Election bannerElection banner
Published:Updated:

வட சென்னை பற்றி தனுஷ் ட்வீட்

வட சென்னை பற்றி தனுஷ் ட்வீட்
வட சென்னை பற்றி தனுஷ் ட்வீட்

வட சென்னை பற்றி தனுஷ் ட்வீட்

வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் 'வடசென்னை'. 'ஆடுகளம்' படத்துக்குப் பிறகு இவர்களின் கூட்டணி ஒன்று சேர்ந்திருப்பதால் படத்துக்குப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. மேலும், இந்தப் படம் மூன்று பாகங்களாகயிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளிவரவில்லை. மேலும், இந்தப் படத்தில் தனுஷூடன் அமீரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் நாயகியாக முதலில் அமலாபால் கமிட்டாகியிருந்த நிலையில் கால்ஷீட் பிரச்னையின் காரணமா ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமானார். மேலும், இன்னொரு நாயகியாக ஆன்ட்ரியா நடித்திருக்கிறார். 

'விசாரணை' படத்துக்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். தனுஷே தன் சொந்தத் தயாரிப்பில் தயாரித்து வரும் இந்தப் படம் ரம்ஜான் அன்று ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் படம் பற்றிய அப்டேட் ஒன்றை தனுஷ் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மூன்று வருட கடுமையான உழைப்பிற்கு பின் 'வட சென்னை' முதல் விளம்பர அறிக்கை வரும் வியாழன்று (மார்ச் 8) வெளியாகும் என்று குறிப்பிட்டுள்ளார். 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு