Election bannerElection banner
Published:Updated:

’’சிம்பு விசிட்... சந்தானம் ஷாக்... சிவகார்த்திகேயன் வெயிட்டிங்..!’’ - அசார் ஷேரிங்ஸ்

’’சிம்பு விசிட்... சந்தானம்  ஷாக்... சிவகார்த்திகேயன் வெயிட்டிங்..!’’ - அசார் ஷேரிங்ஸ்
’’சிம்பு விசிட்... சந்தானம் ஷாக்... சிவகார்த்திகேயன் வெயிட்டிங்..!’’ - அசார் ஷேரிங்ஸ்

’’சிம்பு விசிட்... சந்தானம் ஷாக்... சிவகார்த்திகேயன் வெயிட்டிங்..!’’ - அசார் ஷேரிங்ஸ்

’’ரொம்ப நாளா குழந்தை இல்லாதவங்களுக்கு குழந்தை பிறந்தால், அந்தக் குழந்தை மேல அவங்க வைக்கிற பாசத்துக்கு அளவே இருக்காதுல; அந்த மாதிரியான ஒரு தருணத்தில்தான் நான் இப்போ இருக்கேன். என்னோட முதல்படத்தோட ரிலீஸ், டிமானிடைசேஷன், ஜெயலலிதா அம்மாவின் இறப்புனு தமிழ்நாட்டு மக்கள் சோகமா இருந்த காரணத்தனால பல முறை தள்ளிப்போச்சு. என்னடா... ரிலீஸ் இவ்வளவுநாள் தள்ளிப்போகுதே’னு நாங்க கவலைப்பட்ட நேரத்தில்தான், ரிலீஸுக்கு பக்காவான டைம் கிடைச்சது. இப்போ ‘ஏண்டா தலையில எண்ண வெக்கல’ படம் ரிலீஸாகிடுச்சு; நிறைய பேர் போன் பண்ணி வாழ்த்து சொல்றாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு நண்பா...’’ என ஃபர்ஸ்ட் ரேங் வாங்கிய பையன் போல் உற்சாகம் குறையாமல் பேசுகிறார் அசார். 

சினிமாத்துறையில இருந்து யாரெல்லாம் பாராட்டினாங்க..?

’’படத்தோட ட்ரெய்லர் வந்தப்போ ஏ.ஆர்.ரஹ்மான் சார், ஏ.ஆர்.முருகதாஸ் சார், ஜான் மகேந்திரன், ஜீ.வி.பிரகாஷ், ஜெயம் ரவினு நிறைய பேர் விஷ் பண்ணினாங்க. ட்ரெய்லர் வந்த அடுத்த நாள் நானும் என் நண்பர் திருச்சி சரவணகுமாரும் மாலுக்குப் போயிருந்தோம். அப்போ பார்க்கிங்ல எங்களை ஒரு கார் க்ராஸ் பண்ணிப்போச்சு. ’இந்த காரை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே’னு யோசிக்கும்போதே அந்த கார் நின்னுடுச்சு. விண்டோ மட்டும் திறந்து, ஒரு கை வெளிய வந்து என்னைக் கூப்பிட்டாங்க. போய்ப் பார்த்தா, சந்தானம் சார். எனக்கு செம ஷாக். ‘டேய் தம்பி, நேத்து உன் படத்தோட ட்ரெய்லர் பார்த்தேன். ரொம்ப நல்லாயிருந்துச்சு. என் படத்துல உனக்கு ஒரு காமெடி ரோல் தரலாம்னு நினைச்சேன். நீ இப்போ ஹீரோவாகிட்ட. இதையே தொடர்ந்து பண்ணு’னு சொன்னார். ‘அண்ணே நீங்க கூப்பிட்டா எந்த ரோலா இருந்தாலும் பண்ணுவேன்’னு சொல்லிட்டு வந்தேன்.

சிம்பு அண்ணா ’கலக்கப்போவது யாரு’ ஷோவை ரெகுலரா பார்ப்பார். அதைப் பார்த்துட்டு ஒரு நாள் எனக்கு கால் பண்ணி, ‘நீங்க வித்தியாசமான கான்செப்ட்டா பண்றீங்க. யாரும் யோசிக்காததை நீங்க பண்ணுங்க’னு சொன்னார். படம் ரிலீஸானதும் கால் பண்ணி ’வீட்டுக்கு வா’னு கூப்பிட்டு, ’படத்தைப் பத்தி நல்ல டாக் வந்துட்டு இருக்கு. ரொம்ப சந்தோஷமா இருக்கு’னு சொன்னார். படம் பார்த்துட்டும் போன் பண்ணி பாராட்டினார்.’’

ஒரு படத்துல ஹீரோவா நடிச்சிட்டு மறுபடியும் ஒரு காமெடி ஷோவுக்குப் போட்டியாளரா போகணும்னு எப்படி முடிவு எடுத்தீங்க..?

’’இதுக்கு முன்னாடியே விஜய் டிவி, ஜி தமிழ்ல இருந்து விஜே பண்றதுக்கு வாய்ப்பு வந்துச்சு; நான் போகலை. என் ஃப்ரெண்ட் திருச்சி சரவணகுமார் ’கலக்கப்போவது யாரு’ல போட்டியாளரா கலந்துக்க முடிவு பண்ணிட்டு, என்கிட்டேயும் கேட்டார். எனக்கு பர்ஃபார்மன்ஸ் பண்றது ரொம்ப பிடிக்கும். எங்கேயானாலும் எப்போனாலும் நான் பண்ணுவேன். அதனால டி.எஸ்.கே கூப்பிட்டதும் போயிட்டேன். அப்போகூட ’கலக்கப்போவது யாரு’ டீம்லேயும், ‘இது உங்களுக்கு ஓகேவா. ஹீரோவா நடிச்சிருக்கீங்க; இது நீங்க கீழ இறங்கி வர்ற மாதிரி இருக்குமே’னு சொன்னாங்க. நான் அதைப்பத்தியெல்லாம் கவலை இல்லாமல் பண்ணிட்டு இருக்கேன். நான் எத்தனை படம் நடிச்சாலும் அங்கேயும் ஒரு பர்ஃபார்மராகத்தான் இருப்பேன். இந்தப் படத்துலையும் அசார் எங்கேயும் ஹீரோவா தெரிய மாட்டான். இயக்குநர் என்ன சொல்றாரோ அதைக்கேட்டுட்டு பர்ஃபார்ம் பண்ற நடிகனாக இருக்கணும்னுதான் ஆசை.’’

முதலில் காமெடிப்படம் அடுத்து ஆக்‌ஷன் கலந்த காமெடிப்படம் என்கிற சிவகார்த்திகேயனின் ஃபார்முலாதானா உங்களுக்கும்..?

’’எனக்கு ஆக்‌ஷன் செட்டாகாது நண்பா. ’சிங்கம் 4’ல நான் நடிச்சா நல்லாயிருக்குமானு யோசிச்சுப்பாருங்க. கதை நல்லாயிருந்தாலும் எனக்கு என்ன வருமோ அதை மட்டும்தான் நான் பண்ணுவேன். எனக்கு காமெடிதான் வரும். அதுபோக வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்கள்ல நடிக்கணும்னு ஆசை. சின்ன வயசுல இருந்தே நான் நடிகனாகவும்னு ஆசைப்பட்டுட்டு இருந்தேன். அதனால கதை ஹீரோவா இருக்கிற நல்ல நல்ல படங்களில் நடிச்சுட்டே இருக்கணும். அப்படிப்பட்ட கதைக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.’’

சிவகார்த்திகேயனுக்கு உங்களை ரொம்ப நாளா தெரியும்... படம் பார்த்துட்டு போன் பண்ணினாரா..?

’’படம் ரிலீஸாகிறதுக்கு முன்னாடி போன் பண்ணி, ’படம் நல்லா போகும். நானும் படம் பார்த்துட்டுச் சொல்றேன்’னு சொன்னார். அவர் இன்னும் படம் பார்க்கலை. ‘சீமராஜா’ ஷூட்டிங்ல பிஸியா இருக்கார்னு நினைக்கிறேன். அவரே படம் பார்த்துட்டு கூப்பிடுவார்னு நம்பிக்கையில இருக்கேன். அவரோட போனுக்காக வெயிட்டிங். ’’

பொதுவா மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் படங்களில் நடிக்கும்போது பல நடிகர்களின் சாயல்கள் வந்து போகுமே; அதை எப்படி சமாளிச்சீங்க..?

‘’நாங்க ஷூட்டிங் போறதுக்கு முன்னாடியே அதை பக்காவா ப்ளான் பண்ணிட்டோம். ஏன்னா, ஒரு வேகத்தில் வசனம் பேசும்போது என்னையே அறியாமல் அந்த இடத்தில் விஜய்யோ, சூர்யாவோ வந்திடுவார். அதனால எனக்கு இதுதான் வசனம்னு டைரக்டர் கொடுத்ததும், ஷாட்டுக்குப் போற வரைக்கும் அதை அசார் எப்படிப் பேசுவானோ அப்படித்தான் பேசிப்பார்ப்பேன். அப்படியே போய் நடிச்சிடுவேன். இந்த மாதிரி பண்ணா எந்த இடத்துலையும் எனக்குப் பிரச்னை வரலை. அதுமட்டுமில்லாமல், மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் படங்களில் நடிக்கும்போது கண்டிப்பா மிமிக்ரி பண்ற மாதிரி சீன் வெப்பாங்க. இந்தப் படத்தில் அப்படி எந்த சீனும் இல்லாதது, பெரிய ப்ளஸ். இதுக்காக இயக்குநருக்கு நன்றி சொல்லியே ஆகணும்.

என்னுடைய வளர்ச்சியில் நண்பர்கள் எப்போதுமே பக்கபலமா இருப்பாங்க. என்னுடைய நீண்ட கால நண்பர்தான், ‘ஏண்டா தலையில எண்ண வெக்கல’ படத்தோட டைரக்டர் விக்னேஷ் கார்த்திக். என்னை நம்பி இந்தப் பட வாய்ப்பைக் கொடுத்தார். ’கலக்கப்போவது யாரு’ ஆரம்பிச்சதுல இருந்து 24*7 திருச்சி சரவணகுமாரோடத்தான் இருக்கேன். அவரோட ஃபேமிலி திருச்சியில இருக்காங்க. அவங்களை விட்டுட்டு என்னோடு ப்ராக்டிஸ் பண்றதுக்காக சென்னையிலேயே இருக்கார். எதாவது ஒரு எபிசோடுல, ‘உங்களைவிட அசார்தான் நல்லா பண்ணுனார்’னு யாராவது சொன்னாலும், அவர் ரொம்பப் பெருமைப்படுவார். இந்த மாதிரியான நண்பர்கள்தான் நமக்கு பூஸ்ட்.’’

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு