தமிழ் சினிமாவில் கடுமையான உழைப்புக்கும், பொறுமையான காத்திருப்புக்கும் நிச்சயம் பலன் உண்டு என்பதற்கு ஓர் உதாரணம் காளி வெங்கட். “எட்டு வருசத்துக்கு முன்னால நடந்ததா சொல்றாங்க சார். அப்போ அவன் ஐட்டக்காரன்கூட கிடையாது’’ என்று ‘மாரி’ படத்தில் வரும் போலீஸை மறக்க முடியுமா? ‘தெறி’ படத்தில் போலீஸ் கதாபாத்திரம், ‘ராஜா மந்திரி’ படத்தில் செகண்ட் ஹீரோ, சிபிராஜ் நடிக்கும் புதிய படம் என பிஸியாக இருந்தவரிடம் ஜாலியான அரட்டை...

‘‘ ‘ராஜா மந்திரி’ படத்தில் செகண்ட் ஹீரோ? அடுத்து ‘ஹீரோ’ தானே?’’

‘‘கண்டிப்பா பண்ணிடலாம். ஆனா நித்யா மேனன்தான் ஜோடியாக இருக்கணும். அப்படி யாராவது வந்தால் கண்டிப்பா கதையைக்கூட கேட்காம நடிப்பேன். இப்போ ‘பிரேமம்’ படத்தைப் பார்த்ததுக்கு அப்புறம் சாய் பல்லவியும் லிஸ்ட்ல சேர்ந்துட்டாங்க. இவங்க இரண்டு பேரும் இல்லாம நான் ஹீரோவாக சான்ஸே இல்லை.’’

‘‘வில்லன் ஆக நடிக்க விருப்பம் இருக்கா? அதுக்கும் கண்டிசன் இருக்கா?’’

‘‘வில்லனுக்கு நோ கண்டிசன். நான் வில்லனா நடிச்சாதான் சரியாக இருக்கும்னு ஒரு இயக்குநர் சொன்னா கண்டிப்பா நடிப்பேன். ஏற்கெனவே ‘பூவரசம் பீப்பி’ படத்துல நெகடிவ் ரோல் பண்ணிருக்கேன். அடுத்து சிபிராஜ் சார் படத்துலயும் நெகடிவ் ரோல்தான். இதுவரை வில்லனா நடிக்கலை. ஆனா வில்லனா நடிக்க எந்தத் தயக்கமும் இல்லை. எல்லாக் கதாபாத்திரங்களும் பண்ணிப் பார்க்கணும்.’’

‘‘காளி வெங்கட் பெரிய காதல் மன்னனாமே?’’

‘‘ஆமாங்க. இப்போ வரைக்கும் லவ் பண்ணிட்டேதான் இருக்கேன். ஷூட்டிங்குக்கு லீவ் போட்டாலும் போடுவேன். ஆனா, லவ் பண்றதுக்கு எல்லாம் லீவ் போடவே மாட்டேன். என்ன, நான் ஒவ்வொரு தடவை லவ் பண்றதெல்லாம் லவ் பண்ற பொண்ணுக்கு மட்டும் தெரியாது. மற்றபடி நான் காதல் மன்னன்தாங்க.’’

‘‘சும்மா சொல்லாதீங்க... நாடு விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம் போய் எல்லாம் காதல் பண்ணிணீங்களாமே?’’

‘‘ எனக்கு ஒருநாள் ஃபேஸ்புக்ல ஒரு பொண்ணு மெசேஜ் அனுப்பினாங்க. அவங்க துனிசியா நாட்டுல இருந்து பேசினாங்க. தமிழ்ப் படங்களை சப் டைட்டில் உதவியோட பார்ப்பேன். உங்களோட பெரிய ரசிகைனு சொன்னாங்க. எனக்கும் ஒரே சந்தோசம். அதுவும் துனிசியா நாட்டுப் பொண்ணு, பார்க்கிறதுக்கு பிளாஸ்டிக் பொம்மை மாதிரி அழகா இருந்தாங்க. தொடர்ந்து பேசினோம். அவங்ககிட்ட எப்படிப் பேசணும்னுகூடத் தெரியாது. லட்சுமி மேனன் தான் உதவி பண்ணினாங்க. இங்கிலீஷ் எல்லாம்கூட படிச்சேன், அந்தப் பொண்ணுகிட்ட பேசுறதுக்கு. அப்புறம்தான் லட்சுமி மேனன் சொன்னாங்க, எதாவது பிரச்னை ஆகிடப் போகுது, அந்த நாட்டுல இருந்து நமக்கு பெட்ரோல், டீசல் எல்லாம் வருதுனு. சரி, என்னோட காதலின் காரணமாக, இரண்டு நாட்டுக்கும் நடுவில் உள்ள நல்லுறவில் பிரச்னை வரக் கூடாதுனு என் காதலைத் தியாகம் செய்தேன்.’’

