Published:Updated:

``என் ஸ்கூல்லதான் படிச்சாங்க. ஆனா, நம்புங்க... இது அரேஞ்ச்டு மேரேஜ்!" - 'கல்யாண மாப்பிள்ளை' கதிர் #VikatanExclusive

``என் ஸ்கூல்லதான் படிச்சாங்க. ஆனா, நம்புங்க... இது அரேஞ்ச்டு மேரேஜ்!" - 'கல்யாண மாப்பிள்ளை' கதிர் #VikatanExclusive

``என் ஸ்கூல்லதான் படிச்சாங்க. ஆனா, நம்புங்க... இது அரேஞ்ச்டு மேரேஜ்!" - 'கல்யாண மாப்பிள்ளை' கதிர் #VikatanExclusive

``என் ஸ்கூல்லதான் படிச்சாங்க. ஆனா, நம்புங்க... இது அரேஞ்ச்டு மேரேஜ்!" - 'கல்யாண மாப்பிள்ளை' கதிர் #VikatanExclusive

``என் ஸ்கூல்லதான் படிச்சாங்க. ஆனா, நம்புங்க... இது அரேஞ்ச்டு மேரேஜ்!" - 'கல்யாண மாப்பிள்ளை' கதிர் #VikatanExclusive

Published:Updated:
``என் ஸ்கூல்லதான் படிச்சாங்க. ஆனா, நம்புங்க... இது அரேஞ்ச்டு மேரேஜ்!" - 'கல்யாண மாப்பிள்ளை' கதிர் #VikatanExclusive

 ``இன்னும் என்னை 'விக்ரம் வேதா' படத்தில் வரும் சின்ன பையன் 'புலி'யாகவே விஜய் சேதுபதி அண்ணா நினைச்சுக்கிட்டு இருக்கார், நான் இப்போ கல்யாண மாப்பிள்ளை'' - கதிரின் முகத்தில் மட்டுமல்ல, பேச்சிலும் கல்யாணக் களை.  

'மதயானைக்கூட்டம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் கதிருக்குத்  திருமணம் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு வாழ்த்துகள் சொல்ல கதிரிடம் பேசினேன். ''வாழ்த்துக்கு நன்றி. ரொம்ப சந்தோஷமா இருக்கேன். பொண்ணு பேர் சஞ்சனா''னு கதிர் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் வெட்கம் தெறிக்கிறது. 

``என் சொந்த ஊர் ஈரோட்டில்தான் திருமணம் நடக்கவிருக்கிறது. பக்கா அரேஞ்ச்டு மேரேஜ். ஏற்கெனவே பெண் பார்க்கும் படலம் போயிட்டிருந்துச்சு. எங்கள் வீட்டுல இருந்தவங்களுக்கு சஞ்சனாவையும், அவங்க ஃபேமிலியில் இருக்கிற எல்லோரையும் பிடிச்சிருந்துச்சு. அப்புறம் என்கிட்ட சஞ்சனா போட்டோவைக் காட்டுனாங்க. எனக்கும் பிடிச்சிருந்துச்சு. ஒருநாள் கோயிலில் நானும் அவங்களும் பார்த்துப் பேசினோம். எங்க குடும்பத்தைச் சார்ந்தவர்கள் எல்லோரும் கோயிலில் பேசிக்கிட்டு இருக்கும்போதுதான் இந்தச் சந்திப்பு நடந்தது. ஐந்து நிமிடம்தான் பேசினோம்.  

சினிமாவில் நான் நடிக்கிறதனால வரப்போற மனைவி என்னைப் புரிஞ்சிக்கிட்டவங்களா இருக்கணும்னு நினைச்சேன். அவங்களும் இந்த விஷயத்தில் என்னைப் புரிஞ்சிக்கிட்டாங்க. இதுக்குமேல என்ன வேணும். நான் நடிச்ச படத்திலேயே 'விக்ரம் வேதா' மட்டும்தான் சஞ்சனா பார்த்திருந்தாங்க. ஆனா, இனிமேல் வேற வழியில்லை, நான் நடிச்ச எல்லா படத்தையும் பார்த்துதான் ஆகணும். இனிமே ஃபிலிம் டிக்கெட் புக் பண்றப்போ எனக்கு, அவங்களுக்கு, அத்தை, மாமானு எல்லோருக்கும் சேர்த்துதான் புக் பண்ணனும். கிஃப்ட் கொடுத்து சஸ்பென்ஸ்  பண்ற விஷயத்துலதான் நான் கொஞ்சம் வீக். அதனால, அவங்களுக்கு வாட்ச் மட்டும் வாங்கிக் கொடுத்தேன். அவங்க, சஞ்சனாவும் நானும் இருக்கிற சின்ன வயசு போட்டோக்களை கலெக்ட் பண்ணி, ஃப்ரேம் பண்ணிக் கொடுத்தாங்க. 

