Published:Updated:

“இனிமேல் படம் இயக்க மாட்டேன்!”

“இனிமேல் படம் இயக்க மாட்டேன்!”
“இனிமேல் படம் இயக்க மாட்டேன்!”

“இனிமேல் படம் இயக்க மாட்டேன்!”

“இனிமேல் படம் இயக்க மாட்டேன்!”

யக்குநராக இருந்து நடிகராக மாறியவர்களில் கவனிக்கக்கூடிய ஆளாகியிருக்கிறார் ‘புகழ்’, ‘கொம்பன்’ படங்களில் நடித்த மாரிமுத்து. 

‘‘தேனி மாவட்டத்தில் வருசநாடுதான் எனக்கு சொந்த ஊர். இன்ஜினீயரிங் படிச்சுட்டு இருக்கும்போது ‘முதல் மரியாதை’ படம் வந்துச்சு. வைரமுத்து, இளையராஜா, பாரதிராஜானு எங்க ஏரியாக்காரங்களா சேர்ந்து இப்படி ஒரு படத்தை எடுத்திருக்காங்களேனு ஆச்சரியமா இருந்துச்சு. எனக்கும் சினிமா ஆசை வர எப்படியும் ஜெயிக்கலாம்னு சென்னைக்கு வண்டி ஏறினேன். பாரதிராஜா சார்கிட்ட அசிஸ்டென்ட்டா சேர எவ்வளவோ முயற்சி பண்ணியும் முடியலை. ராஜ்கிரண் சார்கிட்ட அசிஸ்டென்ட்டா சேர்ந்துட்டேன். ‘அரண்மனைக் கிளி’, ‘எல்லாமே என் ராசாதான்’னு ரெண்டு படம் அவர்கூட வேலை செஞ்சேன். அப்போ எனக்குக் கல்யாணமும் ஆகிடுச்சு. இனி கிராமத்துப் படங்கள் வேணாம், லேட்டஸ்ட் சினிமா கத்துக்கலாம்னு ஆசைப்பட்டு ‘பம்பாய்’, ‘வாலி’, ‘குஷி’ படங்களில் அசிஸ்டென்ட்டா வேலை பார்த்தேன். அப்புறம் பிரபுதேவாவை ஹீராவா வெச்சு ‘யாரடா நீ மன்மதா’னு ஒரு படம் இயக்கினேன். பத்து நாட்கள் ஷூட்டிங் நடந்துச்சு. அவ்வளவுதான். அடுத்து பிரசன்னா, உதயதாரா நடிப்பில் ‘கண்ணும் கண்ணும்’னு ஒரு படம் இயக்கினேன். படம் ஃப்ளாப். ஆனா காமெடி சூப்பர் ஹிட்டாச்சு. குறிப்பா ‘கிணத்தைக் காணோம்’ காமெடி, ‘அடிச்சுக் கேட்பாங்க, அப்பவும் சொல்லாதீங்க’. இந்த காமெடியெல்லாம் எனக்கு நல்ல பெயர் வாங்கித் தந்துச்சு. வடிவேலுவின் ஆரம்ப கால சூப்பர் ஹிட் காமெடிகளிலும் எனக்குப் பங்கு இருக்கு. ‘பாஞ்சாலங்குறிச்சி’ படத்தில் சுருண்டு கிடக்கிற பாயை வடிவேலு விரிப்பாரே, அந்த காமெடிக்கு ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக் இருக்கு. எங்க ஊர்ல பொன்னையானு ஒருத்தர் இருந்தாரு. அவர்தான் ஒருமுறை பாயை இப்படி விரிக்க முயற்சி பண்ணி மூக்கை உடைச்சிக்கிட்டார். அதை சீமான்கிட்ட சொன்னேன். அருமையா இருக்கு மாரிமுத்து இதையே சீனா வெச்சிடலாம்னு சொல்லிட்டார். வடிவேலு மாதிரி ஊருக்கு ஒருத்தன் கண்டிப்பா இருப்பான். அதுதான் இந்த காமெடிகள் சக்சஸாக காரணமா இருந்துச்சு. இப்போ மேட்டருக்கு வரேன்... ‘கண்ணும் கண்ணும்’ தோல்விக்குப் பிறகு மறுபடியும் ஒரு படம் இயக்க வாய்ப்பு வந்துச்சு. மலையாள ரீமேக்கான அந்தப் படத்தை நிறைய மாற்றம் செஞ்சு ‘புலிவால்’னு எடுத்தேன். அதுவும் தோல்வி. 

“இனிமேல் படம் இயக்க மாட்டேன்!”

அப்போதுதான் டைரக்டர் மிஷ்கின் சார் கூப்பிட்டு ‘ஒரு போலீஸ் கேரக்டர் வெச்சிருக்கேன் அதுல நீங்கதான் நடிக்கணும்’னு சொன்னார். சரி இதையும் பண்ணித்தான் பார்ப்போமேனு களத்தில் இறங்கினேன். ‘யுத்தம் செய்’ படத்துல அந்த போலீஸ் கெட்டப் பார்த்துட்டு நிஜ போலீஸ் மாதிரியே இருக்கீங்க மாரிமுத்துனு பாராட்டினார். அடுத்து ‘ஆரோகணம்’ படத்தில் லீட் கேரக்டர் கிடைச்சுது. தொடர்ந்து ‘நிமிர்ந்து நில்’, ‘கொம்பன்’, ‘புகழ்’னு நடிக்க ஆரம்பிச்சுட்டேன். இனி திரும்பப் படம் இயக்குறதா ஐடியாவே இல்லை. நடிகரானதுக்குப் பின்னாடிதான் என்னை நாலு பேருக்குத் தெரியுது. இதுக்கு முன்னால நான்தான் இந்தப் படத்தை இயக்கினேன்னு எல்லார்கிட்டேயும் சொல்லிட்டுத் திரிவேன். இப்போ அப்படி இல்லை. இயக்குநராக இருப்பதை விட நடிகராக இருப்பதுதான் எனக்குப் பிடிச்சிருக்கு.

தனுஷுடன் ‘கொடி’, விஜய் ஆண்டனியுடன் ‘எமன்’, விஜய்யின் ‘தளபதி 60’னு தொடர்ந்து படங்கள் பண்ணிக்கிட்டு இருக்கேன்.  சந்தோஷமா இருக்கு!” என்கிறார் மாரிமுத்து.

-ஜுல்ஃபி, படம்: ஜெ.வேங்கடராஜ்

அடுத்த கட்டுரைக்கு