Published:Updated:

தூள் கிளப்புறாங்க!

கலாட்டா இந்துலேகா.சி, படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

பிரீமியம் ஸ்டோரி
தூள் கிளப்புறாங்க!

தீபாவளி ஸ்வீட்ஸ் என்றாலே தனி டேஸ்ட்தான்! அதுவும் கலர்ஃபுல் ஸ்வீட்டீஸே ஸ்வீட் செய்தால்? அட, ஆமாங்க... நம்ம விஜய் டி.வி-யின் 'கனா காணும் காலங்கள்’ டீமோட பியூட்டீஸ் தேனு, மஞ்சு, சஞ்சனா, ஸ்டெல்லா.. இவர்களின் தீபாவளி பிளானே மைசூர்பாகு செய்வதுதானாம்!

 ''அதுசரி... நீங்க செஞ்சுடுவீங்க... யாரு சாப்பிடறது..?'' - என்று நமது டவுட்டைக் கேட்க...

''அதுக்குதான் நம்ம பசங்க இருக்கானுங்களே...'' என கோரஸ் குரல் கொடுத்த சிட்டூஸ்.. போனை எடுத்து டயல் செய்த அடுத்த சில நிமிடங்களில் நம்ம பசங்க ஷிவா, ஜீவா, மணி, பழனி நால்வரும் ஸ்பாட்டில் ஆஜர்! 'இவங்களோட அட்ராசிட்டியை கொஞ்சம் ஓரமா ஒதுங்கி நின்னே பாப்போம்’ என்று ஒதுங்கிக்கொண்டோம்.  

பசங்க வந்தவுடன் ஃபுல் மேக்-அப்பில் இருந்த பொண்ணுங்களைப் பார்த்து, ''ப்ப்ப்பா... யார்டா இதுங்க... பேய் மாதிரி இருக்குதுங்க'' என்று விஜய் சேதுபதி ஸ்டைலில் சொல்ல... ''டேய்... நாங்க செய்ற மைசூர்பாகைத்தான் நீங்க சாப்பிடப் போறீங்கன்றதை மறந்துடாதீங்க...'' என்று மஞ்சு லைட்டா மிரட்டல் விடுத்தார்.

நம்ம ஹீரோ ஷிவா, ''டேய் ஜீவா... என்னமோ சொன்னதை அப்படியே செய்யற மாதிரியே ஸீன் போடறாங்க பாரேன். இவங்க செஞ்சதுக்கு அப்புறம்தான் அது என்ன பண்டம்னு டிஸைட் பண்ணவே முடியும்'' என்று கலாய்க்க... அதற்கு ஜீவா, ''ஷிவா! பார்த்துடா... எனக்கென்னவோ இவங்க செய்யறதை அப்படியே எடுத்து நம்ம வாயில போட்டு... விஜய்சேதுபதி மாதிரியே 'என்னாச்சு’ங்குற ரேஞ்சுல சுத்த விட்டுறப் போறாங்கன்னு நினைக்கிறேன்!'' என்று சத்தாய்த்தார்

தூள் கிளப்புறாங்க!

குறுக்கே புகுந்த மணி, ''டேய்... டேய்... பாவம்டா..! நமக்காக ஸ்பெஷலா மைசூர்பாகு செஞ்சு தரேன்னு சொல்ற கொயந்தைங்கள ஏண்டா கலாய்க்கறீங்க?'' என்று சொல்ல... ''மணி அண்ணா... உங்களுக்கு எக்ஸ்ட்ராவா நெய், முந்திரி எல்லாம் போட்டுத் தர்றேன்... ஓ.கே-வா?'' என்றார் சஞ்சனா. அதைக் கேட்டு மணி அசடு வழிய... ''டேய் கும்கி யானை... ரொம்ப வழியாதடா! உன்னைப் பத்தி தெரிஞ்சுதான் அது உஷாரா உன்னை அண்ணான்னு கூப்பிடுச்சு! ஷேம் ஷேம்... பப்பி ஷேம்!'' என்று வாரினார் கதிர்.  

''மணி அண்ணாவை ஏண்டா கலாய்க்கறீங்க?'' என்று வரிந்து கட்டிக்கொண்டு சிபாரிசுக்கு வந்தார் மஞ்சு.

''பார்றா... பொண்ணுக்குக் கோவம்லாம் வருது. தோ பாரும்மா மஞ்ஞ்ஞ்....சு, பொடவை கட்டின அன்னிக்காச்சும் பொண்ணா அடக்க ஒடுக்கமா நடந்துக்க தாயி..! அவ்வளவுதான், ஜொள்ளிப்புட்டேன்!'' என்று ஜீவா அட்வைஸ் பண்ண... பதிலுக்கு மஞ்சு, ''டேய் முட்டக்கண்ணா... நீ 'ஜொள்’ளினது போதும்... தள்ளி நில்லு!'' என்றார்.

''ஹலோ... உங்க சண்டையை அப்புறம் வெச்சுக்கோங்க. ஸ்வீட்டை மொதல்ல செஞ்சுமுடிங்க'' என்று தேனு சவுண்ட் விட... ''அது எப்படின்னு தெரிஞ்சிருந்தா எப்பவோ ஆரம்பிச்சிருப்பம்ல...'' என்று சஞ்சனா பதிலுக்குக் குரல் எழுப்ப... ''சரி, சரி... அதான், என் மாமா பழனி இருக்காருல்ல... அவரு பாத்துப்பாரு!'' என்று தேனு பழனியைப் பார்க்க... மைசூர்பாகுக்கு சர்க்கரைப் பாகு பதம் பார்க்க கிளாஸ் எடுக்கத் தொடங்கிவிட்டார் பழனி.

