அப்பாவாகியிருக்கிறார் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல். கடந்த இரண்டு ஆண்டுகளாக கெய்லுடன் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் தாஷாவுக்கு தெறி பேபி பிறந்திருக்கிறது. குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே ஐபிஎல்-க்கு பிரேக்விட்டு ஜமைக்கா பறந்தார் கெய்ல். ஆனால், `என்னுடைய அழகான மகள் `பிளஷ்'ஐ இந்த உலகுக்கு வரவேற் கிறேன்' என ஸ்டேட்டஸ் தட்டி, மீண்டும் பழைய கதையைக் கிளறியிருக்கிறார் கெய்ல். பிக்பேஷ் கிரிக்கெட் போட்டியின்போது ஆஸ்திரேலிய டி.வி வர்ணனையாளரை `மேட்ச் முடிந்ததும் பார்ட்டிக்குப் போகலாமா... டோன்ட் பிளஷ்(வெட்கம்) பேபி' என கெய்ல் சொன்னது மிகப் பெரிய பிரச்னை ஆனது. அப்படிச் சொன்னதற்காக கெய்ல் பிறகு மன்னிப்பும் கேட்டார். இப்போது மீண்டும் மகளுக்கு `பிளஷ்' என அவர் பெயரிட்டிருப்பதாகச் சொல்லியிருப்பது சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது.

செஞ்சுரி அடிக்கப்போகிறார் பாலகிருஷ்ணா. இவரது 100-வது படத்தை இயக்கப்போவது தமிழில் `வானம்' படத்தை இயக்கிய கிரிஷ். `கௌதமபுத்ர சட்டக்கர்னி' எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படம், கி.மு-வில் ஆந்திராவை ஆண்ட சட்டக்கர்னி ராஜா பற்றியது. படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடி நயன்தாரா. அம்மாவாக ஹேமமாலினி நடிக்கிறார். `இது ஆஸ்கர் விருதுக்குத் தகுதிபெறும் படமாக இருக்கும்' என சீரியஸ் முகம் காட்டுகிறார் பாலகிருஷ்ணா!

`காதல் கிரிக்கெட்டு... விழுந்துடுச்சு விக்கெட்டு' என ஒரே ரொமான்ஸில் இருக்கிறது மிட்செல் ஸ்டார்க் - அலீஸா ஹீலி ஜோடி. ஆஸ்திரேலியாவின் வேகப்புயலான மிட்செல் ஸ்டார்க்குக்கும், ஆஸ்திரேலிய பெண்கள் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அலீஸா ஹீலிக்கும் காதல் திருமணம் இனிதே நடந்து முடிந்திருக்கிறது. ஸ்டார்க்கும் அலீஸாவும் ஒரே பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள்; ஒரே அணியில் கிரிக்கெட் விளையாடியவர்கள். ‘கிரிக்கெட்தான் எங்களை இணைத்தது. இருவருமே சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் என்பதால், எங்களுக்குள் நல்ல புரிதல்' என்கிறார் அலீஸா ஹீலி. அலீஸா, ஆஸ்திரேலியாவின் முன்னாள் விக்கெட் கீப்பர் இயான் ஹீலியின் அண்ணன் மகள்!

`உத்தா பஞ்சாப்' படத்தின் ட்ரெய்லர்தான் கடந்தவார சோஷியல் மீடியா வைரல். அபிஷேக் சவ்பே இயக்கத்தில் ஷாஹித் கபூர், கரீனா கபூர், அலியா பட் என பெரிய ஸ்டார் பட்டாளமே நடித்திருக்கும் இந்தப் படம், போதைமருந்து கடத்தல் பற்றியது. போதைக்கு அடிமையான ராக் இசைக் கலைஞனாக ஷாஹித் கபூரும், போதை கடத்தல் கும்பலிடம் சிக்கும் இளம் பெண்ணாக அலியா பட்டும், மருத்துவராக கரீனா கபூரும் நடித்திருக் கிறார்கள். எல்லா படங்களிலுமே அழகுப் பெண்ணாக வரும் அலியா பட், இதில் அழுக்குப் பெண்ணாக நடித்திருக்கிறார். `என் சினிமா வாழ்க்கையைத் திருப்பி அமைக்கும் படமாக இது இருக்கும்' என்று நெகிழ்கிறார்!

பிரதமர் மோடியின் மெழுகுச்சிலை ரெடி. மேடம் டுஸாட்ஸ் மியூசியத்தில் வைப்பதற்காகச் செய்யப்பட்ட நரேந்திர மோடியின் சிலைக்கு ரியலைவிட கலரும் இளமையும் அதிகம். `பிரம்மா செய்த வேலையை இப்போது இந்தக் கலைஞர்கள் செய்கிறார்கள். என்னை நானே பார்ப்பதுபோல் அவ்வளவு தத்ரூபமாக இருக்கிறது’ என்று தன் மெழுகுச்சிலையைப் பார்த்து வியந்திருக்கிறார் மோடி. மேடம் டுஸாட்ஸ் மியூசியத்தில் காந்தி, ஒபாமா, சர்ச்சில், கேமரூன் ஆகிய உலகத் தலைவர்களின் சிலைகளுக்கு அருகே வைக்கப்பட இருக்கிறது மோடியின் சிலை!

த்ரிஷா இப்போ சூப்பர் சிங்கர். `நாயகி' படத்தில் டெரர் பேயாக நடித்துவரும் த்ரிஷா, இந்தப் படத்துக்காக பாடகியாகவும் அறிமுகமாகிறார். ஆங்கிலத்தில் ஆரம்பித்து தமிழுக்குத் தாவும் இந்தப் பாடலின் தமிழ் வரிகளையும் ஆங்கில உச்சரிப்பிலேயே த்ரிஷா பாட `ஆசம்... ஆசம்’ என யுடியூபில் வியூஸ் குவிகின்றன.