அறிவிப்புகள்
Published:Updated:

கேபிள் கலாட்டா!

கேபிள் கலாட்டா!
பிரீமியம் ஸ்டோரி
News
கேபிள் கலாட்டா!

‘‘அழகிப் போட்டியில் ஸ்டேட் வின்னர்!’’

கேபிள் கலாட்டா!

ன் டி.வி ‘பிரியமானவள்’ சீரியலில் ‘கவிதா’ கேரக்டரில் அன்பான மருமகளாக ஸ்கோர் செய்து கலக்கி வருகிறார், நிரஞ்சனி.

‘‘நான் ப்ளஸ் டூ படிச்சப்போ எங்க ஸ்கூல்ல கல்ச்சுரல் டான்ஸ் ஆடினதைப் பார்த்த சிறப்பு விருந்தினர் நாசர் சார், ‘உங்க பொண்ணு சினிமாவுக்கு வந்தா நல்ல எதிர்காலம் இருக்கு’னு எங்கப்பாகிட்ட சொல்லிப் பாராட்டினார். ப்ளஸ் டூ முடிச்ச சமயம் சன் டி.வி ‘அழகி’ சீரியல் ஆடிஷன்ல தேர்வாகி, அதில் நடிக்க ஆரம்பிச்சேன். ஆனா, காலேஜ்ல பி.எஸ்ஸி., விஸ்காம் சேர்ந்தப்போ படிப்பில் கவனம் செலுத்த முடியாததால, நடிப்பை டிராப் செஞ்சுட்டேன். ஃபைனல் இயர் படிக்கும்போது,  ‘தென்னிந்திய அழகிப் போட்டி’யில கலந்துகிட்டு, செமி ஃபைனல்ஸ்ல தமிழ்நாடு ஸ்டேட் வின்னரா வந்தேன். எக்ஸாம் இருந்ததால ஃபைனல் போட்டியில கலந்துக்க முடியல. அப்புறம் சந்தானம் சாரோட ‘இனிமே இப்படித்தான்’ படத்தில் நடிக்கிற வாய்ப்பு. தொடர்ந்து ஜெயா டி.வி ‘அக்கா’ சீரியல்ல நடிச்சேன்.

ஒரு கட்டத்தில், ஜெட் ஏர்வேஸ்ல ஏர்ஹோஸ்டஸா தேர்வாகி வேலையில் சேர்ந்தேன். சன் டி.வி ‘பிரியமானவள்’ சீரியல் வாய்ப்பு கிடைக்க, ஏர்ஹோஸ்டஸ் வேலையை விட்டுட்டு ‘கவிதா’ ஆகிட்டேன். எங்க போனாலும் ‘உன்ன மாதிரி ஒரு மருமக எங்களுக்கு கிடைக்கணும்’னு பாசத்தைக் கொட்டுறாங்க மக்கள். கலைஞர் டி.வி ‘கண்ணம்மா’ சீரியலைத் தொடர்ந்து, சினிமா வாய்ப்புகளும் வந்துட்டு இருக்கு. லைஃப் நல்லாயிருக்கு!’’

எப்போ நிஜ மருமகளா ஆகப்போறீங்க நிரஞ்சனி?!

மீண்டும் லட்சுமி ராமகிருஷ்ணன்!

ஜீ தமிழ் சேனலின் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி மூலமாக பாப்புலரான லட்சுமி ராமகிருஷ்ணன், சிறிது காலம் அந்த ஷோவைவிட்டு விலகியிருந்தார். இப்போது... அவரின் கம்பேக்!

கேபிள் கலாட்டா!

‘‘ஏற்கெனவே, ‘சொல்வதெல்லாம் உண்மை’ 700 எபிசோடுகள் வரை செய்தேன். அப்புறம் சில காரணங்களால நான் ஷோவைவிட்டுப் போனப்போ, ரெண்டு மாசத்துல மக்கள் என்னை மறந்துடுவாங்கனு நினைச்சேன். ஆனா, இந்த இடைப்பட்ட காலத்துல உள்நாடு, வெளிநாடுனு நான் எங்க போனாலும், ‘நீங்க மறுபடியும் எப்போ ஷோவுக்கு வருவீங்க?’னுதான் எல்லாரும் கேட்பாங்க! பிச்சையெடுத்து தன் ரெண்டு பிள்ளைங்களையும் காப்பாத்திட்டு இருந்த ஒரு அம்மா, திடீர்னு நடக்கமுடியாத அளவுக்கு பல பிரச்னைகள் வந்த நிலையில, எங்க ஷோவுக்கு வந்திருந்தாங்க. சமீபத்தில் நான் ஒரு தனியார் பள்ளிக்கு சிறப்பு விருந்தினரா போயிருந்தப்போ, அந்த ரெண்டு பிள்ளைங்களும் அங்க என்னை வந்து பார்த்து, ‘உங்க நிகழ்ச்சியால எங்களுக்கு நிறைய உதவி கிடைச்சு, இப்போ இந்த ஸ்கூல்ல படிச்சுட்டு இருக்கோம்’னு நன்றி சொன்னாங்க. ஆனந்தக் கண்ணீரே வந்துருச்சு எனக்கு. இப்படி இந்த நிகழ்ச்சியின் தாக்கத்தையும், என் பங்களிப்பையும் இந்த இடைப்பட்ட காலத்தில் நான் உணர்ந்த தருணங்கள் பல. அதான், மறுபடியும் ஐயாம் பேக் டு த ஷோ!

‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியின் ஒவ்வொரு எபிசோடிலும் அதிகபட்சமா மூணு மணி நேரம் வரைக்கும் அந்தக் குடும்ப உறுப்பினர்கள்கிட்ட பிரச்னைகளை விசாரிச்சு, என் வாழ்க்கை அனுபவத்துல இருந்து நல்லதொரு முடிவை ஏற்படுத்திக் கொடுக்கிறேன். அவங்களுக்கு கொடுக்கிற கவுன்சலிங்

டி.வி-யில் ஒளிபரப்பாகும்போது, அதே பிரச்னையில் இருக்கிற பல குடும்பங்களுக்கும் மறைமுகமா தீர்வு சொல்லப்படுது. எங்க டீம், நிகழ்ச்சிக்கு வர்ற குடும்பங்களுக்கு சமூகத்திடம் இருந்து உதவி பெற்றுத் தர்றோம். பல சமூகப் பிரச்னைகளை வெளிப்படையா பேசற இந்தப் பொறுப்பை, நான் ரொம்ப விரும்பிச் செய்றேன்!’’

மேடம், நீங்க கலக்குங்க!

புதுப்பொண்ணு ஸ்ரீவித்யா!

சீரியல்களில் பிஸியாக இருக்கும் ஸ்ரீவித்யா, இப்போது திருமதி!

‘‘பி.சி.ஏ படிச்சுட்டு இருந்தப்போ, விஜய் டி.வி-யின் ‘கள்ளிக்காட்டுப் பள்ளிக்கூடம்’ சீரியல் ஆடிஷன்ல தேர்வானேன். ஒன்றரை வருஷம் காலேஜ்ல படிச்சுட்டே அதில் நடிச்சேன். காலேஜ் முடிச்சப்போ நிறைய சீரியல் வாய்ப்புகள் வர ஆரம்பிச்சது. சன் டி.வி ‘முந்தானை முடிச்சு’ சீரியல், எனக்கு நல்ல பேர் வாங்கிக்கொடுத்தது. ‘அழகி’, `இளவரசி'னு பத்துக்கும் மேற்பட்ட சீரியல்கள்ல நடிச்சுட்டேன். இப்போ ‘கல்யாணப் பரிசு’, ‘கைராசிக் குடும்பம்’, `நிழல்'னு மூணு சீரியல்களில் பிஸி.

கேபிள் கலாட்டா!

சீரியலுக்கு நடுவுல ‘ஜே.கே என்னும் நண்பனின் வாழ்க்கை’, ‘சில்லுனு ஒரு சந்திப்பு’, ‘மருத வேலு’னு மூணு படங்களில் நடிச்சேன். ‘கந்தசாமி’, `காவலன்', ‘சுறா’ போன்ற படங்கள்ல அசோஸியேட் ஒளிப்பதிவாளரா வொர்க் பண்ணின அர்ஜுனன் கார்த்திக், நான் நடிச்ச ஒரு படத்தில் வேலை பார்த்தார். ரெண்டு பேரும் அறிமுகமாகி, காதலர்கள் ஆனோம். ஆறு வருஷக் காதல். ரெண்டு மாசம் முன்னாடிதான் பெரியவங்க ஆசீர்வாதத்தோட கல்யாணம் முடிஞ்சது. இப்ப அவர் ஒரு படத்துக்கு ஒளிப்பதிவாளர் ஆகிட்டாரு. புதுப்பொண்ணுனாலும், நான் ஷூட்களுக்கு பிஸியா ஓடிட்டு இருக்கேன்!’’

ஹேப்பி மேரீட் லைஃப்!

‘‘நல்ல விஷயத்துக்கு பொய் சொன்னா தப்பில்ல!’’

‘‘ஒரு பொய் சொல்லித்தான் ஆங்கர் ரூட் பிடிச்சேன்’’ என்று சிரிக்கிறார் கேப்டன் டி.வி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ப்ரவீன் பின்டோ.

கேபிள் கலாட்டா!

‘‘மிடில் கிளாஸ் சென்னைப் பையன் நான். ஆங்கர் ஆசையில பலமுறை ராஜ் டி.வி-க்கு ரெஸ்யூம் கொடுக்கப் போவேன். செக்யூரிட்டி என் ரெஸ்யூமை வாங்கிட்டு, வாசலோடயே அனுப்பிடுவார். ஒருநாள், ‘ஹெச்.ஆர் என்னை வரச்சொன்னாங்க’ன்னு செக்யூரிட்டிகிட்ட பொய் சொல்லி, ஹெச்.ஆர் முன்னாடி போய் நின்னேன். ‘ஹூ ஆர் யூ?’ன்னாங்க. அவங்ககிட்ட நடந்ததைச் சொல்லி, வாய்ப்புக் கேட்டேன். அவங்க என்னை இன்டர்வியூ பண்ணிட்டு, அடுத்த நாள்ல இருந்து வேலைக்கு வரச் சொன்னாங்க. இதுதான் நான் ராஜ் டி.வி-யில் ஆங்கர் ஆன கதை.

காலேஜ்ல படிச்சுட்டே ராஜ், ராஜ் மியூசிக்ல ரெண்டரை வருஷம் வொர்க் பண்ணினேன். பி.காம் முடிச்சதும் கேப்டன் டி.வி-யில வாய்ப்பு கிடைச்சுது. இப்போ ‘இது நம்ம ஆளு’, நிகழ்ச்சி செலிப்ரிட்டி நேர்காணல்கள் பண்ணிட்டு இருக்கேன். இப்பவும் நான் ஸ்டூடன்ட் ஆங்கர்தான். பேட்ரிஷியன் காலேஜ்ல மாஸ்டர் ஆஃப் சோஷியல் வொர்க்ஸ் ஃபைனல் இயர் படிச்சுட்டு இருக்கேன். ஸோ, நல்ல விஷயத்துக்கு பொய் சொன்னா தப்பில்ல!’’

நோட் பண்ணுங்கப்பா!

ரிமோட் ரீட்டா , படங்கள்:ரா.வருண் பிரசாத்

வாசகிகள் விமர்சனம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:ரூ 150

`சபாஷ்' விளம்பரம்!

``சமீபத்தில் பொதிகை தொலைக்காட்சியில் ஒரு ஒளிபரப்பான விளம்பரம் அது. ஹோட்டலில் சாப்பிட வந்தவர்களை (குறிப்பாக கைகளை) சர்வர் உற்றுப்பார்க்கிறார். ஆத்திரம் அடைந்த கஸ்டமர், மானேஜரைக் கூப்பிடுமாறு சத்தமிட்டு, மானேஜரும் வந்து கேட்கிறார். 'இன்று தேர்தல் நாள், ஓட்டுப்போட்ட மை அடையாளம் இருக்கிறதா என பார்த்தேன். தயவுசெய்து ஓட்டுச் சாவடி சென்று தங்கள் வாக்குகளை தவறாமல் செலுத்துங்கள்'  என்று சர்வர் பொறுமையாக பதில் கூறுகிறார். அருமையான, இரைச்சல் இல்லாத விளம்பரம்... சபாஷ்!'' என்று உற்சாகம் பொங்க கூறுகிறார், சென்னையில் இருந்து சீனு.சந்திரா.

டீசன்ஸி ப்ளீஸ்!

``ஜீ தமிழில் வரும் `ஆஹா மாமியார்... ஓஹோ மருமகள்' நிகழ்ச்சியில் சமீபத்தில் ஒளிபரப்பப்பட்ட ஒரு எபிசோடில் அதை நடத்தும் காம்ப்யர் பெண் செய்த அட்டகாசம் அருவருப்பாக இருந்தது. குடும்பத்துடன் பலரும் பார்க்கும் நிகழ்ச்சியில் கண்ணியம் காக்க வேண்டாமா?!'' என்று குமுறுகிறார் திருநெல்வேலியில் இருந்து ஆர்.ஜெயலெட்சுமி.

`மறக்கப்பட்ட மனிதர்கள்'... மணியான நிகழ்ச்சி!

``தந்தி டி.வி-யில் ஞாயிறு தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் 'மறக்கப்பட்ட மனிதர்கள்' தொடரில், பழங்குடி மக்களின் கலாசாரம், பழக்க வழக்கங்களை அழகாக விவரித்து கூறுகின்றனர். அவர்கள் வசிக்கும் மலைப்பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று இயற்கையான மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அழகையும், பழங்குடி மக்களையும் நமக்குப் படம் பிடித்துக்காட்டுவது... அற்புதம்! `பழங்குடி மக்கள் எப்படி உள்ளனர்? என்பதை இன்றைய தலைமுறையினருக்கு தத்ரூபமாக விளக்கும் உன்னத நிகழ்ச்சியாக இது விளங்குகிறது'' என்று மனமார பாராட்டுகிறார் சென்னையில் இருந்து சந்திரகலா.