Published:Updated:

"இன்ஸ்பிரேஷன்ங்கிற பெயர்ல கதையைத் திருடுற வேலையை நான் செய்யமாட்டேன்!" - 'உள்ளே வெளியே 2' பார்த்திபன்.

"இன்ஸ்பிரேஷன்ங்கிற பெயர்ல கதையைத் திருடுற வேலையை நான் செய்யமாட்டேன்!" - 'உள்ளே வெளியே 2' பார்த்திபன்.
"இன்ஸ்பிரேஷன்ங்கிற பெயர்ல கதையைத் திருடுற வேலையை நான் செய்யமாட்டேன்!" - 'உள்ளே வெளியே 2' பார்த்திபன்.

"இன்ஸ்பிரேஷன்ங்கிற பெயர்ல கதையைத் திருடுற வேலையை நான் செய்யமாட்டேன்!" - 'உள்ளே வெளியே 2' பார்த்திபன்.

''இந்தக் கேள்வியை நீங்க கேட்பீங்கனு தெரியும். இதுக்கான பதில் இதுதான்!'' என்கிறார், பார்த்திபன். என்ன கேள்வி என்ன பதில் என்பதைத் கடைசியில் தெரிந்துகொள்ளலாம். பார்த்திபன் இயக்கத்தில் சீதா தயாரித்த படம், 'உள்ளே வெளியே'. இப்படம் வெளியாகி கிட்டதட்ட இருபது வருடங்களுக்கு மேலான நிலையில், 'உள்ளே வெளியே 2' எடுக்கிறார், பார்த்திபன். 

''இந்நேரம், படத்தோட ஷூட்டிங் பிஸியா போய்க்கிட்டு இருந்திருக்கணும். ஆனா, சிலபல வேலைகள் காரணமா தள்ளிப்போயிடுச்சு. இந்தப் படத்துல இவர்தான் ஹீரோனு யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஏன்னா, ஒவ்வொரு கேரக்டராக, ஒவ்வொருத்தரும் நடிப்பாங்க." 

இத்தனை வருடம் கழித்து 'உள்ளே வெளியே 2' எடுக்க என்ன காரணம்?

''இத்தனை வருடம் ஆயிடுச்சே, மக்கள் பழசையெல்லாம் மறந்திருப்பாங்கனுதான். பழைய 'உள்ளே வெளியே' படத்தில் இருந்த எல்லாமே இதிலேயும் இருக்கும். கமர்ஷியல், ஆக்‌ஷன், த்ரில்லர்... எல்லாம் இருக்கிற மாதிரிதான் கதை எழுதியிருக்கேன். பழைய வெர்ஷனில் காதல் அதிகமா இருக்கும். அதெல்லாம் இதுல இருக்காது. ஏன்னா, இந்தப் படம் முழுக்க பரபரப்பா பேசிக்கிட்டே இருப்பாங்க. எந்தப் படத்துலேயும் பார்க்காத தைரியமான பேச்சுகளை இந்தப் படத்துல பார்க்கலாம்!'' 

அப்டீன்னா, அரசியல் படமா? 

''கண்டிப்பா. அதை இதுல அதிகமாவே எதிர்பாக்கலாம். ஏன்னா, இப்போ இருக்கிற அரசியல் சூழல் ரொம்ப மோசமா இருக்கு. பிரதான அரசியலை 'உள்ளே வெளியே 2' அதிகமாவே பேசும்.'' 

அரசியல் பேசணும்ங்கிறதுக்காகவே இந்தப் படத்தை எடுத்திருப்பீங்க போல? 

''நான் எடுக்கும் ஒவ்வொரு படத்துலேயும் யாரும் தொடாத ஒரு கதைக் களத்தைத் தொடணும்னு நினைப்பேன். அந்த மாதிரி ஒரு முயற்சிதான் இதுவும். படத்துக்கு என்ன தேவையோ அதெல்லாம் இருக்கும். அந்தத் தேவையில அரசியல் அதிகமா இருக்கும். 

தமிழ் சினிமாவில் பார்ட் 2 படங்களின் எண்ணிக்கை அதிகமா வருதே... இதைக் கதைப் பஞ்சம்னு எடுத்துக்கலாமா? 

எனக்குக் கதை பஞ்சமெல்லாம் கிடையாது. அறுபது கதைகள் என் பெட்டகத்தில் இருக்கு. அதேமாதிரி இன்ஸ்பிரேஷன் அப்படீங்கிற பேர்ல திருடுறதும் கிடையாது. என் கதைகள் எல்லாமே சுய சிந்தனைகள்தான். 'உள்ளே வெளியே 2'வில் பத்து நடிகர்கள் நடிக்கப்போறாங்க. யாருமே பெரிய ஸ்டார் ஹீரோக்கள் இல்லை. ஆனா, நல்லா நடிச்சு, அழுத்தமான நடிகர்களா தெரிவாங்க. இந்தப் படத்துக்கு 'உள்ளே வெளியே' தலைப்புதான் பொருத்தமா இருந்தது. தவிர, 'உள்ளே வெளியே'வின் தொடர்ச்சியாகத்தான் இந்தப் படம் இருக்கும். ஆனா, அப்படியே இருக்காது.''  

படத்தோட ஷூட்டிங் எப்போ?

''ஏப்ரல்ல ஷூட்டிங். ஏப்ரல் 1-ஆம் தேதினு சொன்னா, முட்டாள்தனமா இருக்கும்ல!''  

படத்தோட புரொடியூசர்?

''இன்னும் யாரும் ஏமாறலை. யாரும் ஏமாறலைனா, நானே தயாரிச்சிடுவேன். படத்துல சமுத்திரக்கனி, ஆடுகளம் கிஷோர் முக்கியமான கேரக்டர்ல நடிக்கப்போறாங்க. இன்னொரு பெரிய ஸ்டார்கூட உள்ளே வரலாம்!'' 

நிறைய படங்களில் நடித்துக்கொண்டிருந்தாலும், இயக்குநர் அடையாளத்தை விட மாட்டேங்கிறீங்களே? 

''உண்மையா சொல்லணும்னா, எனக்குப் பிடிச்சது டைரக்‌ஷன்தான். இன்னும் நிறைய படங்கள் டைரக்‌ஷன் பண்ணிக்கிட்டே இருக்கணும். கூடவே நடிச்சுக்கிட்டும் இருக்கணும். பொருளாதார ரீதியா சொன்னா, நாலு படம் நடிச்சு, அதில் வரக்கூடிய காசை வெச்சு ஒரு படம் டைரக்ட் பண்ணுவேன். சினிமாவில் என்னைத் தக்க வெச்சுக்கிறதுக்காகத்தான் தொடர்ந்து நடிக்கிறேன். ஆனா, நான் டைரக்‌ஷன் பண்ற படங்கள்தான், என் பெயரைக் காப்பாத்தும். என் சுய சிந்தனையை நான் படம் எடுத்துதான் பதிவு பண்ண முடியும்.''

உங்கள் முன்னாள் மனைவி சீதாவுடன் பேசுவீங்களா?

''கீர்த்தனாவுக்குக் கல்யாணம். இதில் அம்மா, அப்பா ரெண்டு பேருக்கும் சமமான பங்கு இருக்கு. அவங்க இந்தக் கல்யாணத்துல கலந்துக்குவாங்க, அவ்வளவுதான்!'' 

அடுத்த கட்டுரைக்கு