Published:Updated:

" 'மெர்சல்' மீசை மாதிரியே 'விஜய் 62' தாடியும் விஜய்க்குப் பிடிக்கும்!" - ஹேர் ஸ்டைலிஸ்ட் தேவ்

" 'மெர்சல்' மீசை மாதிரியே 'விஜய் 62' தாடியும் விஜய்க்குப் பிடிக்கும்!" - ஹேர் ஸ்டைலிஸ்ட் தேவ்

" 'மெர்சல்' மீசை மாதிரியே 'விஜய் 62' தாடியும் விஜய்க்குப் பிடிக்கும்!" - ஹேர் ஸ்டைலிஸ்ட் தேவ்

" 'மெர்சல்' மீசை மாதிரியே 'விஜய் 62' தாடியும் விஜய்க்குப் பிடிக்கும்!" - ஹேர் ஸ்டைலிஸ்ட் தேவ்

" 'மெர்சல்' மீசை மாதிரியே 'விஜய் 62' தாடியும் விஜய்க்குப் பிடிக்கும்!" - ஹேர் ஸ்டைலிஸ்ட் தேவ்

Published:Updated:
" 'மெர்சல்' மீசை மாதிரியே 'விஜய் 62' தாடியும் விஜய்க்குப் பிடிக்கும்!" - ஹேர் ஸ்டைலிஸ்ட் தேவ்

காலம் மாற காட்சிகளும் மாறும் என்பதே நிதர்சனம். அதற்கேற்றவாறு நாம் புது ட்ரெண்டிற்குள் சென்றுவிடுவோம் அல்லது புது ட்ரெண்டையே உருவாக்குவோம். புது ட்ரெண்ட் உருவாகிறது என்றால் நிச்சயம் தலைமுடியில் இருந்துதான் ஆரம்பிக்கும். அதனை முன்கூட்டியே அறிந்து, அதற்குத் தன்னை மெறுகேற்றிக்கொள்வதே ஹேர் ட்ரெஸ்ஸர்களின் முதல் சாய்ஸ். அதுவும் படத்தில் ஒரு ஹீரோ புது லுக்கில் வந்தால், சிட்டி முதல் சிலுக்குவார்பட்டி வரை இருக்கும் இளைஞர்களின் முதல்வேலை, அதேமாதிரி ஹேர் கட் செய்வதுதான். அவ்வாறு பல ஹீரோக்களுக்கு வெவ்வேறு லுக் கொடுத்தவர், ஹேர் ஸ்டைலிஸ்ட் தேவ். அவருடன், ஒரு ஜாலி டாக். 
 

ஹேர் ட்ரெஸ்ஸிங்மேல இந்தளவு ஆர்வம் எப்படி வந்துச்சு?

"இது எங்களோட நாலாவது தலைமுறை. நான் காலேஜ் முடிச்சவுடனே இதுக்குள்ளே வந்தேன். ஆனா, நான் இது பண்றது எங்க அப்பாவுக்குப் பிடிக்கலை. ஆனா, நம்ம தொழிலையே ஏன் இன்னும் மெருகேத்தி சூப்பரா பண்ணக்கூடாதுனு கேட்டேன். காரணம், கமல் சாருக்கு ஹேர் ட்ரெஸ்ஸிங் பண்ண மும்பையில இருந்து ஒருத்தர் வந்து பண்ணிட்டு போவார்னு ஒரு கட்டுரை படிச்சிருக்கேன். இதைப்பத்தி சொல்லி அப்பாக்கிட்ட ஒரு வருடம் டைம் கேட்டு அந்த கோர்ஸ் படிச்சேன். அவரும் இதுல சக்சஸ் ஆகலைனா, படிக்கப் போயிடணும்னு சொல்லிட்டார். சினிமாக்காரங்களுக்கு யார் ஹேர் கட் பண்ணிவிடுவாங்கனு எனக்குள்ளே ஒரு கேள்வி இருந்துட்டே இருந்துச்சு. அதுதான், என்னை இவ்ளோ தூரம் கூட்டிட்டு வந்திருக்குன்னு நினைக்கிறேன்"    

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்களோட முதல் செலிபிரிட்டி வாடிக்கையாளர் யார்?

