Published:Updated:

கேபிள் கலாட்டா!

கேபிள் கலாட்டா!
பிரீமியம் ஸ்டோரி
கேபிள் கலாட்டா!

கேபிள் கலாட்டா!

கேபிள் கலாட்டா!

கேபிள் கலாட்டா!

Published:Updated:
கேபிள் கலாட்டா!
பிரீமியம் ஸ்டோரி
கேபிள் கலாட்டா!
கேபிள் கலாட்டா!

"லவ் யூ கலா மாஸ்டர்"

லைஞர் டி.வி ‘மானாட மயிலாட’, விஜய் டி.வி ‘ஜோடி நம்பர் ஒன்’ என நடன நிகழ்ச்சிகளில் புயல் பெர்ஃபார்மன்ஸ் கொடுப்பவர் யாமினி.

‘‘எனக்கு சொந்த ஊர், பெங்களூரு. அப்பா, சித்தப்பானு கூட்டுக் குடும்பம். ரெண்டு வயசுல இருந்தே டான்ஸ் ஆட ஆரம்பிச்சுட்டேன்னு எங்க வீட்டுல சொல்வாங்க. சித்தப்பாவோட கல்யாணத்துல நான் விளையாட்டா ஆடினதுல இருந்து, அதுக்கு அப்புறம் எங்க வீட்டின் எல்லா விசேஷங்களிலும் என்னை ஆட வெச்சுட்டாங்க.

மூணு வருஷமா பரதம் கத்துக்கிறேன். ‘மானாட மயிலாட’ ஆடிஷனுக்கு, எங்க மாமாதான் எனக்கு நம்பிக்கை கொடுத்துக் கூட்டிட்டுப் போனார். செலக்ட் ஆனேன். கலா மாஸ்டர், தன்னைச் சுத்தி இருக்கிறவங்க நல்லா இருக்கணும்னு நினைக்கிறவங்க. ஏதோ எனக்குப் பிடிச்ச ஸ்டைல்ல ஒரு வரைமுறையே இல்லாம ஆடிட்டு இருந்த என்னை, டான்ஸ்னா இப்படித்தான் இருக்கணும்னு ட்யூன் செஞ்சது அவங்கதான். லவ் யூ மேம்.

ஒரு செலிப்ரிட்டி வெளிச்சம் எனக்குத் தந்தது, விஜய் டி.வி. நான் சைக்காலஜி படிச்ச பொண்ணு. அதனால, எப்பவும் நம்ம பேச்சை கேட்கிறவங்க ளுக்குப் போரடிக்கிறதுக்குள்ள நிறுத்திக்கணும் என்பது எனக்குத் தெரியும். ஸோ, பை!’’

பட், நீங்க ஆடினா நாங்க பார்த்துட்டே இருப்போம்!

கிம்... ஜம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கேபிள் கலாட்டா!

புது யுகம் சேனலில் கொரியன் சீரியல்கள் பிரபலம். ‘மை லவ் ஃப்ரம் தி ஸ்டார்’ சீரியலின் நாயகன் கிம் சூ ஹ்யூனுக்கு, ரசிகைகள் எக்கச்சக்கம். தென் கொரியாவின் சியோலில் பிறந்தவர் கிம். அவரின் சிறு வயதிலேயே அவர் அப்பா வீட்டை விட்டு வெளியேறியதால், கிம்மின் குடும்பப் பொறுப்புகள் அப்போதே ஆரம்பித்துவிட்டன. மிகவும் கூச்ச சுபாவ பார்ட்டி. அதைக் களைவதற்காகவே அவர் அம்மா அவரை நடிப்புப் பயிற்சி வகுப்புக்கு அனுப்பினார். அவர் மீடியாவுக்குள் வந்ததில், ‘நீயா?!’ என்று நண்பர்கள், உறவினர்கள் என்று அவர் சுற்றம் அத்தனையும் ஆச்சர்யப்பட்டுப் போனது. 9 வருடங்களுக்கு முன் நடிக்க வந்த கிம், இப்போது கொரியாவில் டாப் சேனல் நடிகர். 20-க்கும் மேற்பட்ட டி.வி விருதுகளைப் பெற்றிருக்கிறார். திரைப்படங்களிலும் ஹீரோவாக நடித்துவருகிறார். பாடகரான கிம், பல இசை ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார்!

