Published:Updated:

வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!

வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!

இளசுகளின் இன்ஸ்பிரேஷன் தொடர் season 4, episode 2

வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!

இளசுகளின் இன்ஸ்பிரேஷன் தொடர் season 4, episode 2

Published:Updated:
வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!
வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!

செஞ்ச குறும்பு இருக்கே..!

ஹாய்... எல்லோரும் நலமா?!

சம்மர்ல நிறைய தண்ணீர் குடிப்போம். நீர்ச்சத்துள்ள பழங்கள், காய்கறிகள் நிறைய சேர்த்துப்போம். ஃபிட்டா இருப்போம்... எப்பவும்! என்ன யோசிக்கிறீங்க? நான் ஸ்போர்ட்ஸ் பெர்சன்ல... அதான் ஹெல்தி வேர்ட்ஸ் கொஞ்சம்!

ஓ.கே... லெட்ஸ் ஸ்டார்ட்!

14 வயசில் சாதனை வெற்றி... அந்த கிரேட் ஃபீல் சொல்லவா?!

15 வயசுக்குள்ள எப்படியாவது ஸ்குவாஷ் நேஷனல் சாம்பியன்ஷிப் வாங்கிடுவேன்னு அப்பாவுக்கு பிராமிஸ் பண்ணிக் கொடுத்திருந்தேன். அப்போ எனக்கு 14 வயசு. நேஷனல் சாம்பியன்ஷிப் அரையிறுதிப் போட்டி. என் வாழ்வில் மறக்கவே முடியாத போட்டி. அந்தப் போட்டியில் என்னை எதிர்த்து விளையாடினவரோட, ஏற்கெனவே மற்றொரு போட்டியில் நான் எதிர்த்து விளையாடி மோசமா தோற்ற அனுபவம் இருக்கு. ஸ்குவாஷ் விளையாட்டின் சீரியஸ்னஸ்ஸை முழுசா எனக்குள் உள்வாங்கிக்கிட்டு,  இந்த  `டூ ஆர் டை’ போட்டியில தன்னம்பிக்கையோட விளையாடினேன். அவரை வீழ்த்தினேன்.

அடுத்தது ஃபைனல்ஸ். அதிலும் வெற்றி. 14 வயதில், என் கைகளில் நேஷனல் சாம்பியன்ஷிப். அது ரெக்கார்ட் பிரேக் சாதனை. சிறகு முளைச்ச மாதிரி, வானத்தை தொட்ட மாதிரினு எல்லாம் சொல்வாங்களே... அந்த ஃபீல் என்னனு அப்போ புரிஞ்சது எனக்கு! அப்பாவும் சூப்பர் ஹேப்பி. எல்லாருக்கும் வாழ்க்கையில ஒரு வெற்றி, பின்வரும் சாதனைகளுக்கு முக்கியமான தொடக்கப்புள்ளியா இருக்கும்ல... அப்படி எனக்கு அந்தப் போட்டி அமைஞ்சது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!

எந்த சப்போர்ட் சிஸ்டமும் இல்லாத விளையாட்டு வீரர்களின் நிலைமையை யோசிச்சிருக்கீங்களா?!

நேஷனல் சாம்பியன் ஆனதுக்கு அப்புறம், ஏறுமுகமா என் பயணம் தொடர்ந்தது. மலேஷியன் ஜூனியர் போட்டியில் தங்கம், பிரிட்டிஷ் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெரிய பெருமைனு வளர்ந்துட்டு இருந்தேன்.

இன்னொரு பக்கம் எனக்கிருந்த பிரச்னை.... பண நெருக்கடி. நான் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த பொண்ணு. அதனால பயிற்சி, நாடு நாடா போற போட்டிகளுக்கான செலவை எல்லாம் எங்க வீட்டில் பார்த்துக்குவாங்க. ஆனா, அவங்களுக்கும் அது சிரமமாதான் இருந்தது. செலவுகளை ஓரளவு சமாளிக்கக்கூடிய குடும்பத்தைச் சேர்ந்த எனக்கே இந்த நிலைன்னா, எந்த சப்போர்ட் சிஸ்டமும் இல்லாம, திறமையை மட்டுமே நம்பியிருக்கிற மிடில் கிளாஸ், லோயர் கிளாஸ் விளையாட்டு வீரர்களோட நிலைமையை யோசிச்சுப் பாருங்க.

பொதுவா கிரிக்கெட் வீரர்களுக்கு இங்கே எவ்வளவு ஸ்பான்ஸர், விளம்பரம், புகழ், ஃபேன்ஸ்னு சொல்லத் தேவையில்லை. ஆனா, மற்ற விளையாட்டுகளும், விளையாட்டு வீரர்களும் வெளிச்சத்தில் இருந்து விலக்கியே வைக்கப்படுறோம். உலக அரங்கில் பெரிய வெற்றிகளைப் பெற்றுவரும்போதுகூட பெரிய அங்கீகாரம் இல்ல. எனக்கு ஸ்பான்சர்ஸ் கிடைக்கவே சில வருடங்கள் ஆனது. நைக், TDPS, ஹார்ரோனு இன்னிக்கு எனக்கு என் ஸ்பான்ஸர்கள் பலமா இருக்காங்க. ஆனாலும், ஷூ வாங்கக்கூட காசில்லாம இருக்கிற சாம்பியன்ஸ் பற்றி எப்பவும் என் மனசில் ஒரு ரணம் ஓடிட்டேதான் இருக்கும்.

