாது என்ற அளவுக்குப் புரிதலும் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க இயக்குநர்கள் மார்ட்டின் ஸ்கார்சிஸ், குவாண்டின் டொராண் டினோ, ஸ்டீவன் சோடர்பர்க், மெக் ஸிகோ இயக்குநர் அலக்சாந்த்ரோ கொன்சாலஸ், ஜெர்மனியின் டாம் டைக்வர், பிரேசிலின் ஃபெர்னான்டோ மெய்ரெல்ஸ், தென்கொரிய இயக்குநர் கிம் கி டக் போன்றவர்களைப் பற்றி இங்கே சொல்லியாக வேண்டும். வர்த்தகம், கலை என்ற இருமை எதிர்வுகளை இவர்கள் தகர்த்துள்ளனர். ஆகவே, 21-ம் நூற்றாண்டின் சினிமாவைப் படைக்க விரும்புகிற எவரும் மேற்கண்ட இயக்குநர்களின் படைப்புகளைப் பார்த்தறியாமல் வெற்றிகரமான ஒரு திரைக்கதையை எழுத முடியாது.

2011-ம் ஆண்டு தமிழில் 125-க்கும் மேற்பட்ட படங்கள் வெளியானது. இதில், வணிக ரீதியாக வெற்றிபெற்ற படங்களின் எண்ணிக்கை குறித்து தயாரிப்பாளர்களின் கவலை ஒரு பக்கமிருக்க... ஒரு சினிமாவாக பார் வையாளர்களை, விமர்சகர்களைக் கவர்ந்த படங்களின் எண்ணிக்கையும் பெரிதாக இல்லை என்பதுதான் கவலையளிக்கக் கூடிய விஷயம். அதேசமயம், தமிழ்சினிமா உலகில் ஆகச்சிறந்த தொழில்நுட்பக் கலை ஞர்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அப்படியானால், எங்கேதான் பிரச்னை?

நட்சத்திர நாயகர்கள் பஞ்ச் டயலாக் பேசிக்கொண்டுதான் இருப்பார்கள். ஆனால், ஸ்டார் சினிமாக்களுக்கு இணையாக காலத்துக்குத் தேவை யான, பொருத்தமான புதிய முயற்சிகளும் இடைவிடாமல் நிகழ்ந்து கொண்டு இருத்தல் வேண்டும். அந்தவகையில், உலக சினிமாக்களோடு நம் சினிமாவை ஒப்பிட்டு நோக்கும்போது நம் இயக்குநர்கள் தடுமாறும் இடம் கதைதான் என்பது புலப்படும். திரைப்படத்துக்குள் கதை என்பதை 'கதை, திரைக்கதை’ என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும். இலக்கியம், ஓவியம், நாடகம் என்று எந்தக் கலை வடிவமானாலும் அந்தந்தக் காலத்துக்குப் பொருத்தமான வடிவத்தைக் கையில் எடுக்க வேண்டியுள்ளது. அந்தவகையில், தமிழ் சினிமாவில் இந்த நூற்றாண்டின் வாழ்வியலில் இருந்து கதைகளையும் திரைக்கதைகளையும் உருவாக்குவதில் பெரும்பான்மை இயக்குநர்கள் பின்னடைந்து விட்டார்களோ என்று தோன்றுகிறது.

தமிழ் சினிமாவில் 2000-த்தின் தொடக்கத்தில் இருந்து ஒரு புதிய சினிமாவுக்கான அறிகுறி தென்படத் தொடங்கியது. 2003-ல் வெளியான பாலாவின் 'பிதாமகன்’ விளிம்புநிலை மனிதர்களை, அவர்களின் உலகத்தை, அழகியலைப் பதிவுசெய்யும் முயற் சியைத் தொடங்கி வைத்தது. 2004-ல் 'விருமாண்டி’யில் கமல்ஹாசன் கிராமிய மண் சார்ந்த அடையாளங்களை அழுத்தமாகவே பதிவு செய்தார். ஆனாலும், 'கதாநாயகனை’ மையமாகக் கொண்ட சினிமாவாக அதைக் கொண்டு சென்ற பலவீனத்தால் அது முழுவீச்சில் வெளிப்படவில்லை. அதேஆண்டில், மூன்று கதைகள் ஒரு விபத்தில் ஒன்றிணையும், 'ஆய்த எழுத்து’ உருவாக்கினார் மணிரத்னம். ஆனால், வழக்கமான அவருடைய உயர்நடுத்தரவர்க்க வாழ்வியலில் இருந்தும், அழகியலில் இருந்தும் அவரால் வெளிவர முடியாததால், அந்தப்படம் வெறும் கதைகூறும் உத்தியாக முடிந்துபோனது. கதையின் அடிப்படையும் வேறு இடத்தில் இருந்து எடுத்தாளப்பட்டது என்ற சர்ச்சை கிளம்பியது.

