Published:Updated:

'சினிமா விருது விழா, அதன் பின்னணி எப்படி இருக்கும்..?' - 'வெல்கம் டு நியூயார்க்' படம் எப்படி? #WelcomeToNewYork

'சினிமா விருது விழா, அதன் பின்னணி எப்படி இருக்கும்..?' - 'வெல்கம் டு நியூயார்க்' படம் எப்படி? #WelcomeToNewYork

'சினிமா விருது விழா, அதன் பின்னணி எப்படி இருக்கும்..?' - 'வெல்கம் டு நியூயார்க்' படம் எப்படி? #WelcomeToNewYork

'சினிமா விருது விழா, அதன் பின்னணி எப்படி இருக்கும்..?' - 'வெல்கம் டு நியூயார்க்' படம் எப்படி? #WelcomeToNewYork

'சினிமா விருது விழா, அதன் பின்னணி எப்படி இருக்கும்..?' - 'வெல்கம் டு நியூயார்க்' படம் எப்படி? #WelcomeToNewYork

Published:Updated:
'சினிமா விருது விழா, அதன் பின்னணி எப்படி இருக்கும்..?' - 'வெல்கம் டு நியூயார்க்' படம் எப்படி? #WelcomeToNewYork

International Indian Film Academy (IIFA) திரைப்பட விழாவை மையமாக வைத்து, அதன் பின்னணியில் என்னவெல்லாம் நடக்கும், அதில் சாமானிய மக்கள் இருவர் கலந்துகொண்டால் எப்படி இருக்கும் என்ற காமெடிக் கதைதான் 'வெல்கம் டு நியூயார்க்'.  

ஜீனல் (சோனாக்ஷி சின்ஹா) மற்றும் தேஜி (தில்ஜீத் தோசாஞ்) இருவரும் பெரிய லெவலில் தான் நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டவர்கள். அவர்களின் ஆசைக்குத் தீனி போடும்படியாக அமைகிறது IIFA திரைப்பட விழா. இவர்களின் திறமையை வெளிப்படுத்தும் பொருட்டு நியூயார்க்கில் நடக்கும் விழாவில் இவர்கள் கலந்துகொள்கின்றனர். இதன் பின்னணியில், விழாக்குழு உறுப்பினராக இருக்கும் சோஃபி (லாரா தத்தா) இதனை நடக்கவிடாமல் தடுக்கத் திட்டமிடுகிறார். இறுதியில் விழா சுமுகமாக நடக்கிறதா, இல்லையா என்பதை 3டி படமாகத் திரையில் காட்ட முயன்றிருக்கிறார் இயக்குநர் சக்ரி டோலட்டி. 'உன்னைப்போல் ஒருவன்', 'பில்லா-2' படங்களை இயக்கியவரின் அடுத்த படம் இது.

எல்லாவற்றிலும் ஃபேஷன் சென்ஸைத் திணிக்க முற்படும் வளர் இளம் டிசைனராக ஜீனல், எப்படியாவது நம்பர் ஒன் பாலிவுட் ஹீரோவாகிவிட வேண்டும் எனத் துடிக்கும் தேஜி, இவர்களது கொடூர காம்போவைத் திரையில் ஹியூமராகக் காட்ட மெனக்கெட்டிருக்கின்றனர். கரன் ஜோகர், ரிதேஷ் தேஷ்முக் ஆகிய இருவரும் இவர்களது உண்மையான கதாபாத்திரமாகவே படத்திலும் நடித்துள்ளார். அதாவது, இவர்கள் இருவரும்தான் திரைப்பட விழாவின் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள். தவிர, சில ஃப்ரேமுக்கு வந்துபோகும் பிரபல நடிகர்கள் இதில் ஏராளம். 

IIFA திரைப்பட விழாவின் ஒரிஜினல் காட்சிகளும், இப்படத்தின் காட்சிகளும் கலந்து கலந்து வருவது படம் பார்க்கும்போது கொஞ்சம் அயர்ச்சியைத் தருகிறது. தொடக்கத்தில், விளம்பரப்படத்துக்கு ஆடை வடிவமைப்பாளராக வேலை பார்க்கும் ஜீனல், அந்த விளம்பரத்துக்கு  ஏற்றவாறு இயக்குநர் ஆடைகளைத் தேர்வு செய்வதில்லை என்றும், சாதாரண அப்பள விளம்பரத்துக்கு எதற்கு கிளாமர் உடை என்றும் இயக்குநர்மீது கோபம் கொண்டு வேலையை விட்டுவிடுகிறார். செய்யும் தொழிலுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும் மாடர்ன் பெண்ணாக காட்டப்பட்டிருக்கும் இவர், விருது விழாவைச் சொதப்புவதற்கு என்றே நியூயார்க்குக்கு அழைக்கப்பட்டிருக்கிறார் என்று கூறப்படுவதுதான் படத்தின் ஃபோகஸ் பாயின்ட். தேஜியின் என்ட்ரி மாஸ் ஹீரோ என்ட்ரிக்கு நிகராக இல்லை என்றாலும், அவர் தனது ஹீரோயிசத்தை முதல் காட்சியில் வெளிப்படுத்தியிருப்பது ஆஸம். ஆனால், பாவம்... அதற்குப் பின் அவரும் காமெடிக் கதாபாத்திரமாகவே சித்திரிக்கப்பட்டுவிட்டார். இவர்கள் இருவரும் விழாவின் இறுதியில் மேடையில் ஆடிய நடனத்துக்கு குவியும் பாராட்டுகள் ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளும்படியாக இருக்கின்றன. ஆனால், இதில் பாடல் மற்றும் பின்னணி இசை பெரும் சொதப்பல். ஏதோ ஒட்டாத இந்தி டப்பிங் பாடல் கேட்பது போன்ற உணர்வு.


 

படம் காமெடி ஜானர் என்றாலும், பல காட்சிகளில் காமெடி சென்ஸ் திணிக்கப்பட்டிருக்கிறது போல்தான் இருக்கிறது. கரன் ஜோஹரின் அடல்ட்ஸ் ஒன்லி ஜோக் 'ஏன்யா இப்படி' என முகம் சுளிக்க வைக்கிறது. (ப்ளீஸ்... அடுத்த படத்திலாவது உங்களது ஹியூமர் சென்ஸுக்கு பேண்டேஜ் போட்டுவிடலாமே ப்ரோ...) இதில் ரிதேஷ் தேஷ்முக்கின் ஆன்-தி-ஸ்டேஜ் காமெடி ஏதோ பரவாயில்லை ரகம். குறைந்தபட்ச சிரிப்புக்கு உத்திரவாதம் தருகிறது.  

விருது வழங்கும் விழாவை டிவியில் பலமணி நேரமாக சேனல்கள் ஒளிபரப்பிக்கொண்டிருக்கும்போது, இதை ஏன் படமாக எடுக்க முற்பட வேண்டும் என்ற லாஜிக்தான் இடிக்கிறது. இறுதியாக இம்மாதிரியான விருது வழங்கும் நிகழ்ச்சிகளை தியேட்டரிலும் ஒருமுறை பார்த்தே தீருவேன் என்று அடம்பிடிக்கும் அன்பர்களுக்கு 'வெல்கம் டு நியூயார்க்' சிரிப்பு விருந்தாக அமையும்.