Published:Updated:

மக்கள் சினிமா

மக்கள் சினிமா
பிரீமியம் ஸ்டோரி
மக்கள் சினிமா

கலை: க.நாகப்பன்

மக்கள் சினிமா

கலை: க.நாகப்பன்

Published:Updated:
மக்கள் சினிமா
பிரீமியம் ஸ்டோரி
மக்கள் சினிமா

டந்த 19-ம் நூற்றாண்டில் உருவாகி, இன்றும் வளர்ந்துவரும் ஒரே கலை வடிவம், சினிமா. சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக கண்களில் கனவுகளை சுமந்துகொண்டு இயக்குநர்கள் வீட்டு வாசலிலும் ஸ்டுடியோக்களிலும் சுற்றிக்கொண்டிருந்த காலம் மலையேறிவிட்டது. சினிமாத் துறையில் நுழைய விரும்புவர்களுக்கு விசிட்டிங் கார்டாக வந்துவிட்டன, குறும்படங்கள். 

தொலைக்காட்சி தொடங்கி இலக்கிய விழா வரையிலும் குறும்படங்கள் தவிர்க்கமுடியாத சக்தியாக வளர்ந்துவிட்டன. தமிழகத்தில் 50-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் விஷ§வல் கம்யூனிகேஷன், மாஸ் கம்யூனிகேஷன், ஊடகக்கலைகள், எலெக்ட்ரானிக் மீடியா பற்றிப் படிக்கும் மாணவர்கள் மட்டுமின்றி, சினிமாவுக்குள் நுழைந்து சாதிக்கநினைக்கும் அத்தனை பேரும் குறும்படங்களில் நுழைந்துவிட்டார்கள்.

''இன்றைய சினிமா கோடிகளில் புரளும் வியாபாரமாகி விட்டது. இந்த நிலை மாறவும் குறும்படங்கள் அவசி யமாகின்றன...'' என்கிறார் நிழல் திருநாவுக்கரசு. இவர் கடந்த 10 ஆண்டுகளாகக் குறும்படங்கள் மற்றும் ஆவணப் படங்களுக்காகவே, 'நிழல்’ இதழை நடத்திவருபவர். மாணவர்களுக்கு குறும்படம் பயிற்சிப் பட்டறை மூலம் கதை, திரைக்கதை, இயக்கம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, நடிப்பு என்று சகல விஷயங்களையும் கற்றுத்தருபவர். குறும் படத்துக்காக, 'சொல்லப்படாத சினிமா’ என்ற நூல் எழுதிய ஆசிரியர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மக்கள் சினிமா

''உண்மையில் குறும்படம் என்பது குட்டிசினிமா இல்லை. இதற்கான வடிவம் வேறு. சினிமா நாவலைப் போன்றது என எடுத்துக்கொண்டால் குறும்படம் சிறுகதையைப் போன்றது. யதார்த்தம் அல்லது கற்பனைக் கதையை ஒரு நிமிடம் முதல் 30 நிமிடத்துக்குள் சொல்வதே குறும் படம் என கருதப்படுகிறது. பிரசாரம், அனிமேஷன், மியூசிக் ஆல்பம் என எந்த வடிவத்திலும் குறும்படம் எடுக்கலாம். மேக்கப், பாட்டு, தயாரிப்பு, நகைச்சுவை டிராக் என்று எதுவும் குறும்படத்தில் தேவையில்லை.

ஆவணப்படம் என்பது உள்ளதை உள்ளபடி யதார்த்தம் குலையாமல் பிரதி பலிப்பது. சமூக வரலாற்றின் முக்கிய அம்சம் ஆவணப்படம்.

மக்கள் சினிமா

நியூஸ் ரீல், விளையாட்டுச் செய்திகள், அறிவியல் செய்திகள், வரலாறு, மன்னர் வாழ்க்கை, கோயில்கள், பயண நிகழ்வுகள், மலை யேறுதல், கல்வி, கட்டடக்கலை, டிஸ்கவரி சேனலில் காட்டப்படும் காணுயிர்ச் செய்திகள் என எல்லாமே ஆவணப்பட வகையைச் சார்ந்த வைதான்.