எங்க காலேஜில் என்னைக் கலாய்ப்பாங்களா... கண்டிப்பாங்களா?!

சென்னை, எத்திராஜ் காலேஜ்ல பி.ஏ., ஆங்கில இலக்கியம் சேர்ந்தேன். ஸ்போர்ட்ஸ் கரியர் இருந்ததால, ஈஸியா படிக்கிற கோர்ஸை தேர்ந்தெடுக்கலாமேனு இங்கிலீஷைத் தேர்ந்தெடுத் தேன். கோ-எட் ஸ்கூல்ல படிச்ச எனக்கு, கேர்ள்ஸ் காலேஜ் ஆரம்பத்தில் கொஞ்சம் வித்தி யாசமா இருந்தது. அப்புறம் ஃப்ரெண்ட்ஸ், கேங்னு செட் ஆனதும் ரொம்ப ஜாலியா கிடுச்சு. எங்க காலேஜ்ல புரொஃபசர்ஸும் ரொம்ப கூல். மனம் போற போக்கில் ஹேர் கட், வித்தியாசமான உடைகள்னு நான் போனாலும், என்னைக் கலாய்ப்பாங்களே தவிர கண்டிக்க மாட்டாங்க. தேங்க் யூ ஆல்!

வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!

க்யூட் குறும்புகள் நடந்துட்டே இருக்கும்!

காலேஜில் எனக்கு ஜூனியர், தீபிகா பல்லிக்கல். என் ஸ்குவாஷ் பார்ட்னர். ஸ்வீட் நண்பி. எங்களுக்குள்ள ஒரு நல்ல டெம்போ செட் ஆச்சு. சேர்ந்து பிராக்டீஸ் பண்ணினோம். இந்த ரெண்டு சென்னைப் பொண்ணுங்களும் உலக ஸ்குவாஷ்ல இந்தியாவுக்காக விளையாடி கெத்து காட்டினோம். 2014 காமன்வெல்த் போட்டியில் செம எனர்ஜியோட விளையாடினோம். ‘ஸ்குவாஷ் விமன்’ஸ் டபுள் பிரிவில் நாங்க தங்கப் பதக்கம் ஜெயிச்சப்போ, ‘யாருடா இந்தப் பொண்ணுங்க?!’னு மொத்த விளையாட்டு உலகமும் கவனிச்சாங்க. ஸ்குவாஷ்ல இந்தியா ஜெயிச்ச முதல் தங்கம் அதுதான். அதன் பிறகுதான் இந்தியாவுல இந்த விளையாட்டு பற்றி கொஞ்சம் பேச ஆரம்பிச்சாங்க. அரசுகிட்ட இருந்து எங்களுக்கு உதவியும் ஸ்பான்ஸர்ஷிப்பும் கிடைக்கத் தொடங்கியது.

தீபிகாகூட இருக்கும்போது சிரிச்சுட்டே இருக்கலாம். ஒருமுறை ஒரு பிரஸ் மீட்ல ரெண்டு பேரும் சேர்ந்து கலந்துகிட்டோம். ஒரு ரிப்போர்ட்டர் தீபிகாகிட்டயே கேள்விகள் கேட்டுட்டு இருந்தார். அதுவும் விளையாட்டு பத்தியில்ல... அவரோட பெர்சனல் வாழ்க்கை, தினேஷ்னு தேவையில்லாத கேள்விகள். தீபிகா சலிப்பா பதில் சொல்லிட்டே, அவளோட மொபைல்ல இருந்து பக்கத்துல உட்கார்ந்திருந்த என்னோட மொபைலுக்கு, ‘என்னய்யா நடக்குது இங்க..? ஸ்ஸ்ஸப்பா முடியல!’னு மெசேஜ் அனுப்பிட்டு, அவ கேஷுவலா பதில் சொல்லிட்டு இருக்க, நான் மெசேஜை பார்த்துட்டு பயங்கரமா சிரிச்சுட்டேன். அப்புறம் தீபிகாவும் என்னோட சேர்ந்து சிரிக்க, அந்த ரிப்போர்ட்டருக்கு ஒண்ணும் புரியல. தீபிகாவோடு இருக்கும்போது இப்படி சின்னச் சின்னதா க்யூட் குறும்புகள் நடந்துட்டே இருக்கும்.

ஓ.கே... என்னோட பிராக் டீஸ் ரொட்டீன், ஃபிட்னஸ் சீக்ரெட், டயட், காலில் பட்ட காயம், வாழ்க்கையிலும் விழுந்து எழுந்தது... தொடர்ந்து பேசுவோம். வெயிட் ஃபார் டூ வீக்ஸ். இப்போதைக்கு பை பை!

 எஸ்.கே. பிரேம்குமார், கோ.இராகவிஜயா
 படங்கள்: எம்.உசேன்