Published:Updated:

பிட்ஸ் பிரேக்

பிட்ஸ் பிரேக்
பிரீமியம் ஸ்டோரி
பிட்ஸ் பிரேக்

பிட்ஸ் பிரேக்

பிட்ஸ் பிரேக்

பிட்ஸ் பிரேக்

Published:Updated:
பிட்ஸ் பிரேக்
பிரீமியம் ஸ்டோரி
பிட்ஸ் பிரேக்

 டேவிட் பெக்காம், தன் குழந்தையின் பொம்மைக்கு துணி தைக்கும் போட்டோதான் கடந்த வார உலக வைரல். 20 ஆண்டுகள் கால்பந்து உலகைக் கலக்கிய இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் பெக்காமுக்கு மூன்று மகன்கள், ஒரு மகள். ‘கால்பந்து விளையாட்டில் இருந்து முழுமையாக ஓய்வுபெற்றுவிட்ட டேவிட், குழந்தைகளுடன் அதிக நேரத்தைச் செலவிடுகிறார்; பாசக்கார அப்பாவாக இருக்கிறார். நீங்களே பாருங்கள் 5 வயது மகள் ஹார்ப்பரின் பொம்மைகளுக்கு உடை தைத்துக்கொண்டிருக்கிறார்’ என மனைவியும் ஃபேஷன் டிசைனருமான விக்டோரியா, பெக்காமின் தையல் போட்டோவைப் போட, லைக்ஸ் பல மில்லியன்களைத் தாண்டுகிறது!

பிட்ஸ் பிரேக்

போலி வெடிகுண்டு பெல்ட்டை அணிந்துகொண்டு விமானத்துக்குள் ஏறி, உலகையே அலறவைத்த சைஃப் அதின் முஸ்தஃபா, கடந்த வாரத்தின் கெக்கேபிக்கே காமெடி. 80 பயணிகளுடன் கெய்ரோவுக்குச் சென்றுகொண்டிருந்த விமானத்தை சைப்ரஸுக்கு திசைதிருப்பிய முஸ்தஃபா, விமானத்தைக் கடத்திய பிறகு என்ன கோரிக்கை வைப்பது என்றே தெரியாமல் முழிக்க, கிடைத்த கேப்பில் பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். `சண்டைபோட்டு பிரிந்து சென்ற முன்னாள் மனைவியைக் காணவே விமானத்தைக் கடத்தினேன்’ என இறுதியில் சிரிப்பு வெடி வீசினார் சைஃப். இதற்கிடையே வெடிகுண்டு பெல்ட் என சைஃப் பயமுறுத்திக்கொண்டிருந்தபோது அவருடன் போட்டோ எடுத்துக்கொண்ட பிரிட்டிஷ் பயணி இன்னஸும் உலகப் பிரபலம் ஆகியிருக்கிறார். ‘இன்னும் சில விநாடிகளில் சாகப்போகிறோம். அதற்கு முன் ஒரு போட்டோ எடுத்துக்கொள்ளலாமே என ஜாலியாக எடுத்தேன்’ எனச் சிரிக்கிறார் இன்னஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிட்ஸ் பிரேக்

50 ஆண்டுகளுக்குப் பிறகு, ராணுவத்துக்கு சம்பந்தமே இல்லாத சாதாரண குடிமகன் மியான்மர் நாட்டின் ஜனாதிபதி ஆகியிருக்கிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆங்சான் சூகியின் கட்சி வெற்றிபெற்றது. ஆனால், கணவரின் வெளிநாட்டுக் குடியுரிமையைக் காரணம் காட்டி சூகிக்கு அதிபர் பதவி கிடையாது எனச் சொல்லப்பட, தனது நீண்டநாள் விசுவாசி ஹிடின் கியாவை அதிபராக்கியிருக்கிறார் சூகி. அதிபராகத்தான் கூடாது, மந்திரியாகத் தடை இல்லை என்பதால், முக்கியத் துறைகள் அனைத்துக்கும் அமைச்சராகப் பதவியேற்க இருக்கிறார் சூகி!

பிட்ஸ் பிரேக்

​இந்திய கிரிக்கெட் அணியின் ​முன்னாள் கேப்டன் அஸாருதீனின் பயோபிக்கான `அஸார்' மே-13 ரிலீஸ். இம்ரான் ஹஷ்மி, அஸாராக நடித்திருக்கிறார். சங்கீதா பிஜ்லானியாக நர்கீஸ் ஃபக்ரி. அஸாருதீனுடன் காதல் எனக் கிசுகிசுக்கப்பட்ட பாட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவாக ஹூமா குரேஷி. அஸார் மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதை நிரூபிக்கப் போராடும் வக்கீலாக லாரா தத்தா. அஸாருதீனை எதிர்த்து ஆடிய ரவி சாஸ்திரி, நவ்ஜோத் சிங் சித்து கேரக்டர்கள்தான் படத்தில் வில்லன்களாம்!

பிட்ஸ் பிரேக்
பிட்ஸ் பிரேக்

சிறந்த படம், சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் என இரண்டு விருதுகள் வென்றிருக்கும் மெகா ஹிட் `பாகுபலி'க்கு இடையே சிறந்த தெலுங்கு மொழித் திரைப்படத்துக்கான விருது வென்றிருக்கிறது ‘கான்சே’. தெலுங்கில் `வேதம்', அதன்​ தமிழ்​ ரீமேக்கான `வானம்' படத்தை இயக்கிய க்ரிஷ்தான் இந்தப் படத்தின் இயக்குநர். `இரண்டாவது உலகப்போரில் பங்கேற்ற இந்திய வீரர்களுக்கு என்ன ஆனது என்பது, 70 சதவிகித ஆந்திர மக்களுக்குத் தெரியாது. அதை வெளிக்கொண்டுவந்தது எனக்குப் பெருமை. அதற்கு விருதும் கிடைத்திருப்பது மிக்க மகிழ்ச்சி’ என்று நெகிழ்கிறார் க்ரிஷ்!