குறும்படங்கள் என்பவை கதைக்கு ஏற்ற நடிகர்களை வைத்து நடிக்கச் செய்வது. ஆவணப்படம் என்பது நடந்த ஒரு உண்மை சம்பவத்தை, பாதிக்கப்பட்ட, சம்பந்தப்பட்ட மக்களின் உண்மை சார்ந்து இயங்குவது. இரண்டும் இணைந்தது டாக்குடிராமா. நல்ல தரமான முறையில் குறும்படம் எடுக்க

மக்கள் சினிமா

20,000 போதும். சினிமா போன்ற அதிகாரக் கட்டமைப்பு இல்லாமல், யார் வேண்டுமானாலும் குறும்படம் எடுக்கலாம். முழுமையான சுதந்திரத் தன்மை யுடன் கருத்து சொல்லும் உரிமை இதில் உண்டு. கையடக்கக் கேமரா, செல்போன் என நவீன சாதனங்கள் குறும்படம் எடுக்கும் முறையை எளிதாக்கிவிட்டன. செல்போனில் படம் எடுத்து, இண்டர்நெட்டில் எடிட்டிங் சாப்ட்வேரை டவுன்லோடு செய்து செலவில்லாமலும் படம் எடுக்கலாம்.

மக்கள் சினிமா

சினிமாவில் செய்யமுடியாத விஷயத்தை குறும் படத்தில் இளைஞர்கள் செய்துபார்க்க வேண்டும். வியாபாரத்துக்காகப் பயன்படுத்த வேண்டாம்...'' என்கிறார் நிழல் திருநாவுக்கரசு.

'நாக் அவுட்’ குறும்படம் மூலம் எல்லோரின் கவனத்தை ஈர்த்தவர் எடிட்டர் பி.லெனின். குறும்படங்களுக்கு இலவசமாக எடிட்டிங் செய்து தருபவர். இவர், ''கதை சொல்லும் உத்தியே குறும் படத்துக்குப் போதும். தொழில்நுட்ப நேர்த்தி அதிகம் தேவையில்லை. குறும்படத்துக்கு இலக்கணமே தேவையில்லை. இசை சொந்தமானதாக இல்லாவிட்டால், மற்ற பட இசையை போடாமல் அப்படியே விட்டுவிடலாம். காப்பி அடிக்க வேண்டாம். அப்போதும் உலக அளவில் படம் பேசப்படும்.

என்ன நினைக்கிறோமோ அதை அப்படியே எடுப்பதுதான் குறும்படம். கருதான் முக்கியம். பல விழாக்களுக்கு நடுவராகச் செல்கிறேன். கதைக்கு 20 மார்க், கேமரா 10 மார்க், எடிட்டிங் 10 மார்க் என்றுதான் பிரிக்கிறோம், இசைக்கு மார்க் இல்லை.

ஒருத்தன் பேசிக்கிட்டே போறான். 'என்னை ஒண்ணும் சொல்லமாட்டாங்க. உன்னைத்தான் குற்றம் சொல்வாங்கன்’னு வசனம் பேசுறான். இதை அப்படியே படமா எடுக்குறோம். கடைசியில கேமரா கோணத்தை திருப்புனா பக்கத்துல யாரும் இல்லை. அந்த இளைஞன் போற இ.என்.டி. மருத்துவமனையைக் காட்டுறோம். காதுகிட்ட பேசுறதா இந்த கதையை குறும்படமா எடுத்துடலாம்.

சினிமாவுக்கு போகணும்னு ஒரே காரணத் துக்காக குறும்படம் எடுக்க வேண்டாம். இது தனி ஊடகம் என அழுத்தமாகச் சொல்லி, பொறுப் போடு குறும்படத்தை எடுக்கவேண்டும்’ என்கிறார் பி.லெனின்.

எழுத்தாளர் அழகிய பெரியவனின் 'குறடு’ சிறுகதையை 'நடந்த கதை’ என்ற பெயரில் குறும் படமாக எடுத்து இந்தியாவின் சிறந்த குறும்படம் உட்பட 15 விருதுகளைப் பெற்றவர் குறும்பட இயக்குநர் பொன்.சுதா.

''தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் செருப்பு போடாமல் அனுபவித்த வலியோடு இளைஞன் ராணுவ வீரனாகி பூட்ஸ் போட்டு கிரா மத்தில் வருகிறான். தாழ்த்தப்பட்ட இளைஞனின் கோபம், கொந்தளிப்பை இன்றைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டியே இந்த குறும்படம் எடுத்தேன்...'' என்கிறார் பொன்.சுதா.

மக்கள் சினிமா

'திற’ குறும்படம் மூலம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியவர் பிரின்ஸ். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை பற்றி 1947-ல் எழுதப்பட்ட சிறுகதையை 2002-ல் நடந்த குஜராத் பிரச்னைக்கான பின்புலமாக்கி சில தரவுகள், தகவல்களை ஆவணப் படங்களில் இருந்து எடுத்து சென்னையில் படப்பிடிப்பு செய்துள்ளார்.

''காணாமல் போன மகளைத் தேடும் முஸ்லிம் தந்தை. பாதுகாக்க வேண்டிய இளைஞர்கள் அந்த இளம் பெண்ணை சீரழிக்க, மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறாள். டாக்டர் ஷீஜீமீஸீ வீt, ஷீஜீமீஸீ வீt என்று ஜன்னலை திறக்கச் சொல்ல அந்தப் பெண் பாவாடை நாடாவை அவிழ்க்கிறார். மனித வன்முறையை இதைவிட திடகாத்திரமாகச் சொல்லிவிட முடியாது!'' என்கிறார், பிரின்ஸ்.

''மக்கள் வாழ்க்கையிலிருந்து குறும்படம் எடுக்க வேண்டும்...'' என்கிறார் இயக்குநர் வேலுமணி. ''குறும்பட மார்க்கெட்டிங்கை இன்னும் விரிவுபடுத்தத் திரைப்பட நடிகர்கள் குறும்படங்களில் நடிக்க வேண்டும். சமூக ஆர்வலர்கள், தியேட்டர் உரிமையாளர்கள், திரைப்பட விநியோகஸ்தர்கள் குறும்படம் திரையிட முயற்சிகள் செய்ய வேண்டும். அரசும் சலுகை தர வேண்டும். பார்வையாளர் ரசனை மாற, படங்களின் தரமும் மாறும்!'' என்கிறார்.

இந்தக் குறும்படத்தின் நாயகன் ப்ரியன். 'கிருஷ்ணவேணி பஞ்சாலை’ என்ற திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருபவர். எனக்கு முதல் அறிமுகம், அனுபவம் குறும்படம்தான். அதுதான் சினிமாவுல நடிக்க வாய்ப்பு தந்தது. என்னை மாதிரி சினிமாவில் நடிக்க விரும்புறவங்களுக்கு பயோ டேட்டா, புரொபைல் எல்லாம் குறும்படம்தான்!'' என்கிறார்.

குறும்படங்களுக்கு வியாபாரத் தன்மை இல்லையென்றும் சொல்லிவிட முடியாது. பூனே இன்ஸ்டிட்யூட் மாணவர் கிர்னி, மராட்டி படம் ஒன்றை எடுத்து

மக்கள் சினிமா

3.5 கோடி வரை சம்பாதித்து இருக்கிறார். தமிழில் 'கர்ண மோட்சம்’ எடுத்து தேசிய விருது பெற்ற முரளிமனோகர்

மக்கள் சினிமா

3.5 லட்சம் சம்பாதித்து இருக்கிறார். ஏராளமான அமைப்புகள் குறும்படப் போட்டிகள் நிகழ்த்தி பரிசுகள் கொடுக்கின்றன.

நீங்களும் ஒரு குறும்படம் எடுக்கப் போகிறீர்கள், அப்படித்தானே?

தமிழில் முக்கியமானசில குறும்படங்கள்

நாக்அவுட், திற, நாளைக்கு மழை பெய்யும், நடந்த கதை, கர்ண மோட்சம், செத்தாழை, ஆயிஷா, மக்கப் மங்கம்மா, லீசாக், போஸ்ட்மேன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism