Published:Updated:

சாய் பல்லவியின் கோபம், ஸ்ரேயாவின் திருமணம், யங் மங் சங் ஸ்பெஷல்...! #QuickSevan

சாய் பல்லவியின் கோபம், ஸ்ரேயாவின் திருமணம், யங் மங் சங் ஸ்பெஷல்...! #QuickSevan
சாய் பல்லவியின் கோபம், ஸ்ரேயாவின் திருமணம், யங் மங் சங் ஸ்பெஷல்...! #QuickSevan

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ரஜினி நடிக்கவிருக்கும் புதிய படத்தில், இசையமைப்பாளராக கமிட்டாகியிருக்கிறார், அனிருத். ஏற்கெனவே 'விஸ்வாசம்', 'மாரி-2' படங்களுக்கு அனிருத்தான் இசையமைக்கப்போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வந்த நிலையில், அவை அனைத்தும் வேறு வேறு இசையமைப்பாளர்களுக்கு கைமாறிச் சென்றன. தனுஷ் - அனிருத் கூட்டணியும் முடங்கிப்போனதை அடுத்து, ரஜினியின் அடுத்த படத்தில் அனிருத் இணைந்திருப்பது இருதரப்பு ரசிகர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. 

'கதை திரைக்கதை வசனம் இயக்கம்', 'கோடிட்ட இடங்களை நிரப்புக' ஆகிய படங்களுக்குப் பிறகு பார்த்திபன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் திரைப்படம் 'உள்ளே வெளியே - 2'. 1993-ஆம் ஆண்டு வெளிவந்த 'உள்ளே வெளியே' படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் உருவாகிறது. பாகம் ஒன்றில் ஐஸ்வர்யா, சில்க் ஸ்மிதா, ராஜீவ், வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகியோர் நடித்திருந்தனர். தற்போது உருவாகும் இரண்டாம் பாகத்தில் ஆடுகளம் கிஷோர், சமுத்திரக்கனி ஆகியோர் நடிக்கின்றனர். இதன் ஷூட்டிங் வருகிற ஏப்ரல் மாதத்திலிருந்து துவங்கவுள்ளது என்றும், இப்படம் அரசியல் பேசும் என்றும் நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

பிரபுதேவா நடிக்கும் 'யங் மங் சங்' படம் வருகிற ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1970-களில் சீனாவின் தற்காப்பு கலைகளில் ஒன்றான குங்ஃபூவை இந்தியர்கள் கற்றுக்கொள்ள ஆரம்பித்தனர். அதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட காமெடி -ஆக்ஷன் படம்தான், 'யங் மங் சங்' என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். லட்சுமி மேனன், ஆர்.ஜே.பாலாஜி, தங்கர் பச்சான் ஆகியோர் இதில் நடிக்கின்றனர். பிரபுதேவா, ஆர்.ஜே.பாலாஜி மற்றும் அஷ்வின் ஆகியோரின் பெயர்கள்தான் யங், மங், சங் என்ற புது தகவலையும் வெளியிட்டுள்ளனர். 

ர்நாடக அரசும், பெங்களூரு இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் அமைப்பும் ஒருங்கிணைந்து இயக்குநர் மணிரத்னத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை, விதான சௌதாவில் நேற்று வழங்கி கௌரவித்தனர். கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் ஆளுநர் வாஜ்பாய் ருதாபாய் வாலா ஆகியோர் இந்த விருதினை மணிரத்னத்துக்கு வழங்கி சிறப்பித்தனர். மணிரத்னம் தனது சினிமா பயணத்தை 'பல்லவி அனுபல்லவி' என்ற கன்னடப் படத்தில்தான் துவங்கினார். மேலும், இவர் ஆறு தேசிய விருதுகளையும், 2002-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் இயக்குநர் வினோத், அடுத்ததாக அஜித்தை வைத்துப் படம் இயக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 'தீரன்' பட வெளியீட்டுக்குப் பிறகு பல முன்னணி நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் வினோத்தை தங்களது அடுத்த படத்துக்காக அணுகினார்கள் என்றும், இதுவரை எந்தப் படத்துக்கும் இவர் அதிகாரபூர்வ ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது. ஏற்கெனவே விஜய், அஜித் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இயக்குநர் வினோத்துடன் வேலை செய்வதற்கான தங்களது விருப்பத்தைத் தெரிவித்துள்ளனர். அஜித் மற்றும் நயன்தாரா நடிக்கும் 'விசுவாசம்' பட ஷூட்டிங் முடிந்தபிறகு, இதன் படப்பிடிப்பு துவங்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

டிகை ஷ்ரேயா கடந்த 17 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார். இவருக்கு வருகிற மார்ச் 19-ஆம் தேதி தனது ரஷ்ய காதலன் ஆண்ட்ரி கொஷேவ்வுடன், உதய்பூரில் இந்து முறைப்படி திருமணம் நடக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவரது திருமணச் சடங்குகள் மூன்று நாள்கள் நடைபெற இருக்கின்றன. ஆண்ட்ரி கொஷேவ் ரஷ்யாவில் விளையாட்டு வீரராகவும், தொழிலதிபராகவும் இருக்கிறார். கடந்த ஆண்டு ஷ்ரேயா ரஷ்யா சென்றபோது, ஆண்ட்ரியை சந்தித்தார் எனவும், இவர்களது நட்பு தற்போது திருமணத்தில் முடியவிருக்கிறது எனவும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஷ்ரேயா, "எனது தொழிலான சினிமாவைப் பற்றி மட்டுமே என்னால் பொதுவெளியில் பேசமுடியும். சொந்த விஷயங்களை நான் ஒருபோதும் வெளியில் பகிரப்போவது இல்லை'' என்று தெரிவித்துள்ளார். ஆனால், திருமணம் குறித்த கேள்விகளுக்கு இவர் மறுப்பு தெரிவித்துப் பேசவில்லை. 

லையாளப் படமான 'ப்ரேமம்' மூலம் சினிமாவுக்கு அறிமுகமாகி, மலர் டீச்சராக  புகழ் பெற்றவர் சாய்பல்லவி. இவர் விஜய் இயக்கத்தில் 'கரு' என்ற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆகவிருக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த நாகசவுரியா, சாய்பல்லவி மீது சில குற்றசாட்டுகளை முன்வைத்துள்ளார். அதாவது, 'சாய்பல்லவி படப்பிடிப்புக்கு தாமதமாகவே வருவார். படப்பிடிப்பின்போது சரிவர ஒத்துழைக்காமல் அனைவரையும் கஷ்டப்படுத்துவார். இவருக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை' என்று கூறியுள்ளார். இதுகுறித்து சாய்பல்லவியிடம் கேட்கும்போது, "நான் படப்பிடிப்புக்கு தாமதமாக வருகிறேனா, எல்லோரையும் கஷ்டப்படுத்துகிறேனா... என்று இயக்குநர் விஜய்யிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டேன். அதற்கு அவர், 'இல்லை' என்று கூறினார். என் மீது நாகசவுரியா ஏன் இவ்வாறு குறை கூறவேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. அவருக்கு ஏதேனும் நெருடல்கள் இருந்தால் அதை படப்பிடிப்புத் தளத்திலேயே கூறியிருக்கலாமே" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.  

பின் செல்ல