''ஹலோ மேடம்ஸ்... இப்பவாச்சும் தெரியுதா, பசங்க ஹெல்ப் இல்லாம உங்களால எதுவும் பண்ண முடியாதுன்னு'' என்று கதிர் அலப்பறையை ஆரம்பிக்க... ''டேய் கதிர்... வாயை மூடு. சீரியல்ல  என்னோட ஆளா நடிக்கிறியே... போனாப் போகுதுன்னு பார்த்தா... ஓவராப் பேசுற?'' என்று ஸ்டெல்லா கோபப்பட்டதைப் பார்த்து, ''பார்றா... தீபாவளிக்குப் பத்த வெச்ச நமுத்துப் போன பட்டாசு மாதிரி ஸீன் காட்றத...'' என்று ஆரம்பித்து, ஸ்டெல்லாவை ஜீவா வெறுப்பேற்ற...

மற்ற பெண்கள் கடமையே கண்ணாக மைசூர்பாகு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். வாணலியில் கொதித்துக்கொண்டிருந்த சர்க்கரைப் பாகில் கடலை மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டிக் கிளறியபடி இருந்தனர். அருகில் கோச் பழனி நின்று, ''குட்... குட்... அப்படித்தான்!'' என்று உற்சாகமூட்டிக்கொண்டு இருந்தார்.

தூள் கிளப்புறாங்க!

அவர்களைப் பார்த்து ஷிவா, ''அடிப்பாவிங்களா... தீபாவளியும் அதுவுமா வீட்ல எண்ணெய் தேய்ச்சுக் குளிச்சமா... ஸ்வீட் தின்னுட்டு அப்படியே தீபாவளி ரிலீஸ் படத்தை, ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ போய்ப் பாத்தோமான்னு தேமேன்னு இருக்குற பசங்களை... ஏதோ ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல பார்ட்டி கொடுக்கற மாதிரியே ஆக்ட் குடுத்து ஏமாத்தி வரவெச்சு... இப்படித் தீபாவளி லேகியம் மாதிரி எதையோ கிண்டிட்டிருக்கீங்களே...'' என்று ஷிவா முடிப்பதற்குள்... நம்ம மணி, ''மச்சான்! சும்மா இருங்களேண்டா... நெய் வாசம் தூக்குது. இந்த நேரத்துல டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டு... ஹேய், சஞ்சனா... அந்த முந்திரிப் பாக்கெட்டை எடும்மா...'' என்று தன் பணியில் மும்முரமானார்.  

''மணி அண்ணா... இன்னும் கொஞ்ச நேரம் இருங்கண்ணா... சூப்பர் மைசூர்பாகு ரெடியாயிடும்!'' என்று சஞ்சனா சொல்ல... ''பரவாயில்ல... ரொம்ப அவசரப்படறான். அந்தக் கடலை மாவையும், கொஞ்சம் சர்க்கரையையும் கலந்து அவனுக்குக் கொடு! வாயிலேயே மைசூர்பாகு தயாரிச்சு அரை மணி நேரத்துக்கு நம்ம யாரையும் டிஸ்டர்ப் பண்ணாம அப்பிடி ஓரமா ஒக்காந்து மொக்குவான்... இல்லடா மணி..?'' என்று வெறுப்பேற்றினார் பழனி.

சற்றும் அலட்டிக்கொள்ளாமல், ''ஆமாடா! நீ சொல்றது கரெக்ட்! கூடவே கொஞ்சம் முந்திரியும் கொடுத்துட்டா, நாம்பாட்டுல அப்படி ஓரமா...'' என்று மணி மீண்டும் ஆரம்பிக்க... ''ஏய்... திரும்பிப் பாக்காம ஓடிடு! இந்தப் பிசாசுங்க நம்மளை மதிக்காததுக்கு முழுக்க முழுக்க இவன்தான்டா காரணம்!'' என்று பொங்கி எழுந்த ஜீவாவை சமாதானப்படுத்தினார் ஷிவா

தூள் கிளப்புறாங்க!

''ஹேய்... கொஞ்சம் அடங்கறீங்களா! நெய்யும் சேத்தாச்சு. இன்னும் அஞ்சு நிமிஷத்துல மைசூர்பாகு ரெடி!'' என்று தேனு சொல்ல... எல்லோரும் ஆர்வத்தோட வாணலியையே பார்க்க... ஒரு பக்கம் சஞ்சனா, தட்டில் நெய்யை ஊற்றித் தடவி ரெடி செய்ய... ரெடியான மைசூர்பாகை தட்டில் பரவலாக ஊற்றி ஆறவைத்தார் மஞ்சு.

ஆறியதும்... மைசூர்பாகை விள்ளலாக எடுக்க முயன்றால், அது உதிர்ந்து தூள் தூளாக வந்தது. அதைப் பார்த்ததும்  பாய்ஸ் எல்லாரும், ''கவுன்ட் டவுன் ஸ்டார்ட்... 5... 4... 3... 2... 1... எஸ்கேப்!'' என்று ஓட... பொண்ணுங்க எல்லாரும் கையில் மைசூர்பாகை... ஸாரி, மைசூர்தூளை அள்ளிக்கிட்டு,

ஓடினவர்களை விடாம துரத்த... தீபாவளி களை கட்டியது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு