Published:Updated:

'' கலரைப் பார்க்காதீங்க; பொண்ணுங்க திறமையைப் பாருங்க!'' - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் #AcceptTheWaySheIs

'' கலரைப் பார்க்காதீங்க; பொண்ணுங்க திறமையைப் பாருங்க!'' - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் #AcceptTheWaySheIs
'' கலரைப் பார்க்காதீங்க; பொண்ணுங்க திறமையைப் பாருங்க!'' - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் #AcceptTheWaySheIs

ஃபேர் காம்ப்ளக்‌ஷன், வீட்டிஷ் காம்ப்ளக்‌ஷன், ஐந்தரை அடி உயரம், ஸ்லிம் லுக் என்று ஏர்ஹோஸ்டஸ் வேலைக்கு ஆள் எடுப்பதைப் போலத்தான், திருமணத்துக்காகவும் பெண் தேடுகிற நிலைமைக்கு வந்திருக்கிறது இச்சமூகம். பெண்களின் திறமை இங்கே இரண்டாம்பட்சம்தான். அவள் சரும நிறத்துக்குத்தான் முதல் மரியாதை. அடுத்து பாடி ஷேப். பெண்ணென்றாலே இடை குறுகி, மார்பு பெருகி இருக்க வேண்டும் என்கிற அபத்தம் நம் சமூகத்துக்கான சாபக்கேடு.  எந்த ஒளிவட்டமும் இல்லாமல் வாழ நினைக்கிற ஒரு பெண்ணுக்கு இங்கே விதிக்கப்பட்டிருக்கிற வரைமுறைகளே ஏராளம் என்றால், சில்வர் ஸ்க்ரீனில் ஜொலிக்கும் பெண்களுக்கான வரைமுறைகள் பற்றி கேட்கவே வேண்டாம். அதையெல்லாம் தன் நடிப்புத்திறமையாலும், இயல்பான அழகாலும் அடித்து துவம்சம் செய்துவருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

'நீயெல்லாம் தமிழ் இண்டஸ்ட்ரியில ஹீரோயினுக்கு செட்டாக மாட்ட'; 'நீங்க ஹீரோயின் மெட்டீரியலே கிடையாதும்மா' என்று சில புரொடியூசர்கள் சொன்னார்கள். வெள்ளை நிற கதாநாயகிகளையே தொடர்ந்து பார்த்துவந்த அவர்களுக்கு நம் மண்ணுடைய நேட்டிவ் கலரில் இருக்கும் என்னை ஏற்றுக்கொள்வது கஷ்டமான விஷயம்தான்' என்பதை அவரே ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். பெண்களின் நிறம், பாடி ஷேப் போன்றவற்றைப் பற்றி மனம் திறக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

'' யெஸ், கறுப்பு நிறம் இன்னமும் நம்ம சொஸைட்டியில இரண்டாம்பட்சமாகத்தான் பார்க்கப்படுகிறது. ஆனா, நம்ம மண்ணோட நேட்டிவிட்டி நிறமே கறுப்புதான். நிறம் பத்தின நம் எண்ணங்களுடைய அடிப்படையே இங்கே தப்பா இருக்கு.ஏன்னா, நம்ம எல்லாரோட மனசையும் ஃபேர்னஸ் க்ரீம் விளம்பரங்கள்தான் ஆக்கிரமிச்சுட்டு இருக்கு. நானும் விதிவிலக்கு இல்ல கேர்ள்ஸ். காலேஜ் டேஸ்ல எல்லா கேர்ள்ஸைப்போல நானும் ஃபேர்னஸ் க்ரீம் போட்டு கலராக முயற்சி பண்ணியிருக்கேன். ஒரு மாசம் பளிச்சுன்னு இருப்பேன். மறுபடியும் என் கலர் திரும்ப வந்துடும். நான் சினிமாவுல நடிக்கணும்னு டிரை பண்ணினப்பகூட என் நிறத்தைத்தான் மைனஸா பலரும் பார்த்தாங்க. ஆனா, திறமை இருந்தா கலரெல்லாம் மேட்டரே கிடையாதுன்னு என் மனசுக்கு நான் புரிய வெச்சேன். பிறகு சொஸைட்டிக்குப் புரிய வைச்சேன். இதைத்தான் மத்த கேர்ள்ஸுக்கும் நான் சொல்வேன். கலர், பாடி ஷேப் பத்தியெல்லாம் கவலைப்படாதீங்க. திறமையை மட்டும் வளர்த்துக்கோங்க. ஆண்களுக்கும் ஒரு வார்த்தை, பொண்ணுங்களோட கலரைப் பார்க்காதீங்க.அவங்களோடதிறமையைப் பாருங்க'' என்றவர், சினிமா இண்டஸ்ட்ரியில் நிறம் எப்படிப் பார்க்கப்படுகிறது என்பதையும் மறக்காமல் குறிப்பிட்டார். 

'' கிராமத்துப் பொண்ணு கேரக்டருக்குக்கூட நேட்டிவிட்டி முகம் இல்லாம, நேட்டிவிட்டி கலர் இல்லாம நார்த் இண்டியன் ஹீரோயின்ஸை எதுக்கு புக் பண்றாங்கன்னே தெரியலை..! உலக அழகிகள்ல பலரும் சினிமாவுல நடிச்சிருக்காங்க. அதுல ஒரு சிலர்தானே ஷைனாகியிருக்காங்க. காரணம், எவ்ளோ அழகா இருந்தாலும், எவ்ளோ கலரா இருந்தாலும் அவங்க செய்கிற கேரக்டருக்கு நியாயம் செஞ்சிருந்தா அவங்க நிலைச்சு இருப்பாங்க. எக்கச்சக்க மேக்கப், கிளாமர்னு இல்லாம நல்லா நடிச்சாலே ரசிகர்கள் கண்ணுக்கு அழகா தெரிவேங்கிறதுதான் என்னோட பாலிசி'' என்று செம போல்டு ஸ்டேட்மென்ட் கொடுத்தவர், மறக்காமல் மகளிர் தின வாழ்த்துகளையும் சொன்னார். 

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சொல்லியிருப்பதைப்போல, 'பெண்களை வேறு எந்தெந்த வகைகளில் இந்தச் சமூகம் பார்க்கக் கூடாது' என்று நீங்கள் நினைப்பதை#AcceptTheWaySheIs என்ற ஹேஷ்டேக்குடன் பதிவுசெய்யுங்கள் தோழிகளே!