சஞ்சனாவும் ஈரோடுதான். அவங்களும், நானும் ஒரே ஸ்கூல்தான் படிச்சிருக்கோம். ஆனா, எங்க கல்யாணப் பேச்சு ஆரம்பிச்சப்போதான் அவங்களை முதல்முறை பார்த்தேன். அப்போதான் நாங்க ஒரே ஸ்கூல்ல படிச்சிருக்கோம்னு தெரிய வந்துச்சு. 

அவங்ககிட்ட போன்லகூட நான் அதிகமா பேசலை. ஏன்னா, திருமணம் நிச்சயம் ஆனவுடனே ஒரு மாசம் தனியா பேச்சுலர் ட்ரிப் போயிட்டேன். அது அட்வெஞ்சர் ட்ரிப்பா இருந்துச்சு. ஏன்னா, ஃப்ரெண்ட்ஸ் இல்லாம நான் மட்டும் தனியா போனேன். போற இடத்துலேயும் பெரிய ஹோட்டலா பார்த்து தங்காம என்னை மாதிரி தனியா டிராவல் பண்றவங்களோட சேர்ந்து ஹாஸ்டல்ல தங்கினேன். இதுக்கு முன்னாடி எனக்கு அறிமுகமில்லாதவங்ககூட பழகினேன். ஏன்னா, இந்த ட்ரிப் போறதுக்கான காரணமே, அறிமுகம் இல்லாத மத்த மனிதர்களைப் பற்றி தெரிஞ்சுக்கிறதுக்குதான். அவங்ககிட்ட நான் அரேஞ்ச்டு மேரேஜ் பண்ணப்போறேனு சொன்னா, எல்லோரும் சிரிக்கிறாங்க. 'அதெப்படி இன்னொருத்தங்ககூட வாழ்ந்து பார்க்காம, வாழ்க்கைத் துணையா ஏத்துக்க முடியும்'னு கேட்குறாங்க. நான்தான் சொல்லிப் புரியவெச்சேன்.

ஈரோட்டில் திருமணம் முடிஞ்சவுடனேயே சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு பண்ணியிருக்கேன். சினிமாவைச் சேர்ந்தவங்க எல்லாம்  வருவாங்க. விஜய் சேதுபதி அண்ணாகிட்ட கல்யாணம் ஃபிக்ஸ் ஆனதைச் சொல்லலாம்னு போன் பண்ணேன். அமெரிக்காவில் 'ஜுங்கா' ஷூட்டிங்கில் இருந்தவர், ''என்னடா அதுக்குள்ள உனக்குக் கல்யாணமா... சின்னப் பையன்டா நீ''னு சிரிச்சார், வாழ்த்துகள் சொன்னார். அவர் மனசுல நான் இன்னும் 'விக்ரம் வேதா' படத்துல வர்ற  சின்னப் பையன் 'புலி'யாவே இருக்கேன். 

இந்த வருடம் எனக்கு ரொம்ப சந்தோஷமான, அதே நேரத்துல மறக்க முடியாத வருடமாதான் இருக்கும்னு நினைக்கிறேன். ஏன்னா, நிறைய இடத்துல கல்யாணப் பத்திரிகை கொடுக்கப் போனப்போ, 'கல்யாணத்துக்கு அப்புறம்தான் சினிமாவில் எல்லோருக்கும் பெரிய வாய்ப்புக் கிடைக்கும்'னு சொன்னாங்க. இந்த வருடம் நான் பெருசா எதிர்பார்க்கிற 'சிகை', 'பரியேறும் பெருமாள்' படங்கள் ரிலீஸ் ஆகுப்போகுது. ரெண்டு படத்துக்காகவும் நிறைய உழைச்சிருக்கேன். 'சிகை' படத்துக்காக வெயிட் போட்டிருந்தேன், 'பரியேறும் பெருமாள்' படத்துக்காக  மொத்த வெயிட்டையும் குறைச்சேன். ரஞ்சித் சார், படம் பார்த்துட்டு, 'நல்லா நடிச்சிருக்க'னு சொன்னார்.  

கோயம்புத்தூரில் வளர்ந்த எனக்கு, 'பரியேறும் பெருமாள்' நல்ல அனுபவம். இந்தப் படத்துக்காக நான் கொடுத்த உழைப்பை வேறொரு படத்துக்குக் கொடுக்கமுடியுமானு தெரியலை. அந்தக் கஷ்டமெல்லாம் படம் பார்க்கும்போது காணாம போயிடுச்சு. இந்தப் படத்துல காதல், ஆக்‌ஷன், சென்டிமென்ட்னு எல்லாமே இருக்கும். என்கூட சில நாய்களும் நடிச்சிருக்கு. எல்லாமே அதே ஊரைச் சேர்ந்த நாய்கள். இந்தப் படம் மேல எனக்குப் பெரிய நம்பிக்கை இருக்கு. கல்யாணம் முடிஞ்சவுடனே என் மனைவிகூட சேர்ந்து பார்க்கப்போற முதல் படம் 'பரியேறும் பெருமாள்' படமாதான் இருக்கும்னு நினைக்கிறேன். சந்தோஷமாயிருக்கு!' என்கிறார், புதுமாப்பிள்ளை கதிர்.