கிம்... ஜம்!

ஹுலு... ஹேப்பி நியூஸ்!

கேபிள் கலாட்டா!

ஹுலு (Hulu) என்னும் மொபைல் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன், ஆங்கில சேனல்களின் நிகழ்ச்சிகளைத் தொகுத்து, அவற்றை எப்போது வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளும் வசதியைக் கொடுத்துவருகிறது. அந்நிகழ்ச்சிகள் டி.வி-யில் ஒளிபரப்பானபோது தவறவிட்டவர்களுக்கான பயன்பாடாக இது இருந்து வந்தது. இப்போது வால்ட் டிஸ்னி, ஃபாக்ஸ் சேனல் ஃபாக்ஸ் நியூஸ், ஏபிசி உள்ளிட்ட சேனல்கள் ஹுலுவுடன் இணைந்து லைவ் டி.வி சேவைகளையும் உருவாக்க உள்ளன. அதாவது, நீங்கள் விரும்பும் நிகழ்ச்சியை அது ஒளிபரப்பாகும் வேளையிலேயே பார்க்கும் வாய்ப்பு வரப்போகிறது. சில முக்கிய நிகழ்ச்சிகளுக்கு மட்டும் ஒப்பந்தம் செய்துள்ள சேனல்கள் விரைவில் எல்லா நிகழ்ச்சிகள் மற்றும் எல்லா மொழிகளிலும்கூட கால்வைக்க இருக்கிறார்கள். மொபைல் மட்டுமல்ல, டெஸ்க்டாப்பிலும் இருக்கும் இடத்திலேயே டி.வி நிகழ்ச்சிகளை இந்த ஹுலு தளத்தில் பார்க்கலாம்.

ஆமா, தமிழ் சேனல் வருமா பாஸ்?!

‘‘ஆத்தா, நான் ஹீரோவாயிட்டேன்!”

கேபிள் கலாட்டா!

ஆதித்யா சேனல் ‘தல தளபதி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான `விஜே’... அஸார். இப்போது நடிகராக அடுத்த ஸ்டெப் எடுத்து வைத்திருக்கிறார்.

‘‘சேனலுக்கு வந்ததே சினிமாவுக்குள்ள போகணும் என்ற ஆசையிலதான். ஏற்கெனவே விக்ரமன் சார் படத்துல நாலு ஹீரோக்கள்ல ஒருத்தனா நடிச்சிருக்கேன். இப்போ ‘சாரல்’, ‘ஏண்டா தலையில எண்ணெய் வைக்கல’, ‘கடலைபோட ஒரு பொண்ணு வேணும்’னு மூணு படங்கள்ல நடிச்சுட்டு இருக்கேன். ‘சினிமாவுல நடிச்சுட்ட... இப்போவாச்சும் கல்யாணம் பண்ணிக்கோ’னு வீட்டுல கேட்கிறாங்க. ‘இப்போதான் சினிமாவில் கால் பதிச்சிருக்கேன். இன்னும் ஓட வேண்டிய தூரம் நிறைய இருக்கு’னு பதில் சொல்லிட்டு இருக்கேன். ஸோ, இப்போ நான் சின்சியர் பேச்சிலர்!’’

சீக்கிரம் பேச்சிலர் பார்ட்டி வைங்க பாஸ்!

ம்ருனல்... செம பிஸி!

கேபிள் கலாட்டா!