அதேஆண்டில், செல்வராகவன் '7ஜி ரெயின்போ காலனி’யில் பெரு நகரப் பண்பாட்டில் கீழ்நடுத்தர இளையோர் வாழ்வியலைப் பதிவு செய்வதில் புதிய அணுகுமுறைகளைக் கொணர்ந்தார். 2006-ல் வசந்தபாலனின் 'வெயில்’ எல்லாவற்றிலும் தோற்றவனை நாயகனாக்கி, தமிழகத்தின் சிறுநகர வாழ்வியலை சினிமாவாக்கியது. இது, உலகசினிமாவின் நேர்த்திக்கு அருகில் தமிழ் சினிமாவை நகர்த்தியது.

மேற்கண்ட சினிமாக்கள் எல் லாம் பின்நவீனத்துவ அல்லது ஹைப்பர்லிங்க் சினிமாவின் சிற்சில கூறுகளைக் கொண்டிருந்தாலும், 21-ம் நூற்றாண்டின் புதிய சினிமாவாக எது வும் பரிணமிக்கவில்லை என்பதே என் கருத்து.

2007-ல் அமீர் தன் 'பருத்திவீரன்’ மூலமாக ஒரு பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியதை மறுக்க முடியாது. ஒழுக்க மதிப்பீடுகளை முற்றிலும் துறந்த கடை நிலை மனிதன், தகிக்கும் நிலப்பரப்பு, காட்சிமொழி என்று மிகப்புதிதான சினி மாவைச் சாத்தியமாக்கினார் அமீர். அதேஆண்டில் ராம் இயக்கிய, 'கற்றது தமிழ்’ உலகமயச்சூழலில் விரிவடையும் முரண்கள் உருவாக்கும் மனச்சிக்கல் பற்றிப் பேசியது. 'சுப்பிரமணியபுரம்’ நகரங்களில் அப்பாவி இளைஞர்கள் பொறுக்கிகளாய் உருமாற்றம் பெறுவதை மிகநேர்த்தியான சினிமாவாக்கி சசிகுமார் மேல் மிகப்பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. 'உலகப்படங்களால் உந்துதல் பெற்றேன்’ என்ற வெளிப்படையான அறிவிப்புடன் வெற்றிமாறன் இயக்கிய 'ஆடுகளம்’ கடந்த பத்தாண்டுகளின் மைல் கல்லாகக் கருதத்தக்கது. குமார ராஜாவின் 'ஆரண்யகாண்டம்’ வன்முறையின் குரூர அழகியலை மிகக்கச்சிதமான திரைமொழியில் பதிவு செய்தது.

தொடர்பற்ற மனிதர்கள் ஒரு விபத்தின் மூலம் இணைவதை குறுக்குமறுக்காக கதையாக்கிய 'எங்கேயும் எப்போதும்’ ஜனரஞ்சக அம்சங்களை முன் னிறுத்தினாலும், திரைக்கதையளவில் குறிப்பிடத்தக்கது. நகரத்தின் உதிரி மனிதர்களை நடுத்தர வர்க்கமும் சமூக நிறுவனங்களும் கையாளும் விதத்தை அசலாகச் சொல்ல முயற்சித்த பாலாஜி சக்திவேலின், 'வழக்கு எண் 18/9’ன் வெற்றி, நம்பிக்கை அளிக்கக்கூடியது. இந்தப்பட்டியலில் 'வாகைசூட வா’, 'மைனா’ ஆகிய படங்களையும் சேர்த்துக் கொள்ள முடியும்.

எப்படிக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் தடம் பதித்த படங்களாக 'பருத்தி வீரன்’, 'காதல்’, 'வெயில்’, 'ஆடுகளம்’, 'சுப்பிரமணியபுரம்’, 'ஆரண்யகாண்டம்’ ஆகிய படங்களையே சொல்ல முடிகிறது. இதற்கிடையே கோலிவுட்டுக்கு வெளியே கடந்த ஐந்து ஆண்டுகளாக சிறுநகரங்களைச் சார்ந்த இளைஞர் பலர் சினிமா தயாரிப்பில் ஆவேசமாக ஈடுபட்டு வருகிறார்கள். புதிய டிஜிட்டல் தொழில்நுட்பத்தை கையாளத் தொடங்கியுள்ளனர். 50 லட்சத்தில் இருந்து ஒரு கோடிக்குள் தயாரிக்கப்படும் இத்தகைய படங்களில் சில லாபகரமாக ஓடியதாகவும் சொல் லப்படுகிறது. பிராந்திய விஷயங்களை, அடையாளங்களை, கவலைகளை, பண்பாட்டுக் கூறுகளைக் கொண்ட இந்தப்படங்கள், சென்னையை மையமாகக் கொண்டு வெளிவரும் படங்களில் இருந்து வேறுபட்டு புதிய படைப்புலகை முன்வைக்க முயற்சிப்பவை. அதேசமயம், இவர்களில் சிலருடைய கதைக்களங்களும் கதை மையமும் புதிதாக இருந்தாலும் பலவீனமான 'திரைக்கதை’ இவர்களை, புறப்பட்ட இடத்துக்கே கொண்டுவந்து சேர்த்து விடுகிறது.

இந்த திரைக்கதை அமைப்புகள் வெறும் உத்தியாகப் புரிந்துகொள்ளக் கூடியவை அல்ல. மாறாக, இன்றைய உலகமயச் சூழலில் எளிய மனிதர்கள் பகடைக்காய்களாக உருட்டப்படுவதற்குப் பின்னால் உலகநாடுகளும், பன்னாட்டு நிறுவனங்களும் செயல்படுவதைப் புரிந்துகொள்ளும் போது, 21-ம் நூற்றாண்டுக்கான புதிய திரைக்கதைகளை தாராளமாகக் கையாளமுடியும். தொழில்நுட்பம் மலிவாகி விட்டதாலேயே புதியவர்களின் வருகை பரவலாகும். அதன்மூலம் நல்லசினிமா சாத் தியமாகிவிடும் என்று எதிர்பார்ப்பது, காய்கறிகள் மலிவாகக் கிடைப்பதால் ருசியான உணவு கிடைக்கும் என்று கருதுவதற்கு ஒப்பானது.

தமிழ் சினிமாவின் கதவுகளைத் திறப்பதற்கு விதவிதமான சாவிகளோடு நாள் தோறும் நூற்றுக்கணக்கில் இளைஞர்கள் வந்தவண்ணம் இருக்கின்றனர். பணம், சிபாரிசு, விடாமுயற்சி என்ற விதவிதமான சாவிகளால் திறந்துபார்த்து சோர்ந்து போனவர்களும், திறந்தபின்னும் உட்கார இடமின்றி தவிப்போரும் ஏராளம். எப்படியாவது சினிமாவில் சாதித்தே தீருவேன் என்று சபதமிட்டு நடனம் பயில்வதும், நடிப்புப் பயிற்சிக்குச் செல்வதும், குறும்படங்கள் எடுப்பதுமாக சிதறலான இலக்குகளுடன் வளைய வரும் பதின்வயதினர் ஊருக்குப் பத்து முப்பதாகப் பெருகிக்கொண்டு இருக்கின்றனர். 50 ரூபாய்க்குக் கிடைக்கும் உலகின் தலைசிறந்த திரைக்கதைகளைக் கொண்ட சினிமாக்களைப் பார்த்து ஊக்கம் பெறுவது இன்று சுலபமாக சாத்தியப்பட்டு இருககிறது. தரத்துக்கான அளவை வெகுஉயரமாகக் குறித்துக் கொண்டபிறகு... காரியாபட்டியில் இருந்தோ, களியக்காவிளையில் இருந்தோ உங்கள் வாழ்வனுபவங்களில் இருந்து தமிழ் சினிமாவைத் தலைகீழாக்கும் ஒரு திரைக்கதையை நூறு பக்கங்களில் எழுத முடியும். அதன்மூலம் தமிழ்ச் சினிமாவின் எல்லாக் கதவுகளையும் திறக்கும் தங்கச் சாவி கட்டாயம் கிடைக்கும்.