Published:Updated:

`உயிர்' கொடுக்கிறோம்... உற்சாகம் கொடுங்க!

`உயிர்' கொடுக்கிறோம்... உற்சாகம் கொடுங்க!
பிரீமியம் ஸ்டோரி
`உயிர்' கொடுக்கிறோம்... உற்சாகம் கொடுங்க!

வெள்ளித்திரை

`உயிர்' கொடுக்கிறோம்... உற்சாகம் கொடுங்க!

வெள்ளித்திரை

Published:Updated:
`உயிர்' கொடுக்கிறோம்... உற்சாகம் கொடுங்க!
பிரீமியம் ஸ்டோரி
`உயிர்' கொடுக்கிறோம்... உற்சாகம் கொடுங்க!

`டப்பிங்' கலைஞர்களின் `ஒரிஜினல்' ஆதங்கம்

மிழ்த் திரைப்படங்களில் தமிழ் நடிகைகளைவிட, இந்தி, மலையாளம், கன்னடம் என மற்றமொழிப் பெண்களே ஹீரோயின்கள் என்பது எழுதப்படாத விதி. ‘நான் பேரு’, ‘நாளைக்கு வந்தேன்’ என்றெல்லாம் தமிழ் (?) பேசும் அந்த ஹீரோயின்களுக்கு, படங்களில் நேர்த்தியாகக் குரல்கொடுத்து, அவர்கள் கேரக்டரில் பாதியைக் கரையேற்றுபவர்கள், டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டுகள். கோடம்பாக்கத்தின் முன்னணி டப்பிங் ஆர்டிஸ்ட்டுகளுடன் ஒரு மீட்...

‘‘ரஹ்மான் சார் பாராட்டினார்!’’

‘ஐ’ பட ட்ரெய்லரில் ‘வயசான காலத்தில இங்கேயே செட்டில் ஆயிடலாம், இங்க யாரும் வர மாட்டாங்க’ என தன் செல்லக் குரலால் ட்ரெண்ட் அடித்தவர், ரவீணா.

`உயிர்' கொடுக்கிறோம்... உற்சாகம் கொடுங்க!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“எங்க பாட்டியும் அம்மாவும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட். நான் காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் படிச்சப்போ, என்னோட முதல் வாய்ப்பு ‘சாட்டை’ ஹீரோயினுக்கு டப்பிங் பேசக் கிடைச்சது. இந்த ரெண்டு வருஷத்துல தமிழ்ல 15 படங்களில் வொர்க் செய்திருக்கேன். சமந்தா, ஸ்ரீதிவ்யா, ஏமி ஜாக்சன்னு எல்லாருக்கும் வாய்ஸ் கொடுத்திருக்கேன். நான் பேசினதிலேயே எனக்குப் பிடிச்சது, ‘ஐ’ பட ஏமி ஜாக்சனோட ‘தியா’ ரோல். டப்பிங் முடிஞ்சதும் ரஹ்மான் சார் என்னைப் பாராட்டினார்.''

``டப்பிங் கேட்டகரியை இன்னும் கண்டுக்கலை!’’

‘காதல்’ சந்தியா, ‘சுப்ரமணியபுரம்’ சுவாதி, ‘மைனா’ அமலா பால், ‘கும்கி’ லஷ்மி மேனன் என எல்லா லவ் ட்ராஜிடி ஹீரோயின்களுக்கும் வாய்ஸ் கொடுத்தவர், மீனலோச்சினி.

`உயிர்' கொடுக்கிறோம்... உற்சாகம் கொடுங்க!

“அம்மா, அப்பா ரெண்டு பேரும் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் ஸ்டூடன்ட்ஸ். நான் குழந்தை நட்சத்திரமா அறிமுகமாகி, அப்புறம் சீரியல்களில் நடிச்சுட்டு இருந்தப்போதான் டப்பிங் சான்ஸ் வந்தது. முதல் வாய்ப்பான ‘காதல்’ படத்தில் பக்கா சென்னைப் பொண்ணான நான், பக்கா மதுரை பாஷை பேச வேண்டிய சேலஞ்ச். அந்த ஒரு படத்திலேயே நான் கத்துக்க நிறைய அனுபவங்கள் கிடைச்சது. தொடர்ந்து, நிறைய ஹீரோயின் ஓரியன்டட் படங்களில் பேச வாய்ப்பு கிடைச்சது பெருமையா இருக்கு. பிரபல அவார்டு நிகழ்ச்சிகளில் எல்லாம் எத்தனையோ பிரிவுகளில் விருது தர்றாங்க. ஆனா, டப்பிங் கேட்டகரியை இன்னும் கண்டுக்கலை என்பது வருத்தம்.’’

‘பேய்’ ஐஸ்வர்யா!

‘காஞ்சனா - 2’வில் ஆரம்பித்து இதுவரை நான்கு பேய்ப் படங் களில் ஹீரோயின்களுக்குக் குரல் கொடுத்தவர் ஐஸ்வர்யா. அதனாலேயே இண்டஸ்ட்ரியில் இவரை செல்லமாக ‘பேய்’ ஐஸ்வர்யா என்று அழைக்கிறார்கள்.

`உயிர்' கொடுக்கிறோம்... உற்சாகம் கொடுங்க!

“சின்ன வயசுல இருந்தே சினிமா ஹீரோயின் ஆகணும்னு ஆசை. எங்க பாட்டி, எங்களோட குடும்ப நண்பரான ராதாரவி அங்கிள்கிட்ட என்னைக் கூட்டிட்டுப் போனாங்க. ஆனா, வீட்டுல நடிப்புக்குத் `தடா’ சொல்ல, அந்த சமயத்துல ஒரு டப்பிங் சான்ஸ் கிடைச்சது. ஒரு ஜாலிக்காக ஒப்புக்கிட்டேன். அந்த வேலை எனக்கு ரொம்பப் பிடிச்சுப்போக, நித்யா மேனன், டாப்ஸி, பூனம் பாஜ்வா, பார்வதி மேனன், ராய் லஷ்மி, சிருஷ்டி டாங்கேனு வரிசையா வாய்ஸ் கொடுத்துட்டே இருக்கேன். ரேணுகா மேம், ரவீணா எல்லாம்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்.

‘கத்துக்குட்டி’ படத்துக்கு சிருஷ்டிக்கு முதல் நாள் டப்பிங் பேசிட்டு வந்தப்போ, அந்தப் படத்தின் இயக்குநர் சரவணன் சார் `வாட்ஸ்அப்’பில் பக்கம் பக்கமா பாராட்டி மெசேஜ் அனுப்பியிருந்தார். ரொம்ப சந்தோஷமா இருந்தது. லாரன்ஸ் மாஸ்டர், ‘செமம்மா... பிச்சுட்டே’னு சொல்லிட்டு, ‘இன்னொருவாட்டி நல்லா பேசிடு’னு பல்பு கொடுப்பார். இப்படி வேலை கலகலனு போயிட்டிருக்கு.’’

‘‘நான் ஒரு பாடகி!’’

‘நீ நிதானமா இல்ல, உன் கால் தரைல படல. முதல் நில்லு, அப்புறம் சொல்லு’ என ‘அஞ்சான்’ திரைப்படத்தில் சமந்தாவுக்காகக் க்யூட்டாகப் பேசியவர், மானஸி.

`உயிர்' கொடுக்கிறோம்... உற்சாகம் கொடுங்க!

‘‘பிறந்தது, வளர்ந்தது எல்லாம் மும்பையில். சினிமாவில் பின்னணிப் பாடகி ஆகும் ஆசையோட குடும்பத்துடன் சென்னைக்கு வந்தேன். ‘நிர்ணயம்’ படத்தில் பாடிட்டு இருக்கும்போது டப்பிங் சான்ஸ் வந்தது. அப்படியே டப்பிங் யூனியன்ல சேர்ந்துட்டேன். தமன்னா, காஜல், ஹன்சிகா, சமந்தா, ஆண்ட்ரியா, நந்திதா, நிக்கி கல்ராணி, பிந்து மாதவினு எல்லா லீடிங் ஹீரோயின்ஸுக்கும் வாய்ஸ் கொடுத்திருக்கேன். ‘உப்பு கருவாடு’ படத்துல நந்திதாவுக்கு ரெண்டு ரோலுக்கும் வெவ்வேறு விதமா வாய்ஸ் கொடுத்தது, மறக்க முடியாத அனுபவம். ராதாமோகன் சார் எனக்கு ஃபுல் ஃபிரீடம் கொடுத்தார்.

‘பாகுபலி’ படத்துல தமன்னா ரோலுக்கு தூய தமிழ்ல லோ பேஸ்ல கனமா பேசினது, கொஞ்சம் கஷ்டமா இருந்தது. ஆனா, ராஜமௌலி சார் பாராட்டினதுல எல்லாம் பறந்து போச்சு. நான் ஒரு முறை டப் செய்த ஹீரோயின்ஸ் மறுபடியும் என்னையே கூப்பிடும்போது சந்தோஷமா இருக்கும்.’’ 

சீனியர் ஆர்ட்டிஸ்ட் ரேணுகா!

த்ரிஷா, நயன்தாரா, அனுஷ்கா என பலருக்கும் வாய்ஸ் கொடுத்திருக்கும் ரேணுகா, டப்பிங் இண்டஸ்ட்ரியின் சீனியர் ஆர்ட்டிஸ்ட். ஜூனியர் ஸுக்கு முன்னுதாரணம்.

`உயிர்' கொடுக்கிறோம்... உற்சாகம் கொடுங்க!

‘‘அப்பா டப்பிங் ஆர்ட்டிஸ்ட். நானும் சின்ன வயசுல இருந்தே டப்பிங் பேச ஆரம்பிச்சுட்டேன். இதுவரைக்கும் 1000-க்கும் அதிகமான படங்களில் வேலை

பார்த்திருக்கேன். சின்ன பிட்க்கு வாய்ஸ் கொடுக்க ஆரம்பிச்சு, படிப்படியா வளர்ந்ததால எவ்ளோ பெரிய சீக்வன்ஸா இருந்தாலும் ரெண்டு, மூணு டேக்ல பண்ணிருவேன். ‘வேட்டைக்காரன்’ - ‘சுசீலா’, ‘வில்லு’ - ‘ஜானவி’, ‘சாமி’ - ‘புவனா’, ‘கில்லி’ - ‘தனலட்சுமி’... இந்த கேர்க்டர்ஸ் எல்லாம் நான் பேசினதில் எனக்குப் பிடிச்சது. 2004-ல் எனக்கு சிறந்த டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டு்க்கான ஸ்டேட் அவார்டு கிடைச்சது. ஹீரோயின் கேரக்டருக்கு உயிர் கொடுக்கிற எங்களுக்கு இன்னும் கூட உற்சாகம் கொடுக்கலாம்''.

பி.நிர்மல்