விஜய் டி.வி-யின் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியை கலகலப்பாய் தொகுத்து வழங்குபவர்கள் ரக்ஷனும் ஜாக்குலினும். ஒரு மத்தியான நேரத்தில் ரக்ஷனை மடக்கிப் பிடித்து பேசியதில்...

‘‘நான் பக்கா சென்னைப் பையன் ப்ரோ. காலேஜ் முடிச்சிட்டு சினிமா சான்ஸ் தேடிக்கிட்டிருந்த நேரம். தெரியாத்தனமா ஒரு உப்புமா கம்பெனியில போய் மாட்டிக்கிட்டேன். வாய்ப்புத் தரேன்னு அவங்க கொடுத்த டார்ச்சர் இருக்கே... அய்யய்யோ. ‘தலைநகரம்’ படத்தில் வர்ற வடிவேல் காமெடி மாதிரி அவங்க என்கிட்டே இருந்த காசு எல்லாத்தையும் காலி பண்ணினாங்களே தவிர கடைசிவரை என்னை வெச்சு ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோகூட எடுக்கலை. ஃப்ரெண்ட்ஸ் சில பேர் ‘உனக்கு சினிமா வேண்டாம். உன் வாய்ஸ் சூப்பரா இருக்கு. அதனால ஆங்கரிங் ட்ரை பண்ணு’னு சொல்லி உசுப்பேத்தினாங்க. முதல் வாய்ப்பு ராஜ் டி.வி-யில் கிடைச்சது. அப்படியே இசை அருவி, கலைஞர் டி.வி-னு ஒரு சுற்று சுற்றிக் கடைசியா இப்போ விஜய் டி.வி-யில வந்து நிற்கிறேன். விஜய் டி.வி-க்கு நான் அசிஸ்டென்ட் டைரக்டராதான் வந்தேன்.

‘சிரிச்சா போச்சு’ ரவுண்டில் சில கேரக்டர்ஸ் பண்ணினேன். ‘கலக்கப்போவது யாரு?’ ஆங்கர் செலக்ஷன் நடந்தப்போ ஏற்கெனவே மூணு சேனல்ல ஆங்கரிங் பண்ணின எக்ஸ்பீரியன்ஸ் இருந்ததால அந்த வாய்ப்பு ஈஸியா கிடைச்சது. ஆரம்பத்துல கொஞ்சம் பதட்டமாதான் இருந்துச்சு. அப்பறம் பழகிடுச்சு’’ என்று ஃப்ளாஷ்பேக் ஓட்டினார் ரக்ஷன்.

‘‘போன வாரம் கோயிலுக்குப் போயிருந்தேன். தூரத்துல என்னையே குறுகுறுனு பார்த்துக்கிட்டு இருந்த ஒருத்தர் மெதுவா என்கிட்ட வந்தவர், ‘தம்பி நீங்க விஜய் டி.வி ரக்ஷன்தானே’னு கேட்டார். ‘ஆமா’ன்னேன். உடனே ‘நீங்க மட்டும்தான் வந்திருக்கீங்களா, ஜாக்குலின் வரலையா’னு கேட்கிறார். பொது இடங்களுக்குப் போனா ஆடியன்ஸ் என்னை விசாரிக்கிறாங்களோ இல்லையோ ஜாக்குலினைத்தான் முதல்ல விசாரிக்கிறாங்க. ‘கலக்கப்போவது யாரு?’க்கு முன்னே ஜாக்குலின் எனக்கு அறிமுகம் கிடையாது. அவங்ககூட வொர்க் பண்ணும்போது ஆரம்பத்துல கொஞ்சம் பயமாத்தான் இருந்துச்சு. இப்போ ரெண்டு பேருக்கும் ஒரு நல்ல அண்டர்ஸ்டாண்டிங் உருவாகியிருக்கு. ஷோ நடக்கும்போது நடுவுல என்னதான் நான் கலாய்ச்சாலும் ஜாக்குலின் கோபப்பட மாட்டாங்க.

பொதுவாத் தொகுப்பாளர்களுக்கு அதே ஷோவில் நடிக்கிற வாய்ப்பு கிடைக்காது. ரொம்ப அபூர்வமா அது எங்களுக்குக் கிடைச்சிருக்கு. இது மூலமா ஓரளவு பெயர் வந்ததை நினைக்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு’’ என்றவரிடம்

‘‘டி.வி-யிலேயே செட்டிலாகிற மாதிரி ஐடியாவா, இல்லை ஹீரோ அவதாரமும் எடுப்பீங்களா?’’னு கேட்டதும் ‘‘சினிமா வாய்ப்புகள் நிறைய வருது. இருந்தாலும் இப்போதானே கொஞ்சம் வளர ஆரம்பிச்சிருக்கேன். இங்கே பண்ண வேண்டியது இன்னும் நிறைய இருக்கு. அதுக்குள்ள என்ன அவசரம். மற்றபடி நானும் டைம் பாஸ் வாசகன்தான். மத்தவங்க பேட்டி டைம் பாஸில் வந்து பார்த்திருக்கேன். ஆனா அதில் என் பேட்டியும் வரும்னு நிஜமா எதிர்பார்க்கலை’’ என்கிறார் ரக்ஷன்.

-ஜுல்ஃபி