"தனுஷ் சார்தான். 'மயக்கம் என்ன' படத்துக்காக முதல்ல அவருக்கு ஹேர் ட்ரெஸ்ஸிங் பண்ணேன். அது அவருக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு. அதிலிருந்து தனுஷ் சாருக்கு எல்லாப் படத்துக்குமே நான்தான் பண்ணிட்டு இருக்கேன். 'மாரி' படத்துக்கான லுக் பெரிய அளவுல ரீச் ஆச்சு. அப்போ என்ன லுக் பண்ணலாம்னு எந்த ஐடியாவுமே இல்லை. மீசை கண்டிப்பா இருக்கணும்னு மட்டும்தான் சொன்னாங்க. சரினு ஹேர் கட் பண்ணி, சின்னதா தாடி வெச்சு அதுக்கு அமைப்பு கொடுத்து, அந்தக் கேரக்டருக்கான காஸ்ட்யூம்ஸ் போட்டுப் பார்த்தா... சான்ஸே இல்லை. அவ்ளோ ஸ்மார்ட்டா இருந்தார் தனுஷ் சார். அதைப் பார்த்துட்டு நாமதான் இதைப் பண்ணோமானு எனக்கே சந்தேகம். ஒருமுறை எட்டு லுக் பண்ணிக் காட்டுனேன். அதுல ரொம்பவே இம்ப்ரஸ் ஆகிட்டார் தனுஷ் சார்."

விஜய்க்கு 'மெர்சல்' படத்துல முறுக்கு மீசை வெச்சுவிட்ட அனுபவம்?

"சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடியே அட்லீ என் வாடிக்கையாளர். அவர்தான் போன் பண்ணி விஜய் சாருக்கு ஒரு லுக் பண்ணணும்னு கூப்பிட்டார். கிராமத்து லுக்னு மட்டும்தான் சொன்னாங்க. அப்புறம் அவர் முகத்துக்குத் தகுந்தமாதிரி மீசை வெச்சு ஷேப் பண்ணோம். படம் ரிலீஸாகி அந்த லுக்குக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது. விஜய் சார் கூப்பிட்டு 'அந்த மீசை வெச்சுவிட்டீங்களே... சூப்பரா இருந்துச்சு'னு பாராட்டினார். எனக்கு செம ஹாப்பி. 'விஜய் 62' படத்துக்கும் நான்தான் பண்ணேன். அந்த தாடி அவருக்கு சூப்பரா செட்டாகியிருக்கு." 

செலிபிரிட்டி வாடிக்கையாளர்கள், சாதாரண வாடிக்கையாளர்கள்னு பார்க்காம அப்பாயின்ட் ஆர்டர்லதான் ஹேர் ட்ரெஸ்ஸிங் பண்ணுவீங்களாமே?

"ஆமா. காரணம், இவங்க மூலமாதான் செலிபிரிட்டியை என்னால ரீச் பண்ண முடிஞ்சுது. அப்படி வர்ற வாடிக்கையாளர் செலிபிரிட்டியோட ஃப்ரெண்டா இருக்கலாம். அவங்களை நான் ஸ்மார்டா ஹேர் ட்ரெஸ்ஸிங் பண்ணி அனுப்பும்போது, அவங்க போய் என்னைப் பத்தி சொல்வாங்க.. அப்போதானே, எனக்குப் புது க்ளைன்ட்ஸ் கிடைப்பாங்க. என்னைப் பொறுத்தவரை, யாரையும் பிரிச்சுப் பார்க்கமாட்டேன்." 

'துருவ நட்சத்திரம்', 'சாமி 2' லுக் பற்றி...
'தில்லுக்கு துட்டு' படத்துல சந்தானத்துக்கு புது லுக்...
விராட் கோலி சென்னை வந்தா, உங்ககிட்டதான் ஹேர் ட்ரெஸ்ஸிங் பண்ணுவாராமே? 
கீர்த்தி சுரேஷ், மஞ்சிமா மோகன் மாதிரி ஹீரோயின்களுக்கும் ஹேர் ட்ரெஸ்ஸிங் பண்ற அனுபவம்? 
யாருக்கு ஹேர் ட்ரெஸ்ஸிங் பண்ணணும்னு ரொம்ப ஆசை? 

ஹேர் ட்ரெஸ்ஸிங் பண்ணபிறகு,  செலிபிரிட்டீஸோட ரியாக்‌ஷன் எப்படி இருக்கும்? 

இது போன்ற பல கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதில் அளித்திருக்கிறார், ஹேர் ஸ்டைலிஸ்ட் தேவ். அதனை இந்த வீடியோ இணைப்பில் பார்க்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism