இந்த வார சுட்டபடம் கருப்பு வெள்ளைக் காலமான 1965-ல் ரிலீஸான ‘குழந்தையும் தெய்வமும்’ படம். இரட்டை இயக்குநர்கள் கிருஷ்ணன் -பஞ்சு இயக்கிய இந்தப் படம் 1953-ல் ரிலீஸான பிரிட்டிஷ் சினிமா ‘ட்வைஸ் அப்பான் எ டைம்’ மற்றும் 1961-ல் ரிலீஸான வால்ட் டிஸ்னியின் ‘தி பேரன்ட் ட்ராப்’ என்ற படங்களின் தழுவலோ தழுவல்.

என்னதான் ஜெர்மானிய நாவலின் தழுவலாக இருந்தாலும் படத்தின் திரைக்கதையும் காட்சிகளும் இந்த இரண்டு படங்களில் இருந்து அப்படியே எடுத்தாளப்பட்டிருக்கும். இரட்டைக் குழந்தைகள் பற்றிய கதை. பிரிந்து போன அம்மாவையும் அப்பாவையும் சேர்த்து வைக்கும் சகோதரிகளைப் பற்றிய கதை என்பதால் படம் குடும்பச் சித்திரமாக அமைந்தது. தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கருக்கும் கூடவே ஏவிஎம் நிறுவனத்துக்கும் ஹிட் படமாக இது அமைந்தது.

கதை: ஜெய்சங்கரும் ஜமுனாவும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக வாழ்க்கையைத் துவங்கும் இந்தத் தம்பதியரின் வாழ்க்கையில் ஜமுனாவின் அம்மாவால் பிரச்னை எழுகிறது. ஏழையான ஜெய்சங்கருக்கும், பஸ் கம்பெனி முதலாளியான ஜமுனாவின் அம்மாவுக்கும் ஈகோ மோதலில் தம்பதியரின் வாழ்க்கை இருண்டு போகிறது. முன்கோபக்காரரான ஜெய்சங்கர் தன் சுய மரியாதைக்காக யாரிடமும் சொல்லாமல் ஜமுனாவை விட்டு தங்களது இரட்டைக் குழந்தைகளில் ஒன்றை எடுத்துக்கொண்டு வெளிநாடு போய் விடுகிறார். இன்னொரு குழந்தையோடு ஜமுனா தன் கணவர் நினைவாகவே வாழ்கிறார். வருடங்கள் உருண்டோடுகின்றன. லலிதா (லல்லி)- பத்மினி (பப்பி) என ரெட்டைக் குழந்தைகளாக அவரவர் பெற்றோர்களிடம் வளர்ந்து பள்ளி வயதுக் குழந்தைகளாக ஆகிறார்கள். எதேச்சையாக இருவரும் சந்தித்துக்கொள்கிறார்கள். ஒரே வகுப்பிலும் படிக்கிறார்கள். ஆரம்பத்தில் தாங்கள் யார் என்று தெரியாமல் இருவருக்குள்ளும் மோதல். மெல்ல மெல்ல தங்களது உறவைத் தெரிந்துகொண்ட குழந்தைகள் தங்கள் அடையாளத்தை மாற்றிக்கொண்டு ஆள் மாறாட்டம் செய்து பெரும் போரட்டம் நடத்தி அப்பா அம்மாவைச் சேர்த்து வைக்கிறார்கள். அப்புறம் சுபம். படத்தில் இரட்டை வேடத்தில் குழந்தை நட்சத்திரம் குட்டி பத்மினி கலக்கி எடுத்திருப்பார்.

வால்ட் டிஸ்னியின் ‘பேரண்ட் ட்ராப்’ படத்தில் சூசன் -ஷாரோன் என்ற இரட்டைச் சகோதரிகள். ஆரம்பத்தில் மோதல், தங்களது பெற்றோர்கள் ஒருவர் எனத் தெரிந்ததும் இணைந்து அவர்களை அதே ஸ்டைலில் இணைத்து வைக்கிறார்கள்.

சரி, அப்போ பிரிட்டிஷ் படமான ‘ட்வைஸ் அப்பான் எ டைம்...?’ டைவர்ஸான பெற்றோர்களை சேர்த்துவைக்கும் இரட்டைச் சகோதரிகள். பெயர் மட்டும் லோட்டி - லிஸா!

தமிழில் ஹிட் அடித்த இந்தப்படத்துக்கு திரைக்கதை எழுதியது அந்நாளில் புகழ்பெற்ற திரைக்கதை ஆசிரியர் ஜாவர் சீதாராமன். அதே இயக்குனர்- ஏவிஎம் நிறுவனம் டீம் இந்தியிலும் மாலா சின்ஹா, பிஸ்வஜீத்தை வைத்து 1968-ல் ‘தோ கலியான்’ என்ற பெயரில் இயக்கி ஹிட் கொடுத்தது.

ஞானப்பழம்

(இன்னும் சுடும்..!)