‘‘‘உங்களுக்குக் கிடைத்த பெரிய பாராட்டு?’’

‘‘ஒருநாள் நானும் கூட்டத்தோடு கூட்டமா ‘மிருதன்’ படம் பாத்துட்டு வெளியே வந்தேன். பக்கத்து தியேட்டர்ல ‘இறுதிச்சுற்று’. எனக்கு முன்னால போன ரெண்டு பேர் பேசிக்கிறாங்க. ஒருத்தர் சொல்றாரு ‘இறுதிச்சுற்று’, ‘மிருதன்’ ரெண்டு படத்துலேயும் நடிச்சிருக்கிறது வேற வேற ஆளுனு. இன்னொருத்தரோ ஒரே ஆள்தான்னு பெட் வெச்சுக்கிட்டங்க. நாம நடிக்கிற கதாபாத்திரங்களை ரசிகர்கள் ஏத்துக்கணும். அதுதான் பெரிய பாராட்டு. அதனால அது ரொம்ப ரொம்ப சந்தோசமாக இருந்தது. ஒரு நடிகனுக்கு இதைவிட பெரிய பாராட்டு இருக்குமானு தெரியலை?’’

‘‘திருமணம் ஆகாத நீங்க, எப்படி ‘இறுதிச்சுற்று’ படத்தில் ஹீரோயினுக்கு அப்பாவாக நடிச்சீங்க?’’

‘‘ ‘இறுதிச்சுற்று’ என் வாழ்க்கையில மறக்க முடியாத படம். இயக்குநர் சுதா மேடம் ஒருநாள், ‘படத்துல ஒரு ரோல் இருக்கு... பண்றீங்களா? ஆனா ரெண்டு பொண்ணுங்களுக்கு நீங்க அப்பா’னு சொன்னங்க. நானும், ‘குறும்படத்துல எல்லாம் சின்னக்குழந்தைகளுக்கு அப்பாவா நடிச்சுருக்கேன். கண்டிப்பா பண்றேன்’னு சொன்னேன். அப்போதான் சொன்னங்க, ‘இதுல சின்னக்குழந்தைக்கு அப்பா இல்லை, ஹீரோயினுக்கே நீங்கதான் அப்பா’னு. கொஞ்சம் அதிர்ச்சியா இருந்தாலும் நடிப்புனு வந்துட்டா எல்லாத்தையும் முயற்சி பண்ணிப் பாக்கணும்னு ஓகே சொன்னேன். படத்துல என்னோட ரோல் பத்தி எல்லோரும் பாராட்டிப் பேசினப்போ சந்தோசமாக இருந்துச்சு.’’

‘‘எப்போ கல்யாணம்?’’

‘‘(சிரிக்கிறார்). வீட்ல பொண்ணு பாத்துட்டு இருக்காங்க. இதுவரைக்கும் சரியா அமையலை. பொண்ணு வீட்ல, ‘பையன் சினிமாவில் நடிக்கிறார். ‘மிருதன்’, ‘மாரி’ படத்துல எல்லாம்கூட நடிச்சிருக் காரேனு சொன்னா, பொண்ணு வீட்டுக்காரங்க, ‘ஆமா ஆமா, தெரியும். ‘இறுதிச்சுற்று’ படத்துலகூட ஹீரோயினுக்கு அப்பாவா நடிச்சாரே அவர்தானே’னு ஆஃப் பண்ணிடுறாங்க. அந்தப் படத்தைச் சொல்லாமல் சொன்னாலும் அந்தப் படத்தைப் பற்றிதான் கேட்கிறாங்க. என்ன பண்ண?’’ என்றவர்...

போட்டோகிராஃபரைப் பார்த்து ‘‘போட்டோவை நல்லா எடு தம்பி. இதைப் பாத்துட்டாவது ஏதாவது பொண்ணு ஓகே சொல்லுதானு பார்போம்’’ என்கிறார் அதே சிரிப்புடன்!

- எஸ்.கே.பிரேம்குமார், படம்: பா.அபிரக்க்ஷன்