ம்ருனல் தாக்குர் (Mrunal Thakur)... பாலிமர் டி.வி-யின் `இரு மலர்கள்' சீரியலின் இரண்டாம் நாயகி. கிட்டத்தட்ட வில்லி ரோலில் ப்ரக்யாவுக்கு குடைச்சல் கொடுக்கும் கேரக்டர். நாக்பூர் பொண்ணு. 23 வயது. 2012-ல் `முஜ்சே குச் கெஹ்தி யெஹ் காமோஷியான்' சீரியல் மூலம் என்ட்ரி கொடுத்த ம்ருனல், தொடர்ந்து 7 சீரியல்கள், ஆறு படங்கள் என செம பிஸி. கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போதே சீரியலில் அறிமுகமானவர். கொஞ்சம் முன்கோபி. சமீபத்தில் ஒரு சின்ன மனஸ்தாபத்தால் `இரு மலர்கள்' சீரியலில் இருந்து வெளியேறவிருந்தார். பின்னர் சமாதானம் செய்து மீண்டும் அழைத்து வந்திருக்கிறார்கள்.

டேக் இட் ஈஸி!

ரிமோட் ரீட்டா

வாசகிகள் விமர்சனம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:ரூ 150

‘உணவே அமிர்தம்’... அற்புதமோ அற்புதம்!

``நியூஸ் 7 தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7.45 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘உணவே அமிர்தம்’ என்னும் சமையல் நிகழ்ச்சி அற்புதமாக இருக்கிறது. இஞ்சி, காய்ந்த திராட்சை துளசி... இன்னும் பலவித பொருட்களைக்கொண்டு சமைப்பது மட்டுமல்லாமல், அவற்றால் ஏற்படும் நன்மைகளும் சொல்கிறார் டாக்டர். இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மாலை 4.30-க்கு மறுஒளிப்பரப்பும் உண்டு’’ என்று மகிழ்வுடன் தெரிவிக்கிறார், கும்பகோணத்தில் இருந்து ஜி.விஜயலெட்சுமி.

பார்க்கவேண்டிய தொடர்!

``சன் டி.வி-யில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பப்படும்  `இ.எம்.ஐ - தவணைமுறை வாழ்க்கை’ தொடர் விறுவிறுப்பாக உள்ளது. மதன் - சுஜாதா குடும்பத்தில் மதன் செய்யும் காமெடி நன்றாக இருக்கிறது. கிஷோர் பள்ளியில் செய்யும் சுட்டித்தனம், ரோகிணியின் வாயாடித்தனம் ரசிக்கும்படியாக இருக்கிறது. மகேஷ், கோபாலுக்காக சக ஊழியர்களிடம் பணம் கலெக்ட் செய்வது மனதை நெருடுவதாக உள்ளது. மற்ற தொடர்களிலிருந்து வேறுபட்டிருக்கும் ``இ.எம்.ஐ’, குடும்பத்துடன் பார்க்கவேண்டிய தொடர்’’ என்று பாராட்டுகிறார், சென்னையில் இருந்து சுப்பலட்சுமி சந்திரமௌலி

இனிமையான பொழுதுபோக்கு!

‘ஜீ தமிழ் டி-வியில் ஒளிபரப்பாகும் `ஜீன்ஸ்’, `ஆஹா மாமியார்... ஓஹோ மருமகள்’, `அதிர்ஷ்டலக்ஷ்மி’ போன்ற நிகழ்ச்சிகள் அனைவரும் பார்க்கும்படியான இனிய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளாக இருக்கின்றன. `ஜீன்ஸ்’ நிகழ்ச்சியில் சிந்திக்கின்ற தன்மை, முகஜாடை வைத்து ஒன்றுபடுத்துவது, வேறுபாடுகளை கண்டறியும் முறை போன்றவை பார்வையாளர்களைக் கவருகின்றன. `அதிர்ஷ்டலக்ஷ்மி’ அள்ளித்தந்து சிரிக்க வைக்கிறாள். மாமியார், மருமகள், மகன்... இவர்களை ஒரே மேடையில், அதுவும் இந்தக் காலத்தில், நிற்கவைத்து, கேள்வி கேட்டு, அசத்தலான பதிலை வாங்குவது `ஆஹா மாமியார்... ஓஹோ மருமகள்’ நிகழ்ச்சியால் மட்டுமே சாத்தியம். தொடரட்டும் இனிய பொழுதுபோக்கு!’’ என வாழ்த்துகிறார் வேலூரில் இருந்து பத்மஜா ஜானகிராமன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism