Published:Updated:

ஸ்ரீதேவி இறந்த அன்று ஹோட்டலில் என்ன நடந்தது?

ஸ்ரீதேவி இறந்த அன்று ஹோட்டலில் என்ன நடந்தது?
ஸ்ரீதேவி இறந்த அன்று ஹோட்டலில் என்ன நடந்தது?

ஸ்ரீதேவி இறந்த அன்று ஹோட்டலில் என்ன நடந்தது?

டிகை ஸ்ரீதேவியின் மரணம், அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. துபாயிலிருந்து அவரின் உடலை இந்தியாவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் சகோதரி மகனும் நடிகருமான மோகித் மார்வா திருமணம், கடந்த 20-ம் தேதி துபாயில் நடந்தது. திருமணத்தில் பங்கேற்க இளைய மகள் குஷி, போனி கபூர், ஸ்ரீதேவி ஆகியோர் சென்றுள்ளனர். மூத்த மகள் ஜான்வி 'தடக்' என்ற பட சூட்டிங்கில் இருந்ததால், திருமணத்தில் பங்கேற்கவில்லை. திருமணம் முடிந்த பின், போனி கபூரும்  மகள் குஷியும் மும்பை திரும்பினர். ஸ்ரீதேவி மட்டும் துபாயில் உள்ள எமிரேட்ஸ் டவர் ஹோட்டலில் தங்கியிருந்துள்ளார். 

மும்பை திரும்பிய போனி கபூர், மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டுமென்பதற்காக, அவரிடம் எந்தத் தகவலும் தெரிவிக்காமல் 24-ம் தேதி மீண்டும் துபாய் சென்றுள்ளார். மாலை 5.30 மணியளவில், திடீரென்று மனைவியின் முன்னர் போய் போனி கபூர் நின்றதும் ஸ்ரீதேவி ஆச்சர்யமும் சந்தோஷமும் அடைந்துள்ளார். பின்னர், இருவரும் 15 நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்துள்ளனர். மனைவியை டின்னருக்கு அழைத்துள்ளார் போனி கபூர்.

ரெடியாகி வருவதாகச் சொல்லிவிட்டு, அவர் பாத்ரூமுக்குச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த போனி கபூர், கதவைத் தட்டியுள்ளார். உள்ளே இருந்து சத்தம் வரவில்லை. பின்னர், ஹோட்டல் உதவியாளர்களுடன் கதவை உடைத்துப் பார்த்தபோது, கழிவறையில் மயக்கமடைந்த நிலையில் அவர் கிடந்துள்ளார். மருத்துவமனையில் அவரை சோதித்த மருத்துவர்கள், முன்னரே அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். பின்னர், இரவு 9 மணியளவில் போலீஸுக்குத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. 

ஸ்ரீதேவியின் ரத்த மாதிரிகள் நேற்றிரவு பரிசோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளன.  அதன் முடிவு வந்த பிறகே, ஸ்ரீதேவியின் உடல் இந்தியா கொண்டு வருவதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்.

அடுத்த கட்டுரைக்கு