Published:Updated:

எனக்கு ஏகப்பட்ட முகம் இருக்கு!

எனக்கு ஏகப்பட்ட முகம் இருக்கு!
எனக்கு ஏகப்பட்ட முகம் இருக்கு!

எனக்கு ஏகப்பட்ட முகம் இருக்கு!

எனக்கு ஏகப்பட்ட முகம் இருக்கு!

ரேடியோ ஜாக்கி, நடிகர், இசையமைப்பாளர் என்று ‘தர்புகா’ சிவாவுக்குப் பல அடையாளங்கள் உண்டு.  இப்போது ‘தொடரி’ படத்தில் தனுஷுடன் நடித்துக்கொண்டிருப்பவடம் ஒரு ஜாலி அரட்டை.

‘‘ ‘தர்புகா’னா என்னனு மக்களுக்குக் கொஞ்சம் விவரமா சொன்னீங்கனா நல்லாருக்கும்...’’

‘‘ ‘தர்புகா’ங்கிறது அரேபிய நாட்டைச் சேர்ந்த ஓர் இசைக்கருவி. ஒருமுறை, ஒரு நிகழ்ச்சி அழைப்பிதழில் என் பெயரைப் போடும்போது ‘சிவாங்கிறது ரொம்ப வழக்கமான பெயரா இருக்கு. உனக்குப் பிடிச்ச இசைக்கருவியின் பெயரைச் சொல்லு. அதை உன் பெயரோடு அடைமொழியாய்ச் சேர்த்தால் கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்’னு என் நண்பன் சொன்னான். எனக்கு இந்த மாதிரிப் பெயருக்கு முன்னாடி அடைமொழி போடுறதெல்லாம் சுத்தமா பிடிக்காது. அப்படிப் பெயர் வெச்சுருக்கிறவங்களை நானே பலமுறை கலாய்ச்சுருக்கேன். இருந்தாலும், சரி இந்த ஒருமுறைதானேனு நினைச்சு எனக்குப் பிடிச்ச இசைக்கருவியான ‘தர்புகா’வை அடைமொழியாய் சேர்த்தேன். ஆனால், அந்தப் பெயர் என்கூடவே ஒட்டிக்கிச்சு. யாராவது ‘தர்புகா’னு கூப்பிட்டால்கூட இப்போதெல்லாம் திரும்பிப் பார்த்திடுறேன்.’’

‘‘ரேடியோ ஜாக்கி, இசை, நடிப்புனு பல வேலைகளில் இருக்கீங்க. குழப்பமா இல்லையா?’’

எனக்கு ஏகப்பட்ட முகம் இருக்கு!

‘‘எனக்கும் ஒரே வேலையைச் செஞ்சுட்டே இருந்தா அதில் இருக்கும் ஆர்வம் குறைஞ்சு, போர் அடிக்க ஆரம்பிச்சுடும். அதனால், எனக்கு ஒரு விஷயம் புதுசா பிடிக்க ஆரம்பிச்சுடுச்சுனா, உடனே அதைக் கத்துக்க ஆரம்பிச்சுடுவேன். அப்படித்தான் இந்த ஆர்.ஜே, இசை, நடிப்பு எல்லாமே. எதற்கும் நான் தனியாகப் பயிற்சி வகுப்புகள் போகலை, கொஞ்சம் கொஞ்சமா செய்து பார்த்து சூட்சுமத்தைக் கண்டுபிடிச்சுக் கத்துகிட்டதுதான். இப்படி, இது எல்லாமே எனக்குப் பிடிச்ச விஷயங்கள்தான் என்பதால் குழப்பமெல்லாம் ஏதும் இல்லை ப்ரோ.’’

‘‘ ‘ராஜதந்திரம்’ தவிர வேற எந்தப் படத்திலேயும் நடிக்க மாட்டேன்னு ஏதும் சத்தியம் பண்ணிருக்கீங்களா?’’

‘‘ஹா ஹா ஹா. அப்படியெல்லாம் இல்லை. ‘ராஜதந்திரம்’ படம் ரிலீஸ் ஆன பிறகு நிறைய வாய்ப்புகள் வந்துச்சு. நான்தான் ஏத்துக்கலை. எனக்குப் படத்தின் மெட்டீரியல் இன்ட்ரெஸ்டிங்கா இருக்கணும், இல்லைனா படத்தில் பணியாற்றும் ஆட்கள் ஃப்ரெண்ட்லியா இருக்கணும். ஒரு படத்தில் நடிக்கும்போது ‘ஏன்டா இந்தப் படத்தை ஒத்துகிட்டோம்?’னு நினைக்க வைக்காமல் இந்த ரெண்டு மாசம் முடியவே கூடாதுனு நினைக்க வைக்கிற படங்களில்தான் பணியாற்ற விரும்புவேன். ‘ராஜதந்திரம்’ படத்திற்குப் பிறகு அப்படியான ஒரு படத்திற்குதான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். அந்த நேரத்தில்தான் ‘தொடரி’ பட வாய்ப்பு வந்தது. தனுஷ், பிரபுசாலமன், கீர்த்தி சுரேஷ்னு பெரிய டீம், முழுக்க ரயிலிலேயே நடக்கும் கதை என ரொம்ப சுவாரஸ்யமா இருக்கவே இப்போது அந்தப் படத்தில் நடிச்சுட்டு இருக்கேன்.’’

‘‘தனுஷுடன் பணியாற்றிய அனுபவம்...’’

எனக்கு ஏகப்பட்ட முகம் இருக்கு!

‘‘ நான் அவரை முன்னாடி சந்திச்சது கிடையாது. ‘தொடரி’ ஷூட்டிங்கின் போதுதான் முதன்முதலில் சந்திச்சது. அவர் வேலை மேல ரொம்ப கவனமா, அக்கறையா இருப்பார். நடிக்கும்போது சின்னச் சின்ன டிப்ஸ் கொடுப்பார். ஷூட்டிங் இடைவேளைகளில் சுற்றி நடக்கும் விஷயங்களைப் பற்றி சும்மா ஜாலியா பேசிட்டு இருப்போம்.’’

‘‘படத்துக்கு இசையமைக்கிறீங்கனு கேள்விப்பட்டோம்...’’

‘‘ஆமாம் ப்ரோ, சசிகுமாரை வைத்து என் நண்பர் பிரசாத் முருகேசன் ஒரு படம் இயக்கப்போகிறார். அந்தப் படத்துக்கு நான்தான் மியூஸிக் பண்றேன். பிரசாத்தான் ‘ராஜதந்திரம்’ படத்திற்கு எக்ஸிகியூட்டிவ் புரொடியூஸர். அப்போ ஆரம்பிச்ச நட்பு அடிக்கடி இருவரும் மியூஸிக், ஸ்க்ரிப்ட், இளையராஜானு பல விஷயத்தையும் பற்றிப் பேசிட்டு இருப்போம். அவருக்கும் எனக்கும் ஒரே வேவ் லெங்த். திடீர்னு ஒரு நாள் ‘என் படத்துக்கு மியூஸிக் பண்றியா?’னு கேட்டார். நான் கொஞ்சம் தயங்கினேன். இருந்தாலும் அவர்தான் ‘உன்னால முடியும்’னு நம்பிக்கைக் கொடுத்தார். அவர் கொடுத்த நம்பிக்கையில்தான், இப்போ பண்ணிட்டு இருக்கேன் ப்ரோ’’

-ப.சூரியராஜ், படங்கள் : ர.வருண்பிரசாத்

அடுத்த கட்டுரைக்கு