

திருச்சி : டி.டி.எச்.ல் வெளியிடும் எந்த ஒரு திரைப்படத்தையும் திரையரங்கில் திரையிடுவதில்லை என திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது.
கூட்ட முடிவுக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர்கள், "தமிழகத்தில் 2500 திரையரங்குகள் இருந்தது. இப்போது 1200 திரையரங்குகள்தான் உள்ளது. இதுபோல டி.டி.எச்.ல் திரைபடங்களை ரிலீஸ் செய்தால் அனைத்து திரையரங்குகளையும், இழுத்து மூடும் நிலைதான் ஏற்படும், திரையரங்குகளை திருமண மண்டபமாகவோ,ஷாப்பிங் காம்ப்ளக்ஸாகவோ மாற்றும் நிலை ஏற்படும்.
டி.டி.எச்.ல் வெளியிடுவதால் திருட்டு விசிடியை தடுக்க முடியாது.வீட்டுக்கு வீடு திருட்டு விசிடி தயாரிக்கும் நிலை ஏற்படும்.தமிழகத்தில் 30 லட்சம் டி.டி.எச். பயன்பாட்டாளர்கள் உள்ளனர். ஒரு டி.வி.-யில் 10 பேர் படத்தை பார்த்தால் 3 கோடி பேர் பார்த்ததற்கு சமம்.
##~~## |