Election bannerElection banner
Published:Updated:

நடிகர்கள் கிரிக்கெட் விளையாடுவதில் தப்பே இல்லை!

நடிகர்கள் கிரிக்கெட் விளையாடுவதில் தப்பே இல்லை!
நடிகர்கள் கிரிக்கெட் விளையாடுவதில் தப்பே இல்லை!

நடிகர்கள் கிரிக்கெட் விளையாடுவதில் தப்பே இல்லை!

நம் ‘தனி ஒருவன்’, ‘ஜெயம்’ ரவிக்கு முன்பு ஒரு ரவி ஹீரோவாய் தமிழ் சினிமாவில் வலம் வந்தார். அவர் ‘நிழல்கள்’ ரவி. 500 படங்களைத் தாண்டி  நடித்துக் கொண்டிருக்கிறவரை ஆழ்வார்பேட்டையில் அவருடைய ஆபீஸில் சந்தித்தேன்.

‘‘இப்போ தமிழ் சினிமா எப்படி இருக்கு?’’

‘‘முன்னே மாதிரி இல்லை. இப்போ நிறையப் படங்கள் வர்றதும் தெரியலை. போறதும் தெரியலை. ஒரு படத்துக்கு ஆயுசு அதிகபட்சம் ஒருவாரம்தான். அதோட தியேட்டரை விட்டுத் தூக்கிடுறாங்க. அப்படி ஒரு  நிலைமையிலதான் தமிழ் சினிமா இப்போ இருக்கு.’’

நடிகர்கள் கிரிக்கெட் விளையாடுவதில் தப்பே இல்லை!

‘‘உங்களுடைய பழைய படங்களில் பாம்பு, குரங்கு, பேய், பிசாசுகளின் நடமாட்டம் அதிகமாக இருந்ததே?’’

‘‘அப்போ சில ஹீரோக்கள் விலங்குகள்கூட நடிச்சா, தன்னோட இமேஜ் பாதிக்கும்னு நினைச்சாங்க. எனக்கு அப்படி எதுவும் கிடையாது. நல்லா நடிச்சு படத்தை ஹிட்டாக்கணும். அதுமட்டும்தான் என் நோக்கமா இருந்துச்சு. அதனால நான் எதைப்பத்தியும் யோசிக்கலை. இன்னொரு விஷயம் அவையெல்லாம் எனக்கு கமர்ஷியலா ஹிட்டான படங்கள். ராமநாராயணன் சார்தான் இதுக்குக் காரணம். அவர்கூட 18 படங்கள் பண்ணிருக்கேன். அதில் முக்கால்வாசி சில்வர் ஜூப்ளி ஹிட் படங்கள். இப்போ பேய்ப் படங்கள்தானே ட்ரெண்டா இருக்கு. ஆனா முதன்முதலில் ‘மைடியர் லிசா’ங்கிற படத்தில் இந்த ட்ரெண்டை தொடங்கி வெச்சதே நாங்கதான். 1987-ல் வந்த அந்தப் படத்துக்கு ஸ்பெஷல் எஃபெக்ட்ஸுக்காகவே லண்டன் போய் ஷூட் பண்ணினோம்.’’

‘‘டப்பிங் ஆர்ட்டிஸ்டா உங்க வாய்ஸ் யாருக்கு ரொம்பப் பொருத்தமா இருக்குனு நினைக்கிறீங்க?’’

‘‘குரோர்பதி நிகழ்ச்சியை விஜய் டி.வி வாங்கிட்டு அமிதாப் பச்சனுக்கு டப்பிங் பேச ஆள் தேடியிருக்காங்க. 450 பேருக்கு மேல டெஸ்ட் பண்ணிப் பார்த்தும் எதுவும் சரியா அமையலை. கடைசியா என்னைக் கூப்பிட்டாங்க. முதல்ல வேண்டாம்னு சொன்னேன். இல்லை உங்க வாய்ஸ்தான் கரெக்டா இருக்கும் பேசுங்கனு சொன்னாங்க. வெல்கம், குட் ஈவ்னிங், வணக்கம், சட்ஸ் ஸ்ரீஅகால்னு பேசிட்டு வந்துட்டேன். நைட் 11 மணிக்கு ஒரு போன். யாருனு பார்த்தா அமிதாப் பச்சன். ‘ரவி சூப்பரா பேசியிருக்கீங்க நீங்கதான் இந்த நிகழ்ச்சி பண்ணணும். அத்துடன் இனித் தமிழில் நான் பண்ணும் எல்லா விளம்பரத்துக்கும் நீங்கதான் டப்பிங்’னு சொல்லிட்டார். ‘பொம்மலாட்டம்’ படத்தில் நானா படேகருக்கும் டப்பிங் பேசியிருக்கேன். ஒரு சமயம் படப்பிடிப்புக்காக ஆப்பிரிக்காவில் ஒரே ரூமில் ரெண்டு பேரும் தங்கியிருந்தோம். அதனால ‘பொம்மலாட்டம்’ டப்பிங் ஈஸியா இருந்துச்சு.’’

‘‘நடிகர் சங்கக் கட்டட நிதிக்காக நீங்க கிரிக்கெட் விளையாடப் போகலையா?’’

‘‘விளையாடுவேன். நானும் அவங்களில் ஒருத்தன்தான். இப்போ கிரிக்கெட் விளையாடுவதை பிரச்னையாக்குகிறார்கள். எந்த ஒரு நல்ல விஷயம் நடந்தாலும் அதுக்கு சப்போர்ட்டும் இருக்கும் எதிர்ப்பும் இருக்கும். நாசர், விஷால் டீமை நான் பாராட்டுறேன். பிரமாண்டமா  பில்டிங் வரப்போகுது. அதை எல்லோரும் பார்க்கத்தான் போறாங்க.’’

நடிகர்கள் கிரிக்கெட் விளையாடுவதில் தப்பே இல்லை!

‘‘மக்கள்கிட்ட நிதி வசூல் பண்ணி கிரிக்கெட் நடத்துறது தப்புனு சிலர் கொந்தளிக்கிறாங்களே. நீங்க என்ன நினைக்கிறீங்க?’’

‘‘இதுல என்ன தப்பு இருக்கு? சமீபத்தில் கேமராமேன்கள் பில்டிங் கட்டினாங்க. அப்போ யாரும் ஒண்ணும் சொல்லலையே. நடிகர்கள் எது செஞ்சாலும் அது பளிச்சுனு தெரியும். அப்படித்தான் இதுவும். இப்படி ஒரு பில்டிங்கை நடிகர்களோட காசை மட்டும் வெச்சுக் கட்டுறதெல்லாம் சாத்தியமே இல்லை. இப்படியே போனா சினிமா பார்க்கவரும் ரசிகர்கள்கிட்டேயும் தியேட்டர்காரங்க காசு வாங்கக் கூடாது. ஃப்ரீயா டிக்கெட் கொடுக்கணும்னு சொல்வீங்க போல. இதோ விஜய் நடிச்ச  ‘தெறி’ படம் வருது. விஜய் ரசிகர்களுக்கு ஃப்ரீ ஷோ காட்டினா, அந்தத் தயாரிப்பாளர் என்ன ஆவார்? அப்படித்தான் இதுவும்.’’

-ஜுல்ஃபி, படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு